ஹாய் மக்கள்ஸ்
இதுவரைக்கும் நம்ம Blogல பென்னோட Unseen ஏலியன்ஸ்ல Crabtastic பத்தி பாத்தாச்சு இந்த Post ல MealyMouth ங்குற புது Unseen ஏலியன் பத்தி பார்க்கலாம்
உருவான கதை
இந்த மீலிமவுத் ஏலியன பென் எங்கேயும் யூஸ் பண்ணிக்கல அதனால இந்த ஏலியனோட இனத்த பத்தியும் கிரகத்த பத்தியும் எந்த இடத்திலயும் குறிப்பிடவே இல்ல அதுமட்டுமில்ல ஆனா இந்த ஏலியனும் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல Destroy All Aliens படம் முடிஞ்சதுக்கு அப்புறம் Unlock ஆகிருக்காரு
அதுக்கப்புறம் பென்னோட Omnitrix Recalibrate ஆன டைம்ல இந்த ஏலியன் Lock ஆகிருச்சு அப்புறம் Alien Force ஓட War Of Wolrds Part 1ல Unlock ஆகி மறுபடியும் War Of Wolrds Part 2 Lock ஆகிருச்சி
ஆனா இப்பவும் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல இந்த ஏலியன் Unlock ஆகிதான் இருக்காம் Omniverse சீரிஸ்ல பென் நினைச்சிருந்த இந்த ஏலியனை யூஸ் பண்ணிருக்கலாமாம் ஆனா பென்னுக்கு இந்த ஏலியனோட சக்திகளும் உருவமும் அவ்ளோவா பிடிக்கலயாம் அதனாலதான் பென் இத எங்கேயும் யூஸ் பண்ணல ஒருவேளை இந்த ஏலியன பென் அதிக இடங்களில யூஸ் பண்ணிருந்தா பல வில்லன்களை ரொம்ப ஈஸியா தோற்கடிச்சிருக்கலாம் ஆனா உடல் பலம் இந்த ஏலியனுக்கு சுத்தமா கிடையாது அதுவும் இந்த ஏலியன பென் யூஸ் பண்ணாததுக்கு முக்கிய காரணமா சொல்றாங்க
அதோட இந்த ஏலியனுக்கும் Ultimate Form இருக்குன்னு Confirm பண்ணிருக்காங்க அப்படி இந்த ஏலியன் அல்டிமேட் ஏலியனா மாறும் போது இதோட உருவம் கருப்பு கலர்க்கு மாறிடுமாம் அதோட இதோட உருவம் நார்மலா இருக்கும் போது 7 அடில இருக்குமாம் ஆனா இது அல்டிமேட் ஏலியனா மாறிட்டா 11 அடிக்கு மேல மாறிடும்ன்னு சொல்லிருக்காங்க அதுமட்டுமில்லாம இந்த ஏலியனோட சக்தியும் ரொம்பவே மாறிடும் எந்தளவுக்குன்னா பொதுவா இதோட குரல் மூலமாதான் மத்தவங்கள இந்த ஏலியன் கண்ட்ரோல் பண்ணும் ஆனா அல்டிமேட் ஏலியனா இது மாறிட்டா பார்வையாலயே இந்த ஏலியனால எவ்ளோ பவர்ஃபுல்லான ஏலியனா இருந்தாலும் கண்ட்ரோல் பண்ணிரும்
அதோட உடல்படலமும் எக்கச்சக்கமான கிடைச்சிரும் இந்த மீலிமவ்த்தோட அல்டிமேட் ஃபார்ம ஃபோர் ஆர்ம்ஸ் நினைச்சாகூட தோற்கடிக்க முடியாதாம் அதோட இதுக்கு பறக்குற சக்தியும் கிடைச்சிரும்ன்னு சொல்லிருக்காங்க ஆனா அதுக்காக இந்த ஏலியனுக்கு இறக்கைகள் தேவைப்படாது டெலிகைனசிஸ் சக்திய வச்சே இந்த ஏலியனால பறக்க முடியுமாம்
Mealymouth பற்றிய உண்மைகள்
இந்த ஏலியனோட Design இந்த வருஷம்தான் ( 2021 ) Tom Perkinsஆல உருவாக்கப்பட்டிருக்கு அதனால இதோட Ultimate Form இருந்தாலும் அது எப்படி இருக்கும்ன்னு நாம எப்பவும் பார்க்க முடியாதாம் ஏன்னா நாம அதிகமா பார்த்த ஹீட்ப்ளாஸ்ட் ஏலியனுக்கே இன்னும் OFFICIAL அல்டிமேட் ஃபார்ம் பத்தின எந்த அப்டேட்டும் கிடைக்கவே இல்ல அதுக்காக இன்னமும் பல பென் டென் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுட்டே இருக்காங்க அப்படி இருக்கும் போது இப்படி ஒரு ஏலியன் பென்னுக்காக உருவாக்குனதே நிறைய பென் டென் ரசிகர்களுக்கு தெரியாது அதனால இந்த ஏலியனோட அல்டிமேட் உருவத்தை நாம பார்க்குறது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்தான்
