Google Adsense Code

Snakepit Origin பற்றி தமிழில் Snakepit உருவான கதை ( Ben 10 Aliens Part - 6 )

 


ஹாய் மக்கள்ஸ் 

இதுவரைக்கும் நம்ம Blogல பென்னோட 3 Unseen ஏலியன்ஸ் பத்தி பாத்தாச்சு இந்த Post ல Snakepit ங்குற 4 வது Unseen ஏலியன் பத்தி பார்க்கலாம்

உருவான கதை

இந்த ஸ்னேக்பிட் ( Snakepit ) ஏலியனோட உண்மையான இனத்தோட பேரு ரெஸ்ப்டோய்ஸோய்ட் ( Resptosoid ) அதோட இந்த இனத்த சேர்ந்த ஏலியன்ஸ் வாழ்ந்துட்டு இருக்குற கிரகத்தோட பேரு ரெஸ்ப்டோஸோ ( Resptoso ) இந்த கிரகமும் இதுல இருக்குற ஏலியன்ஸூம் நாம வாழுற பூமிலேர்ந்து ரொம்பவே தூரமா இருக்கும் அதனால இந்த ஏலியனோட டிஎன்ஏவ எதிர்கால பென் ஸ்னேக்பிட் ஏலியனோட கிரகத்துக்கே போய் எடுத்துட்டு வந்தாருன்னு சொல்லிருக்காங்க

இப்போ உங்களுக்கு ஒரே டவுட் வரலாம் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்க்கு டிஎன்ஏ கலெக்ட் பண்ற வேலைய ஆஸ்மித் உருவாக்குன பூச்சி மாதிரியான ரோபோட்ஸ்தான பண்ணும்னு ஆனா அதெல்லாம் பென் டென் ஏலியன் ஃபோர்ஸ் அப்புறம் பென் டென் அல்டிமேட் ஏலியன் அதோட பென் டென் ஆம்னிவெர்ஸ்ல காட்டிருப்பாங்க ஆனா நாம பேசிட்டு இருக்குறது பென் டென் கிளாசிக் சீரிஸ் பத்தி இந்த கிளாசிக் சீரிஸ்ல எதிர்கால பென் தனக்கு தேவையான ஏலியன்ஸோட டிஎன்ஏவ அவரேதான் தேடி கலெக்ட் பண்ணி தன்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல சேர்த்துக்குவாராம்

அதோட இதுக்கு முன்னாடி அதாவது பென்க்கு ஆம்னிட்ரிக்ஸ் கிடைக்குறது முன்னாடி ஆம்னிட்ரிக்ஸ்க்கு ஏலியன் டிஎன்ஏ கலெக்ட் பண்ற வேலைய பாத்துட்டு இருந்தது மையாக்ஸ்ங்குற ஆஸ்மித்தோட அஸ்ஸிஸ்டன்ட் ஆனா பென்க்கு ஆம்னிட்ரிக்ஸ் கிடைச்சதுக்கு அப்புறம் நம்ம பென்தான் ஏலியன்ஸ் டிஎன்ஏ கலெக்ட் பண்ற வேலைய பாத்துட்டு இருக்காரு உதாரணத்துக்கு நம்ம பென்வெல்ஃப்ங்குற வேர்வொல்ஃப் ஏலியன் ஸ்னார்ஓங்குற மம்மி ஏலியன் பென் ஸ்ட்ரைக்குங்குற ஃப்ராங்கன்ஸ்டைன் ஏலியன் எல்லாத்தையும் சொல்லலாம்

