Google Adsense Code

ALIEN X Origin பற்றி தமிழில் ( Ben 10 Alien - 15 )

 ஹாய் மக்கள்ஸ்

 இதுவரைக்கும் நம்ம Blogல பென்னோட நிறைய Unseen Aliens பத்தி பார்த்துட்டு இருக்கோம் ஆனா இன்னைக்கு நாம பாக்கபோற ஏலியன் நம்ம எல்லாருக்கும் ரொம்பவே தெரிஞ்ச ஏலியனான ஏலியன் X பத்தி இதுவரைக்கும் தெரியாத எல்லா தகவல்களையும் மொத்தமா பார்க்க போறோம் இதுமாதிரி எந்த ஏலியன பத்தி பேசலாம்ன்னு கமெண்ட் பண்ணுங்க இப்போ வாங்க ஏலியன் X பத்தி பார்க்கலாம்

உருவான கதை : 

நம்ம ஏலியன் Xன் இனத்தோட பேரு செலஸ்டியல் சேபியன் ( Celestial Sapien ) இந்த ஏலியன்கள் வாழ்ந்துட்டு இருக்குற இடத்தோட பேரு  ஃபோர்ஜ் ஆஃப் கிரியேஷன் ( Forge Of Creation ) இந்த இடம் நம்ம வாழுற பிரபஞ்சத்தையெல்லாம் தாண்டி இருக்குற செலஸ்டியல் சேபியன்ங்கள் மட்டுமே வாழக்கூடிய இடம் 

இந்த இடத்துக்குள்ள போகுறது அவ்ளோ ஈஸியான விஷயம் இல்ல ஏன்னா இந்த இடத்துக்கு செலஸ்டியல் சேபியன்ஸ் மட்டும்தான் நுழையுற அளவுக்கு சக்திவாய்ந்தவங்களா இருக்காங்க அதோட இன்னும் சில கதாபாத்திரங்களால மட்டும்தான் நுழைய முடியும் உதாரணத்துக்கு ப்ரபோஸர் பாரடாக்ஸ் ( Professor Paradox ) மாதிரியான ஆளுங்களால மட்டும் தான் உள்ள போக முடியும்

அப்படியும் வேற யாராவது உள்ள நுழையனும்னா மேப் ஆஃப் இன்ஃபினிட்டி ( Map Of Infinity )ங்குற ரொம்பவே சக்தி வாய்ந்த சாவி மாதிரியான டிவைஸ்ஸ யூஸ் பண்ணினா மட்டும்தான் இந்த ஃபோர்ஜ் ஆஃப் கிரியேஷன்க்குள்ள போக முடியும் 

அதோட இந்த மேப் ஆஃப் இன்ஃபினிட்டிய உருவாக்குனது ப்ரபோஸர் பாரடாக்ஸ் தான் இந்த மேப் ஆஃப் இன்ஃபினிட்டிய வச்சிதான் ஆக்ரகார் ( Aggregor ) இந்த ஃபோர்ஜ் ஆஃப் கிரியேஷன்க்குள்ள வந்திருப்பாரு ஆனா இந்த மேப் ஆஃப் இன்ஃபினிட்டிய பல இடங்கள்ள ப்ரோபஸர் பாரடாக்ஸ் மறைச்சி வச்சிருப்பாரு இதை கண்டுபிடிக்குறது ரொம்பவே கஷ்டமாவும் இருக்கும்

இந்த ஃபோர்ஜ் ஆஃப் கிரியேஷன்க்குள்ள Space And Time வேலை செய்யாது அதனால நம்ம அதுக்குள்ள நுழைஞ்சிட்ட நமக்கும் வயசும் ஆகாது பசிக்கவும் செய்யாது அதனாலதான் இந்த இடத்துக்குள்ள போகுறது ரொம்பவே கஷ்டமான விஷயமா இருக்கு

செரினா மற்றும் பெலிகஸ் : 

