ஹாய் மக்கள்ஸ்
இதுவரைக்கும் நம்ம Blogல பென்னோட 10 ஏலியன்ஸ் பத்தி ARTICLE எழுதி இருக்கேன் இது 11 வது ஏலியன் பத்தின Article இதுல Jak The Freeze ங்குற ரொம்பவே சூப்பரான பென்னோட UNSEEN ஏலியன் பத்தி பார்க்கலாம்
உருவான கதை
இந்த ஜாக் தி ஃப்ரீஸ் ( Jak The Freeze ) ஏலியனும் பென்னோட Unseen ஏலியன் தான் ஆனா இந்த ஏலியனோட இனத்த பத்தியும் கிரகத்தை பத்தியும் சில தகவல்கள் கிடைச்சிருக்கு இந்த ஏலியனோட உண்மையான இனத்தோட பேரு வோர்டெஸ்ஸோ ( Vortesso ) இவங்க வாழுற கிரத்தோட பேரு வோர்டஸ் ( Vortes ) இந்த கிரகம் புளுட்டோவவிட ரொம்பவே குட்டியான கிரகம் அதோட புளுட்டோவவிட ரொம்ப ரொம்ப குளிர்ச்சியான கிரகமும் கூட அதனால இந்த கிரகத்துல மனுஷங்க உயிர் வாழுறது ரொம்பவே கஷ்டமான விஷயம் ஆனா இந்த ஏலியன்கள் இந்த கிரகத்துலயே வாழ்ந்து பழகிட்டாதால ரொம்பவே சாதாரணமா இந்த ஏலியன்கள் குளிர தாங்கிட்டு வாழும்ன்னு சொல்லிருக்காங்க
இந்த ஜாக் தி ஃப்ரீஸ் ஏலியன் பென்னோட Unseen ஏலியன்ல ரொம்பவே முக்கியமான ஏலியன் ஏன்னா இந்த ஏலியனதான் முதல்ல பென் டென் ஏலியன் ஃபோர்ஸ்ல Juryrigg க்கு பதிலா கொடுக்க ப்ளான் பண்ணிருக்காங்கஆனா இந்த ஏலியனோட பவர மத்த சில ஏலியன்ஸ் க்கும் கொடுத்திருக்குறதால இந்த ஏலியனை யூஸ் பண்ணாமலே விட்டுட்டாங்க இந்த ஏலியன் பவர் என்னன்னு ஒரு டவுட்டு உங்களுக்கு வரலாம் இந்த ஏலியனுக்கு இருக்குற ஒரே பவர் காலத்தை இந்த ஏலியனை சுத்தி மட்டும் நிறுத்தி வைக்குறது இது மட்டும்தான் இதோட ஒரே ஒரு ஸ்பெஷல் பவர்
மத்தபடி இந்த ஏலியனுக்குன்னு எந்த ஸ்பெஷல் பவரும் கிடையவே கிடையாது இந்த ஏலியனோட டிசைன 2020 கிருஸ்துமஸ் அன்னைக்கு பென் டென் ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் பரிசா டாம் பெர்க்கின்ஸ் அவரோட ட்விட்டர் அக்கவுன்ட்ல போஸ்ட் பண்ணினாரு இந்த ஏலியனோட டிசைன ஏற்கனவே முடிச்சி வச்சிருந்தும் கம்ப்ளிட் பண்ணாம வச்சிருந்த விஷயத்தையும் அதே போஸ்ட்ல டாம் சொல்லிருந்தாரு
இந்த ஏலியனோட டிசைன்தான் டாம் உருவாக்குன முதல் UNSEEN ஏலியனோட டிசைன்னு அவரே சொல்லிருக்காரு இதுக்கு அப்புறமாதான் மத்த Unseen ஏலியன்ஸோட டிசைனையெல்லாம் உருவாக்க ஸ்டார்ட் பண்ணிருக்காரு ஆனா இந்த ஏலியனோட டிசைன முடிக்குறதுக்கு முன்னாடியே மத்த ஏலியன்ஸோட டிசைனெல்லாம் முடிஞ்சி இதுமட்டும் லேட் ஆகிட்டே போனாதா ட்விட்டர் டாம் சொல்லிருக்காரு