இந்த ஏலியன்ஸ் எல்லாருமே அனுர் சிஸ்டம்ங்குற இடத்தகலேர்ந்து வந்த ஏலியன் அதோட பேய் இல்லன்னா மான்ஸ்டர் மாதிரி இருக்கும் ஏலியன்ஸ் அதனாலதான் இந்த ஏலியன்ஸ பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல மையாக்ஸ் சேர்க்கவே இல்ல ஆனா அதுக்கப்புறம் பென்தான் இந்த ஏலியன்களோட டிஎன்ஏவ அதுங்க கூட சண்டை போடும் போது கலெக்ட் பண்ணிருப்பாரு அப்படி என்ன காரணத்துக்காக பென்னோட நிறைய இந்த அனுர் சிஸ்டத்துலேர்ந்து வந்த எந்தவொரு ஏலியனோட டிஎன்ஏவும் ஆம்னிட்ரிக்ஸ்ல இல்லங்குறதுக்கு ஒரு காரணம் இருக்கு கோஸ்ட் ஃப்ரீக்,பென் வொல்ஃப்,ஸ்னார்ஓ மம்மி,பென் ஸ்ட்ரைக் இந்த ஏலியன்ஸ் எல்லாருமே அனுர் சிஸ்டத்துலேர்ந்து வந்த ஏலியன்ஸ் தான்

அதோட இவங்க எல்லாரும் பேய் பூதம் மான்ஸ்டர் மாதிரி இருப்பாங்க ஒருவேளை இவங்க ஆம்னிட்ரிக்ஸ்ல இருந்தா அது யார் ஆம்னிட்ரிக்ஸ யூஸ் பண்றாங்களோ அவங்கள பாதிக்கும்ன்னுதான் இந்த ஏலியன்ஸ் டிஎன்ஏவ அவங்க சேர்க்கவே இதுக்கு நல்ல உதாரணம் தான் நம்ம கோஸ்ட் ஃப்ரீக் நம்ம எல்லாருக்குமே பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்லேர்ந்து தப்பிச்ச முதல் ஏலியனே இந்த கோஸ்ட் ஃப்ரீக் தான் அதோட பென்னுக்கு முக்கியமான வில்லனாவும் இந்த கோஸ்ட் ஃப்ரீக் மாறிடுச்சி இந்த மாதிரியான பிரச்சினைகள் வரக்கூடாதுன்னுதான் அனுர் சிஸ்டத்துல இருக்கும் ஏலியன்ஸ ஆம்னிட்ரிக்ஸ்ல சேர்க்காம இருந்தாங்க 

அப்புறம் எப்படி ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள கோஸ்ட் ஃப்ரீக் வந்துச்சுன்னு நீங்க கேட்கலாம் அதுக்கும் ஒரு கதை இருக்கு மையாக்ஸ்தான் முதல்ல ஆம்னிட்ரிக்ஸ்க்காக ஏலியன்ஸ் டிஎன்ஏவ சேகரிக்குற வேலைய பாத்தாங்கன்னு சொன்னேன்ல அப்படி அவங்க பவர்ஃபுல்லான ஏலியனோட டிஎன்ஏவ தேடிட்டு இருக்கும்போது ஒரு வைலட்வைன் அவங்க கண்ணுல பட்டுச்சு அப்போ அதோட டிஎன்ஏவ கலெக்ட் பண்ண மையாக்ஸ் முயற்சி பண்ணுனாங்க அப்போதான் கோஸ்ட் ஃப்ரீக்கும் ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள வந்துடுச்சு ஏன்னா அந்த வைல்ட்வைன் ஏலியனுக்குள்ளதான் கோஸ்ட் ஃப்ரீக் இருந்துச்சு அது எப்படின்னு உங்களுக்கே தெரியும் ஏன்னா கோஸ்ட் ஃப்ரீக்கோட முதல் பவரே அடுத்தவங்க பாடிக்குள்ள புகுந்து அவங்கள முழுசா கண்ட்ரோல் பண்றதுதான் இந்த கோஸ்ட் ஃப்ரீக்கால ஏலியன் எக்ஸ கூட கண்ட்ரோல் பண்ணிக்க முடியுமாம் இந்த காரணத்திற்காக தான் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல அனுர் சிஸ்டத்துலேர்ந்து வந்த ஏலியன்ஸ் இல்ல இப்போ நாம ஸ்னேக்பிட்கிட்டையே திரும்ப வருவோம் 