எல்லா செலஸ்டியல் சேபியன்ஸ்களுக்குள்ளும் செரினா மற்றும் பெலிகஸ்ங்குற ( Serena And Bellicus ) இரண்டு விதமான மனநிலைகள் இருக்கும் இதுல செரினா அன்பு மற்றும் பொறுமையோட மனநிலையோட இருப்பாங்க ஆனா பெலிகஸ் கோபம்,வெறுப்பு,சக்தியோட மனநிலையோட இருப்பாங்க

இந்த மாறுபட்ட மனநிலைகள் இவங்களுக்கு இருக்குறதால செரினாவுக்கும் பெலிகஸ்க்கும் எப்பவும் எதாச்சும் ஒரு வாக்குவாதம் இல்லன்னா சண்டை நடந்துட்டே இந்த ஒரு பலவீனத்தாலதான் செலஸ்டியல் சேபியன்ஸ்கள் தங்களோட முழுசக்தியையும் எப்பவுமே யூஸ் பண்ணிக்க முடியுறது இல்ல

ஆனா இந்த இரண்டு மனநிலைகளையும் கட்டுபடுத்தி சில செலஸ்டியல் சேபியன்ஸ்கள் மட்டும் தான் சுதந்திரமா யுஸ் பண்ணிக்க முடியும் அதுல முக்கியமானவங்க கேலக்டிக் கிளாடியேட்டர் ( Galactic Gladiator ) ஸ்டார் பியர்ட் ( Star Beard ) இவங்க ரெண்டு பேர் மட்டும்தான் இதுவரைக்கும் செலினா பெலிகஸ்ஸ கண்ட்ரோல் பண்ணி தன்னோட சக்திகளை உபயோகிக்குறவங்க அதோட பென்னும் ஏலியன் எக்ஸோட சக்திய சில நேரங்களில கட்டுபடுத்திருப்பாரு 

ஆனா பென் கட்டுப்படுத்துறதுக்கும் ஸ்டார் பியர்ட் இல்லன்னா கேலக்டிக் கிளாடியேட்டர் கட்டுப்படுத்துறதுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு ஏன்னா பென் ஆம்னிட்ரிக்ஸ ( OMNITRIX ) யூஸ் பண்ணிதான் ஏலியன் எக்ஸா மாறுறாரு அவருக்கு பென்னோட நினைவுகள் இருக்கும் அதனால பென் கட்டுப்படுத்தும் போது ஏலியன் எக்ஸோட சக்திகளை முழுசா பயன்படுத்த முடியும் 

ஆனா கேலாக்டிக் கிளாடியேட்டரோ இல்லன்னா ஸ்டார் பியர்டோ அப்படி கிடையாது ஏன்னா இவங்கெல்லாம் பிறக்கும் போதே செல்ஸ்டியல் சேபியனா பிறக்குறாங்க அதனால அவங்க சக்திகளை செரினா பெலிகஸ்ஸ தாண்டி உபயோகிக்குறது கொஞ்சம் கஷ்டமான விஷயம் அதோட முழு சக்தியையும் யூஸ் பண்ணிக்குறதும் கஷ்டம்தான் 

ஏலியன் எக்ஸ் பற்றிய உண்மைகள் :

இந்த ஏலியன் எக்ஸ் கதாபாத்திரம் இதுவரைக்கும் பென் டென் சீரிஸ்ல பென் யூஸ் பண்ணினதுலயே ரொம்பவே சக்தி வாய்ந்த கதாபாத்திரம் ஆனா இதவிட இன்னும் சக்திவாய்ந்த ஏலியன்கள் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல இருக்குன்னு பென் டென்ன உருவாக்கினவங்க கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க 