இந்த ஏலியனும் மத்த எல்லா Unseen ஏலியன்ஸ் மாதிரி BEN 10 DESTROY ALL ALIENS படத்தில UNLOCK ஆகி எப்பவும் போல ALIEN FORCE ல லாக் ஆகிருச்சு அதோட இந்த ஏலியனோட பவர் ஒன்னும் சொல்லிக்குற மாதிரி இல்லாததால இத மறுபடியும் கொண்டாவர்றதுக்கு பென் டென் சீரிஸ் டீம் யோசிக்கவே இல்ல அதனால இந்த ஏலியனோட கதை ஆரம்பிக்காமலேயே முடிஞ்சிருச்சு இருந்தாலும் இன்னும் இந்த ஏலியனுக்கான ஐடியா இருக்குறதா சொல்லிருக்காங்க ஒருவேளை எதிர்காலத்தில பென் இந்த ஏலியனா மாறுறதுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கு
ஜாக் தி ஃப்ரீஸ் பற்றிய உண்மைகள்
இந்த ஏலியனோட உயரம் 4 அடி எடை 30 KG இந்த ஏலியனும் கிட்டத்தட்ட Juryrigg மாதிரியான உயரத்திலயும் எடையோடயும்தான் இருப்பாரு அதோட வேகமும் அறிவும் Juryrigg மாதிரி தான் இருக்கும் ஆனா இந்த ஏலியனுக்கு பலம் சுத்தமா கிடையாது அதனால ஜாக் தி ஃப்ரீஸால பலத்தை வச்சி யாரையும் தோற்கடிக்க முடியாது ஆனா ஜூரிரிக் பண்ற வேலைகளை இவரால யார வேணும்னாவும் தோற்கடிக்க முடியும் அத மனசுல வச்சாவது இவர பென் டென் சீரிஸ்ல கொண்டு வந்திருக்கலாம்
அதோட இந்த ஏலியனுக்கான ULTIMATE FORM ம் இருக்குன்னு டாம் பெர்க்கின்ஸ் கன்ஃபார்ம் பண்ணிருக்காரு அந்த அல்டிமேட் ஃபார்ம்ல இந்த ஏலியனுக்கு உடல் பலமும் கிடைச்சிரும் பறக்குறதுக்கு இறக்கைகளும் கிடைச்சிரும் அதோட இவர் நெத்திலேர்ந்து லேசர் உருவாக்குற சக்தியும் தன்னை சுத்தி இருக்குற பொருட்களை தொடமலே நகர்த்த கூடிய டெலிகைனிசிஸ் பவரும் இந்த ஏலியனுக்கு கிடைச்சிருமாம் இந்த அளவுக்கு பவர் இருக்குற ஏலியனா இத மாத்தினா கண்டிப்பா பென் டென் சீரிஸ்ல இந்த ஏலியன நாம பார்க்கலாம்
அதுமட்டுமல்லாம இந்த ஏலியனால தன்னோட அல்டிமேட் ஃபார்ம்ல 7 அடி வரைக்கும் வளர முடியும்ன்னு சொல்லிருக்காங்க இதுவும் இந்த ஏலியன அடுத்த லெவலுக்கு கொண்டு போகுது இதோட இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா பென் டென்னோட Unofficial காமிக்ஸ்ல இந்த ஏலியன பென் யூஸ் பண்ணிருக்காராம் அப்போ வில்கேக்ஸாலயே இந்த ஏலியன ஒன்னும் பண்ண முடியலன்னு ஒரு தகவல் இருக்கு
அந்த காமிக்கோட கதை பென் டென் அல்டிமேட் ஏலியன்ஸ்ல நடக்கும் அப்போ கதைப்படி இந்த ஏலியன் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல ஏற்கனவே அன்லாக் ஆகிருக்கும் சொல்லபோன பென் டென் அல்டிமேட் ஏலியன்ஸ் சீரிஸ்ல பென்கிட்ட நிறைய ஏலியன்ஸ் அன்லாக் ஆகிதான் இருந்திருக்கு ஆனா பென் தான் அதபத்தி தெரியாம அதையெல்லாம் யூஸ் பண்ணாமலேயே இருந்துக்காரு இப்போ கதைக்கு வருவோம்