இந்த ஸ்னேக்பிட் ஏலியன் Ben 10000 ஆல் Ken க்கு கொடுக்கப்பட்ட 10 ஏலியன்ஸ்ல இந்த ஏலியனும் ஒன்னு இந்த ஏலியனுக்கு பெரிய அளவுல சக்தி இல்லாததால Ken க்கு இந்த ஏலியனை சுத்தமா பிடிக்காது சான்ட் பாக்ஸ் அப்புறம் ஷெல் ஹெட்ட பிடிக்காததுக்கும் இதுதான் காரணம் கிட்டத்தட்ட இந்த மூனு ஏலியன்களுமே தப்பிச்சி ஓடுறதுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஏலியன்ஸ்ன்னு சொல்லலாம் ஏன்னா இதுங்களோட முக்கிய சக்தியே எவ்ளோ பெரிய அட்டாக்கா இருந்தாலும் அதுலேர்ந்து தப்பிச்சி உயிர் வாழுறது மட்டும் தான் 

அதோட இந்த ஏலியனும் பென்‌டென் ரசிகர்கள் தொடர்ந்து இதோட Design பத்தி கேட்டதால 2020 ல Tom Perkins அவரோட ட்விட்டர் Accountல போஸ்ட் பண்ணின ஏலியன்தான் 

இதே மாதிரி Sand Box மற்றும் Shellhead ஏலியன் பத்தியும் Ben 10000 எபிசோட்ல சொல்லிருப்பாங்க அதனால அந்த ஏலியன்ஸோட Design ம் கேட்டுந்தாங்க அந்த Designs ம் இந்த ஏலியன் Design கூடவே Post பண்ணிருந்தாங்க

இந்த ஏலியனை Ken இதுவரைக்கும் 4 இடங்கள்ல Use பண்ணிருக்குறதா சில இடங்கள்ல குறிப்பிட்டு இருக்காங்க ஆனா அத நாம சீரிஸ்ல எங்கேயும் பாத்திருக்க முடியாது ஏன்னா அந்த கதை எல்லாம் Non - Canon ல Off Screen ல நடந்த கதைகள் 

அதெல்லாம் எதிர்காலத்தகல வரக்கூடிய பென்டென் சீரிஸ்ல நாம பாக்குறதுக்கு வாய்ப்புக்கள் இருக்குன்னு சொல்லிருக்காங்க அதோட இந்த ஏலியனை Ben 10 Reboot ல கொண்டுவர முயற்சி பண்ணிருக்காங்க

ஆனா அந்த சீரிஸ் முழுக்க முழுக்க Toys அ விக்குறதுக்காக உருவாக்க பட்ட சீரிஸ் அதனாலதான் அந்த சீரிஸோட Art Work ரொம்பவே குழந்தைதனமா காட்டிருப்பாங்க 

Stinkfly அ பட்டாம்பூச்சி மாதிரி காட்டினதுக்கும் இதுதான் காரணம் ஏன்னா குழந்தைகள் பட்டாம்பூச்சி மாதிரியான பொம்மைகளை வாங்குவாங்கன்னு தான் Stink Fly ஐ அவ்வளவு கேவலமா காட்டி இருக்காங்க 

ஸ்னேக்பிட் பற்றிய உண்மைகள் :

இந்த Snakepit ஏலியனோட உருவம் ஆமை ஓடு மாதிரி இருக்கும் அதுல மூன்று பாம்புகளோட தலைகள் இருக்குற மாதிரி இந்த Design அ உருவாக்கி இருப்பாங்க

இந்த Design அ உருவாக்க  நிறைய காமிக் கேரக்டர்ஸ் போகிமோன்ஸ் Mythology மிருகங்களோட உருவங்களை Inspirationஆ வச்சி இந்த ஏலியனை உருவாக்கி இருக்காங்க  இதுல சில முக்கியமான கேரக்டர்ஸ் ஹைட்ராங்குற கிரேக்க புராணகதைகள்ல வரக்கூடிய பல தலைகளை கொண்ட டிராகன் மாதிரியான பாம்பு ஹைட்ரா  அடுத்ததா கிங் கிடோரா ( King Ghidorah ) மாதிரியான மிருகங்களை சொல்லலாம் 