ஆனா இதுவரைக்கும் அப்படிபட்ட எந்த ஏலியனையும் பென் யூஸ் பண்ணாததால இந்த ஏலியன் எக்ஸ் தான் இப்போதைக்கு முதல் இடத்துல இருக்கு இந்த ஏலியனை முதல் தடவையா பென் டென் ஏலியன் ஃபோர்ஸ் ( Ben 10 Alien Force ) சீரிஸ்லதான் காட்டி இருப்பாங்க அப்பவே இந்த ஏலியன் தன்னோட பவர வச்சி டைம்ம ரிவர்ஸ் பண்ணிருக்கும் அப்போலேர்ந்து பென் டென் ஆம்னிவெர்ஸ் ( Ben 10 Omniverse ) சீரிஸ் வரைக்கும் இந்த ஏலியன்ன சில இடங்களில் மட்டும்தான் பென் யூஸ் பண்ணிருக்காரு

ஏன்ன ஏற்கனவே சொன்ன மாதிரி செரினா பெலிகஸ் மனநிலைகள் பென் இந்த ஏலியனா மாறும் போது அவர தன்னோட சக்திகளை யூஸ் பண்ண விடாம தடுத்து சிலை மாதிரி நிற்க வச்சிரும் அதனால பென் இந்த ஏலியனை அடிக்கடி உபயோகிச்சிருக்க மாட்டாரு

அதோட இந்த ஏலியனா மட்டும் பென் அடிக்கடி உருமாறி இருந்தா எந்த ஒரு வில்லனையும் அசால்ட்டா தோற்கடிச்சிட முடியும் ஏன்னா இந்த ஏலியன் Nigh Omnipotent லெவல்ல இருக்குற ஏலியன் அதனாலதான் இந்த ஏலியன அடிக்கடி நம்மளால பார்க்க முடியல

ஏலியன் எக்ஸ் எப்படி ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள வந்துச்சு ?

( தியரி ஒன்று ப்ரோபஸர் பாரடாக்ஸ் )

இந்த ஏலியன் எக்ஸ் டிஎன்ஏ ( DNA ) எப்படி ஆஸ்மித் ( Azmuth ) க்கு கிடைச்சிதுன்னு  எந்த Official Statementம் இப்போ வரைக்கும் கொடுக்கப்படல ஆனா இந்த பென் டென் சீரிஸ்ல வேலை செஞ்ச சிலபேர் ஏலியன் எக்ஸ் டிஎன்ஏ எப்படி ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள வந்துச்சுன்னு சில தகவல்களை கொடுத்திருக்காங்க

முதல்ல நம்ம ப்ரோபஸர் பாரடாக்ஸ் மூலமா ஏலியன் எக்ஸ் டிஎன்ஏ ஆஸ்மித்க்கு கிடைச்சிருக்கலாம்ன்னு ஒரு தியரி இருக்கு ஆனா இதுல பிரச்சினை என்னன்னா ப்ரோபஸர் பாரடாக்ஸ் நிறைய நேரங்கள்ல ஏலியன் எக்ஸ் இருக்குற இடத்துல இருக்க மாட்டாரு சொல்லபோன ஏலியன் எக்ஸ்க்கும் ப்ரோபஸர் பாரடாக்ஸ்க்கும் ஒரு ஒப்பந்தம் இருக்குறதா கூட பென் டென் சீரிஸ்ல விளக்கிருப்பாங்க

 அதுமட்டுமில்லாம செரினா பெலிகஸ் ப்ரோபஸர் பாரடாக்ஸ வெறுக்குற மாதிரியும் காட்டிருப்பாங்க அதனால இந்த தியரி பொய்ய இருக்கவும் வாய்ப்பு இருக்கு அதோட நேரத்தில ஏன் செரினா பெலிகஸ் ப்ரோபஸர் பாரடாக்ஸ வெறுக்குறாங்கன்னு சரி சொல்லிருக்க மாட்டாங்க 