அந்த கதைல பென் ஜாக் தி ஃப்ரீஸ் கிரகத்தை யாரோ ஒரு வில்லன் அழிக்க வர்றத தெரிஞ்சி அததடுக்குறதுக்காக க்வென் அப்பறம் கெவின்கூட அந்த கிரகத்துக்கு போறாரு அப்போ அங்க நம்ம வ்ரீட்டல் ப்ரதர் பென் டீம அட்டாக் பண்றாங்க அப்போ பென் இந்த ஏலியனா மாறுறாரு அதுலேர்ந்து அந்த காமிக் முடியுற வரைக்கும் பென் இந்த ஏலியனதான் யூஸ் பண்ணிருப்பாரு ஏன்னா இந்த ஏலியனால டைம்ம நிறுத்தி வைக்க முடியும்ல அதவச்சி எதிரிகளை பென் ஈஸியா தோற்கடிக்குறாரு அதாவது வ்ரீடல் ப்ரதர்ஸ தோற்கடிக்குறாரு
இவங்க ப்ளான் என்னன்னா இந்த கிரகத்துல பவர்ஃபுல்லான நிறைய வைரம் மாதிரியான கற்கள் இருக்கு அத திருடி விற்க்கலாம்ன்னு முடிவு பண்ணி இந்த கிரகத்துக்கு வெடி குண்டு வச்சிருப்பாங்க அப்போதான் பென்னோட டீம் வந்து இவங்கள தடுத்துருவாங்க பொதுவா பென்னோட கதைகள்ள வைரம் மாதிரியான கற்கள் தான் ரொம்பவே விலை மதிப்பில்லாததுன்னு காட்டிருக்குறத நீங்க பார்க்கலாம் அதையேதான் இந்த இடத்திலியும் சொல்லிருப்பாங்க
இதுக்கப்புறம் ரெண்டு காமிக்ஸ்ல ஹெக்ஸ் கூடவும் டாக்டர் அனிமோ கூடவும் இந்த ஏலியன வச்சி பென் சண்டை போட்ருப்பாரு அந்த ரெண்டு காமிக்ஸோட கதையும் சுமாராதான் இருக்கும் இதுல ஹெக்ஸ் வில்லன நீங்க அதிகமா அல்டிமேட் ஏலியன்ஸ்ல பாத்திருக்க மாட்டீங்க அவர காமிக்ஸ்ல பார்த்தது நல்லா இருக்கும் அடுத்தது எப்பவும் போல டாக்டர் அனிமோ மிருகங்களை வச்சி பென்ன தோற்கடிக்க பார்த்து செம்மையா பல்ப் வாங்கிருப்பாரு
கடைசியா மெயின் வில்லனா நம்ம வில்கேக்ஸூம் அடுத்த காமிக்ஸல வராரு அவரையும் இந்த ஏலியன வச்சி பென் தோற்கடிக்குறாருன்னு சூப்பரா கதை போகும் இது முதல் காமிகஸ்லயே இந்த ஏலியன காட்டிடுவாங்க அதுக்கு காரணம் அந்த கிரகத்துல க்வென் அவங்களோட கவசம் மாதிரியான மந்திர சக்திய வச்சி தப்பிச்சிருவாங்க கெவின் அங்க இருக்குற பாறைய மாறிடுவாரு ஆனா பென்னால குளிர சமாளிக்க முடியாமல் இந்த ஏலியனா மாறிடுவாரு
அதுக்கு காரணம் இந்த ஏலியனாலதான் அந்த கிரகத்தோட குளிர தாங்கிட்டு வாழ முடியும் மத்த ஏலியன்ஸ் இந்த குளிர்ல உறைஞ்சி போய்டுவாங்க அதனால ஆம்னிட்ரிக்ஸே பென்ன காப்பாத்துறதுக்கு இந்த ஏலியனா மாத்தி விட்டுடும் சொல்லபோன இந்த இடத்துக்கு வந்த வ்ரீடல் ப்ரதர்ஸூம் ஸ்பெஷல் சூட்டோடதான் வருவாங்க அந்தளவுக்கு இந்த கிரகம் ஆபத்தானதுன்னு எல்லாருக்கும் தெரியும்
இப்போ நான் சொன்ன எல்லா காமிக்ஸ் கதைகளும் ரசிகர்கள் மற்றும் பென் டென் சீரிஸ்ல வொர்க் பண்ணின ஆளுங்க சேர்ந்து உருவாக்கின Unofficial காமிக்ஸ்தான் மத்தபடி இதெல்லாம் முக்கியமான டைம்லைன்ல வராது ஜாலியா படிக்கனும்னு ஆசைப்படுற பென் டென் ரசிகர்கள் படிக்கலாம் பொதுவா நான் இந்த மாதிரியான Fanfiction படிக்க மாட்டேன் பென் டென் ரீபூட்ல சொல்ற கதைகளவிட இந்த மாதிரியான கதைகள் ரொம்பவே சூப்பரா இருக்கும் அதுலயும் 5 Years Laterன்னு ஒரு புது பென் டென் யுனிவர்சஸையே பென் டென் ரசிகர்கள் உருவாக்கி வச்சிருக்காங்க அதெல்லாம் நேரமிருந்தால் படிச்சி பாருங்க உண்மையிலேயே சூப்பரா இருக்கும்