இதுல கிங் கிடோராவே ஹைட்ரா பாம்போட Inspiration ல தான் உருவாக்கப்பட்டிருக்கும் ஆனா 3 தலைகள் மட்டும் தான் கிங் கிடோராவுக்கு இருக்கும் ஹைட்ராவுக்கு பல 7 இல்லன்னா 9 தலைகள் அதுக்கும் மேல இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க அதனாலதான் கிங் கிடோராவ தனியா இங்க சொல்லிருக்கேன் இந்த கேரக்டர்ஸோட Inspiration இந்த ஏலியன பாக்கும் போது ஈஸியா புரிஞ்சிக்குற மாதிரி கொடுத்திருப்பாங்க 

இந்த Snakepit ன் உயரம் 7 அடி எடை 250 KG ( கரெக்ட்டா இதுதான் எடைன்னு சரியா சொல்லல ஆனா சீரிஸ்ல அப்படி தான் சொல்ல ப்ளான் பண்ணினதா தகவல்கள் இருக்கு )  இருக்குற ஏலியங்குறதால இதோட வேகம் ரொம்பவே கம்மியாதான் இருக்குமாம் 

இதோட வேகத்தை பத்தி Tom Perkins என்ன சொல்லிருக்காருன்னா பென் டென் யுனிவர்சஸ்ல இருக்குற ரொம்பவே Slow ஆன ஏலியன்ஸ்ல இந்த ஏலியன்க்கு இரண்டாவது இடமே கொடுக்கலாம் ன்னு சொல்லிருக்காரு ( முதல் இடம் Bob The Blop ங்குற ஏலியன் பிடிச்சிருக்கு இதுவும் பென்னோட Unseen ஏலியன் தான் இதபத்தி அடுத்த போஸ்ட்ல பாக்கலாம் )

இந்த ஏலியனுக்கு பாம்பு மாதிரியான தலைகள் இருந்தாலும் விஷம் சுத்தமா கிடையாதுன்னு சொல்லிருக்காங்க அதனால இந்த பாம்பு தலைகளை வச்சி யாரையாவது கடிச்சாலும் எந்த Use ம் கிடையாது 

Snakepit ன் சக்திகள் :

இந்த ஏலியனுக்கு இருக்குற முக்கியமான ஒரே சக்தி எதிரிகளை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் கல்லா மாத்த முடியும் அதுவும் குறிப்பிட்ட சில ஏலியன்களையும் மனுஷங்கள மட்டும் தான் மாத்தமுடியும் 

இந்த சக்திக்கு Medusa Vision ன்னு பேரு இந்த பேரு இந்த சக்திக்கு வந்ததுக்கு காரணம் கிரேக்க புராணகதைகள் படி MEDUSAங்குற அரக்கி கண்ண பார்த்த சிலை ஆகிருவாங்கங்குற கான்செப்ட்ட காப்பி அடிச்சி இந்த கேரக்கடரையும் உருவாக்கி இந்த சக்தியையும் கொடுத்து வச்சிருக்காங்க

இந்த ஏலியனோட ஓடு ரொம்பவே ஸ்ட்ராங்க இருக்கும்ங்குறதால இதை யாராலயும் உடைக்க முடியாது ஆனா இதால இந்த ஏலியனுக்கு எந்த Useம் இல்ல ஏன்னா இது ஆமை மாதிரி முழுசா ஓடுக்குள்ள ஒளிஞ்சிக்குற சக்தி இதுக்கு கிடையாது

 இந்த ஏலியனோட Medula Vision சக்திலேர்ந்து தப்பிச்சிக்குற சக்தி இருக்குற நிறைய ஏலியன்ஸ் பென்டென் யுனிவர்ஸ்ல இருக்குறத சொல்லிருக்காங்க இத தவிர இந்த ஏலியனுக்கு சக்திகள் எதுவும் கிடையாது 