இதுக்கு காரணம் ஒருவேளை ஏலியன் எக்ஸ் பென்னுக்கு எதிர்காலத்தில தேவைப்படலாம்ன்னு ப்ரோபஸர் பாரடாக்ஸ் ஏலியன் எக்ஸோட டிஎன்ஏவ திருடி கொண்டு வந்து ஆஸ்மித் கிட்ட கொடுத்திருக்கலாம் இதனால் கூட செரினா பெலிகஸ் ப்ரோபஸர் பாரடாக்ஸ வெறுக்குறாங்கன்னு காட்டிருக்கலாம்ன்னு பல பென் டென் ரசிகர்கள் நம்புறாங்க 

ஆனா இதுக்கு ஸ்ட்ராங்கான‌ எந்த ஆதாரமும் இல்லை சும்மா தியரியா மட்டும்தான் இருக்கு ஆனா இது முக்கால்வாசி பென் டென் ரசிகர்கள் ஏத்துகிட்ட தியரி கேக்கவும் ரொம்பவே சுவாரஸ்யமா இருக்குற தியரி

( தியரி இரண்டு : செலஸ்டியல் சேபியன்ஸ்)

பொதுவா செலஸ்டியல் சேபியன்ஸ்கள் ஃபோர்ஜ் ஆஃப் கிரியேஷன்க்குள்ள மட்டும் தான் இருப்பாங்க ஏன்னா அந்த இடத்தில இருந்து இந்த பிரபஞ்சத்தை கண்கானிக்குறதுதான் அவங்களோட முக்கியமான வேலையா பென் டென் சீரிஸ்ல காட்டப்பட்டிருக்கும் 

ஆனா ஏற்கனவே நாம பார்த்த ஸ்டார் பியர்ட் ,கேலக்டிக் கிளாடியேட்டர் மாதிரியான செலஸ்டியல் சேபியன்ஸ்கள் ஃபோர்ஜ் ஆஃப் கிரியேஷன்க்கு வெளியவும் வாழ்ந்துட்டு இருப்பாங்க அப்படிபட்ட ஒரு ஏலியன் எக்ஸோட டிஎன்ஏவ தான் ஆம்னிட்ரிக்ஸ்ல ஆஸ்மித் சேர்த்திருக்குறதா ஒரு தியரி இருக்கு

இந்த தியரியும் அதிக பென் டென் ரசிகர்களால் நம்பபடுற தியரி ஏன்னா ஏற்கனவே நாம நிறைய ஏலியன் எக்ஸ் கதாபாத்திரங்கள பாத்திருக்கோம் அதனாலதான் இந்த தியரியையும் பல பேர் நம்புறாங்க ஆனா இதவிட ப்ரபோஸர் பாரடாக்ஸ் தியரிக்குதான் அதிகப்படியான சப்போர்ட் இருக்கு

( தியரி மூன்று ஆஸ்மித் )

இதுவரைக்கும் நாம பார்த்த தியரிகள்ள இந்த தியரியதான் பலபேர் கிண்டலடிச்சிருக்காங்க அது என்னன்னா ஆஸ்மித் சொந்தமாவே ஏலியன் எக்ஸோட டிஎன்ஏவ ஆம்னிட்ரிக்ஸ்ல சேர்த்தாருங்குறதுதான் இந்த தியரி என்ன சொல்லாதுன்னா ஏற்கனவே டேகன் ( Daegon ) ங்குற பயங்கரமான சக்திவாய்ந்த வில்லன தோற்கடிக்க ஆஸ்மித் ஒரு வாள உருவாக்கிருக்காரு

அப்படி அந்த வாள வச்சிதான் ஜார்ஜ்ங்குறவரு அந்த டேகன டிராகன் உருவத்திலேயே தோற்கடிச்சிருப்பாரு அப்படி ஒரு வில்லன பார்த்ததுக்கு அப்புறம் ஆஸ்மித் இவன மாதிரியான வில்லன்களை தடுக்கதான் ஆம்னிட்ரிக்ஸ் டிசைன் பண்ணினதா இந்த தியரி சொல்லுது 