Jak The Freezeன் சக்திகள்
இந்த ஏலியனுக்கு ஏற்கனவே சொன்ன மாதிரி காலத்தை குறிப்பிட்ட தூரம் வரைக்கும் நிறுத்தி வைக்கும் சக்தி இருக்கு இதவச்சி இதால எதிரிகளை நகரவிடாம காலத்தை நிறுத்தி வச்சி அழிக்க முடியும் ஆனா அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் இருந்தாலும் குறைஞ்சது இரண்டு நிமிஷம் வரைக்கும் இந்த ஏலியனால காலத்த நிறுத்தி வைக்க முடியும் அதவச்சே எவ்ளோ பெரிய வில்லனா இருந்தாலும் இந்த ஏலியன ஒன்னும் பண்ணவே முடியாது
அதே நேரத்தில இந்த ஏலியனுக்கு ஜூரிரிக்கோட சக்தியும் இருக்குறதால தனக்கான ஆயுதங்கள தானே உருவாக்கிக்குற சக்திகள் இருக்கும் இதவச்சே பெரிய பெரிய வில்லன்களை தோற்கடிக்க முடியும் இதுபத்தாதுன்னு இந்த ஏலியனோட Ultimate Form ல லிமிட்டே இல்லாம ஜாக் தி ஃப்ரீஸால டைம்ம நிறுத்தி வைக்க முடியும் கூடவே பறக்குற சக்தியும் லேசர் சக்தியும் டெலிகைனசிஸ் சக்தியும் வேற கிடைக்குது இதவிட சூப்பரான ஏலியன் பென் டென் சீரிஸ்ல வரவே முடியாது ஆனா இதோட டிசைனும் பவரும் நார்மலா இருக்கும் போது டம்மியா இருக்குறதாலதான் இந்த ஏலியன நாம் பார்க்க முடியல
அதுமட்டுமல்லாம டைம்ம கண்ட்ரோல் பண்ற சக்தியோட பென்கிட்ட நிறைய ஏலியன்ஸ் இருக்கு அதுக்கே பென் டென் சீரிஸ்ல வேலை இல்லாம சும்மாதான் இருக்குங்க அதுங்களுக்கே என்ன மாதிரி கதை கொடுக்கலாம்ன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காங்க நிலைமை இப்படி இருக்கும் போது இந்த ஏலியன வச்சி என்ன பண்றதுன்னு புரியாமதான் இந்த ஏலியனும் பென் டென் சீரிஸ்ல வரல
Jak The Freezeன் பலவீனங்கள்
இந்த ஏலியனுக்கு பலவீனம்ன்னு சொல்ற மாதிரி பெரிசா எதுவுமே கிடையாது ஆனா இதுக்கு பலம் ரொம்பவே கம்மியா இருக்குறதால ஸ்ட்ராங்கான வில்லன்ஸ்கிட்ட ஈஸியா தோத்து போய்டும்
அதோட இதுக்கு உயரமும் ரொம்பவே கம்மிதான் அதனால இதுவம் இந்த ஏலியனோட முக்கியமான பலவீனமன்னு சொல்லலாம் மத்தபடி எந்த பலவீனமும் இதுக்கு இல்ல
அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த ஜாக் தி ஃப்ரீஸ் ஏலியன் பத்தின முழு விளக்கம் இந்த ஏலியன் மாதிரியே இன்னும் நிறைய Unseen ஏலியன்ஸ் பென் கிட்ட இருக்கு அதபத்தி அடுத்த போஸ்ட்ல பார்க்கலாம்
நன்றி மக்கள்ஸ்
Copyright (c) 2021 Tamil Cartoons Fandom All Right Reseved
0 Comments
Thanks For Visiting Our Blog