இந்த ஏலியனோட தோல் ரொம்பவே ஸ்ட்ராங்க இருக்கும் இத கிழிக்குறதுக்கு Diamond Head ஓட Crystal மாதிரி ரொம்பவே ஸ்ட்ராங்கான பொருளாள மட்டும்தான் முடியும் மத்தபடி எந்த ஒரு Energy Attack ம் இந்த ஏலியனை ஒன்னும் பன்னாது Atomix ஓட Nuclear Blast கூட இந்த ஏலியனோட தோலை தாண்டி இதுக்கு Damage கொடுக்க முடியாதாம் 

இதனாலயே இந்த கேரக்டரையும் Tom Perkins Underpower ஏலியன்ஸ் லிஸ்ட்ல சேர்த்திருக்காரு இதுமாதிரி பென் Transform ஆகாத பல Unseen ஏலியன்ஸ்க்கு சக்தி ரொம்பவே கம்மியா இருக்குற மாதிரிதான் சொல்லிருப்பாங்க ஏன்ன இந்த ஏலியனா பென் மாறாததுக்கு காரணம் இதுதான்னு சொல்லி எஸ்கேப் ஆகுறதுக்கு இப்படி அந்த ஏலியன்ஸ டம்மி ஆக்கிருப்பாங்க

Snakepit ன் பலவீனங்கள் : 

இந்த ஏலியனுக்கு சக்திகளை விட பலவீனங்கள் தான் அதிகமா இருக்கும் இந்த ஏலியனால எதிரிகளை கல்லாக்குற சக்திய 10 மீட்டருக்குள்ள இருக்குற எதிரிங்க மேல மட்டும்தான் Use பண்ண முடியும்  அதோட இந்த ஏலியனுக்கு மூன்று தலைகள் இருக்குறதால அடிக்கடி அந்த தலைங்களுக்குள்ளயே சண்டைகள் வரும் இதனாலேயே எதிரிங்க இந்த டைம்ல இந்த ஏலியனை தோற்கடிக்க முடியும்

இந்த ஏலியனோட தலைகள் பாம்பு மாதிரி நீளமா இருக்குறதால இந்த தலைகளை பிடிச்சிட்டாலோ இல்லன்னா இதோட தலைகள் எதாவது ஒரு இடத்தில மாட்டிக்கிட்டாலோ  அந்த நேரத்தில இந்த ஏலியனால தன்னோட சக்திய Use பண்ணிக்க முடியாது இந்த ஏலியனோட சக்தி இதே இனத்த சேர்ந்த இன்னொரு ஏலியன்கிட்ட வேலை செய்யாது அதாவது இந்த ஏலியனோட சக்திய வச்சி இந்த ஏலியனை கல்லாக்க முடியாது

இந்த ஏலியன் தன்னோட சக்தியை ஒரு லேசர் மாதிரியான பவரா Use பண்ணும் அதானல அந்த லேசர் கிட்டேர்ந்து தப்பிச்சிட்டாலே இந்த ஏலியனால அவங்கள கல்லாக்க முடியாது 

அதோட இது எடையும் அதிகமான ஏலியனா இருக்குறதால ரொம்பவே மெதுவாதான் நகரும் இந்த பலவீனத்தை வச்சி இந்த ஏலியனை ஈஸியா தோற்கடிச்சிடலாம் இந்த ஏலியன் பாக்குறதுக்கு மொக்கையான ஏலியனா இருந்தாலும் ஒரு தடவையாச்சும் இத பென் டென் சீரிஸ்ல பாக்கணும்ன்னு பென் டென் ரசிகர்கள் கேட்டுட்டுதான் இருக்காங்க

அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த ஸ்னேக்பிட் ஏலியன் பத்தின முழு விளக்கம் இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம நம்ம Blogஅ ஃபாலோவ் பண்ணிக்கோங்க ப்ரண்ட்ஸ் அதோட இந்த ஏலியன பென் டென் சீரிஸ்ல பார்க்கனும்னு  உங்களுக்கும் அப்படி தோணுச்சுன்னா கமெண்ட்ல சொல்லிட்டு போங்க 


நன்றி மக்கள்ஸ்

Post a Comment

0 Comments

Close Menu