அதோட இந்த மாதிரியான சக்திவாய்ந்த வில்லன்களை தோற்கடிக்குற அளவுக்கு இருக்குற ஏலியன ஆஸ்மித் தேடும் போதுதான் ஃபோர்ஜ் ஆஃப் கிரியேஷன்க்குள்ள இருக்குற ஏலியன் எக்ஸ் பத்தி அவருக்கு தெரிய வந்து அந்த ஏலியன்களோட டிஎன்ஏவ ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள செலுத்துனதா இந்த தியரி முடியுது

இந்த தியரியும் கேட்க சுவாரஸ்யமாதான் இருக்கு ஆனா பல பென் டென் ரசிகர்களுக்கு இந்த தியரிய அவ்ளோவா பிடிக்கல அதனாலதான் இந்த தியரியை கண்டபடி கிண்டலடிச்சி நிறைய மீம்ஸ் கூட உருவாக்கிருந்தாங்க

உருவ அமைப்பு :

 இந்த ஏலியன் எக்ஸோட உருவம் பாக்குறதுக்கு  Space மாதிரி வெறுமையா இருக்கும் அதாவது இரவு நேரத்தில வானத்த பார்த்த எப்படி கருப்பா நட்சத்திரங்களோட இருக்குமோ அந்த மாதிரியான உருவத்தில இருக்கும் அதோட இந்த மாதிரியான உருவம் ஏலியன் எக்ஸ்க்கு வந்ததுக்கு ஒரு காரணமும் இருக்கு 

முதன்முதல்ல இந்த ஏலியன பென்னுக்கு கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணினப்போ இந்த ஏலியன ஒரு கடவுள் மாதிரி காட்டலாம்னு முடிவு பண்ணிருந்தாங்க அதனாலதான் ஏலியன் எக்ஸோட உருவம் பிரபஞ்சம் மாதிரி இருக்கும் ஆனா இந்த ஐடியாவ சீக்கிரமே கைவிட்டுடாங்க அதுக்கு காரணம் பென் டென் சீரிஸ் ஒரு தங்க முட்டை இடுற வாத்து மாதிரி அத ஒரு சின்ன இடத்துக்குள்ள அடைக்காம ஏலியன் எக்ஸ் மாதிரி இன்னும் சக்திவாய்ந்த நிறைய ஏலியன்களை பென் டென் யுனிவர்சஸ்ல கொண்டு வந்தா பென் டென் கதைகள இன்னும் சுவாரசியமா கொண்டு போகலாம்ன்னுதான் அந்த ஐடியாவ மொத்தமா மாத்திட்டாங்க

இதே காரணத்தாலதான் ஏலியன் எக்ஸ்ஸை தோற்கடிக்குற அளவுக்கு சக்தியோட இன்னும் மூன்று ஏலியன்ஸ் ஆம்னிட்ரிக்ஸ்ல இருக்குன்னு சொன்னாங்க அதுல ஒரு ஏலியன் நல்ஜியன்ஸா ( Naljians ) கூட இருக்கலாம்ன்னு சொல்லிருக்காங்க

ஏன்னா நல்ஜியன்ஸ் ரொம்பவே அட்வான்ஸான தொழில்நுட்பங்கள உபயோகிக்குறதா ஏற்கனவே பென் டென் சீரிஸ்ல காட்டி இருக்காங்க அதனாலதன அவங்ககூட ஏலியன் எக்ஸ தோற்கடிக்குற லிஸ்ட்ல இருக்கலாம் 

ஏலியன் Xன் சக்திகள் :

இந்த ஏலியன் எக்ஸ் Nigh Omnipotent சக்தி உடைய ஏலியன் இதனால இதுக்கு எக்கச்சக்கமான சக்திகள் இருக்கும் அதாவது எல்லா விதமான சக்திகளும் இந்த ஏலியனுக்கு இருக்குன்னு கூட சொல்லலாம் ஏன்னா நை ஆம்னிபொடன்ட்க்கு அதுதான் அர்த்தம் 

இத புரியுற மாதிரி சிம்பிளா சொல்லனும்னா இந்த சக்தி இருக்குற கதாபாத்திரங்கள் நினைச்சா நெருப்ப உருவாக்க முடியும் தண்ணீர உருவாக்க முடியும் ஐஸ்ஸ உருவாக்க முடியும் காலத்தை நிறுத்த முடியும் புயல் வேகத்துல ஓட முடியும் தன்னோட உருவத்தை பெருசாக்கிக்க முடியும் சிறுசாக்கிகவும் முடியும் யார் கண்ணுக்கும் தெரியாம மறைஞ்சி போகவும் முடியும்

அதோட இந்த ஏலியன் எக்ஸால தன்ன மாதிரியே நிறைய க்ளோன்கள ( Clones ) உருவாக்க முடியும் இந்த பவர வச்சி தான் கேலக்டிக் கிளாடியேட்டர பென் தோற்கடிச்சிருப்பாரு இந்த மாதிரி எக்கச்சக்கமான சக்திகள் ஏலியன் எக்ஸ்கிட்ட இருக்கு ஆனா அதையெல்லாம் யூஸ் பண்ண செரினா பெலிகஸ் அனுமதி வேணும் அது எவ்ளோ கஷ்டம்ன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்

ஏலியன் Xன் பலவீனங்கள் : 

இந்த ஏலியன் எக்ஸ்க்கு நிறைய பலவீனங்கள் இருக்கு அதுல முக்கியமானது செரினா பெலிகஸ் மனநிலைகள் தான் அடுத்து ஒரு செலஸ்டியல் சேபியன இன்னொரு செல்ஸ்டியல் சேபியனால தோற்கடிக்க முடியும் இது ஏலியன் எக்ஸோட முக்கியமான இன்னொரு பலவீனம்

அதோட இன்னும் சில ஏலியன்களால ஏலியன் எக்ஸ தோற்கடிக்க முடியும் அதுல கோஸ்ட் ஃப்ரீக் ( Ghost Freak ) ரொம்பவே முக்கியமான ஏலியன் ஏன்னா கோஸ்ட் ஃப்ரீக் நினைச்சா யாரோட உடம்பையும் கட்டுபடுத்த முடியும் அதனால அந்த பவர வச்சி ஏலியன் எக்ஸையும் கோஸ்ட் ஃப்ரீக் தோற்கடிச்சிரும் ஆனா அதோட சக்திய முழுசா உபயோகிக்க முடியுமான்னு தெளிவா சொல்லப்படல

அடுத்து பெஸ்கி டெஸ்க் ( Pesky Desk ) இந்த ஏலியன் நினைச்சா ஏலியன் எக்ஸ தூங்க வைக்க முடியும்ன்னு பென் டென் சீரிஸ்ல வேலை செஞ்ச சிலபேர் சொல்லிருக்காங்க ஆனா Nigh Omnipotent லெவல்ல இருக்குற ஏலியன் ரொம்பவே சிம்பிளான ஏலியனான பெஸ்கி டெஸ்க் கிட்ட தோத்து போய்டும்ன்னு பென் டென் ரசிகர்கள் யாருமே ஏத்துக்கல ஆனா இதுவும் கேக்குறதுக்கு சுவாரஸ்யமாதான் இருக்கு

அவளோதான் மக்கள்ஸ் இதுதான் நம்ம ஏலியன் எக்ஸ் பத்தின முழு தகவல்கள் இந்த தகவல்கள் உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு நம்புறேன் இதே மாதிரி இன்னொரு பென் டென் ஏலியன பத்தி அடுத்த தடவை பார்க்கலாம் 

நன்றி மக்கள்ஸ்


Post a Comment

0 Comments

Close Menu