இந்த ஏலியனுக்கான ஐடியாவும் மாட் வைன் க்கு 2013 ல Omniverse சீரிஸ் Run ஆகிட்டு இருந்த டைம்லதான் வந்திருக்கு அப்போலேர்ந்து இந்த கேரக்டருக்கான Design அ Plan பண்ணி Ben 10 ரசிகர்கள் கேட்டதுக்காக இந்த வருஷம் ரிலீஸ் பண்ணிருந்தாங்க அதோட இந்த ஏலியனையும் ஜோக் ஏலியன்ஸ் லிஸ்ட்லதான் சேர்த்து வச்சிருக்காங்க அப்படி என்ன அந்த ஜோக் ஏலியன்ஸ் லிஸ்ட்ன்னா பொதுவா பென்னுக்கு இந்த மாதிரி சுமார் 100க்கும் அதிகமான UNSEEN ஏலியன்ஸ உருவாக்கிருக்காங்க அதுல சில ஏலியன்ஸ் BEN 10 COMMERCIALSல வந்திருக்கும் அதெல்லாம் NON CANON ஏலியன்ஸ்ன்னு சொல்லுவாங்க அப்படி பட்ட ஏலியன்ஸ் யார் யாருன்னா SNAKEPIT,SAND BOX மற்றும் SHELLHEAD
ஆனா அப்படி எந்த ஒரு இடத்திலயும் குறிப்பிடபடாம அல்லது காமிக்கபடாம இருந்த அதெல்லாம் ஜோக் ஏலியன்ஸ் லிஸ்ட்ல வரும் இப்படி வர்ற ஜோக் ஏலியன்ஸ பெரிசா டெவலப் பண்ணாம வெறும் ஐடியாவா மட்டும் வச்சிருப்பாங்க அதையும் தாண்டி சில ஏலியன்ஸ் மட்டும்தான் பென் டென் சீரிஸ்ல வரும் அதுல முக்கியமான ஏலியன்தான் ATOMIXங்குற ஏலியன் இந்த ஏலியன் மட்டும் தான் பென்கிட்ட இருக்குறதுலயே NON CANON ஏலியனா இருந்து OFFICIAL ஏலியனா மாறுச்சு அடாமிக்ஸ தவிர வேற எந்த ஏலியனும் இந்த மாதிரி மாத்தல
அதுக்கு காரணம் இந்த அடாமிக்ஸ் ஏலியன் மட்டும்தான் பேருக்கு ஏத்த மாதிரி நல்ல பவரோட இருந்துச்சு இதுகூடவே தான் ஸ்னேக்பிட்,ஷெல்ஹெட்,சாண்ட்பாக்ஸ் ஏலியன்ஸ பத்தியும் சொல்லிருப்பாங்க ஆனா கென்ங்குற பென்னோட பையனுக்கு எதிர்கால பென் கென்னுக்காக உருவாக்குன ஆம்னிட்ரிக்ஸ்ல அடாமிக்ஸ்ஸ தவிர மத்த ஏலியன்ஸ கொடுத்திருப்பாரு ஆனா கென்னுக்கு அடாமிக்ஸதான் ரொம்பவே பிடிச்ச ஏலியன்னு அவரே சொல்லிருப்பாரு ஆனா அவரோட ஆம்னிட்ரிக்ஸ்லயும் மீலிமௌவ்த் ஏலியன் இருந்ததுன்னு OFFICIALஆவே சொல்லிருக்காங்க
அதே டைம்ல இந்த ஏலியன Ben 10 Rebootல கொண்டு வரலாம்ங்குற ஐடியா இருந்திருக்கு ஆனா இந்த ஏலியனோட Appearance ரொம்பவே பயங்கரமா இருக்குறதால இவர எந்த பென் டென் சீரிஸ்லயும் காட்டலன்னு சொல்லிருக்காங்க அது ஏன்னு உங்களுக்கே தெரியும் மீலிமௌவ்த் பாக்குறதுக்கு ரொம்பவே படுபயங்கரமான ஏலியனாதான் இருக்கும் ஆனா பென் டென் ரீபூட் சீரிஸ் முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கபட்டது அதுல இப்படி ஒரு ஏலியன காட்ட நினைச்ச கூட பார்க்க மாட்டாங்க
அதோட இந்த ஏலியனுக்கு 4 வாய் இருக்கும்ன்னு காட்டி இருப்பாங்க அதோட புருவங்களுக்கு பதில கொம்பு மாதிரி முகத்தில இருக்கும் இந்த மாதிரி ஒரு ஏலியன ஏற்கனவே நமக்கு பென் டென் ஒரிஜினல் கிளாசிக் சீரிஸ்ல காட்டி இருக்காங்க
பென் டென் ஒரிஜினல் சீரிஸ்ல Camp Fearன்னு ஒரு எபிசோட் இருக்கும் இதுலதான் Wildvine ஏலியன முதல் தடவையா காட்டி இருப்பாங்க
இதுல காளான் மாதிரியான மான்ஸ்டர்ஸ் பென்னையும் அவரோட ஆளுங்களையும் தொரத்துற மாதிரி காட்டி இருப்பாங்க அந்த எபிசோட்ல வந்த காளான் மாதிரியான மான்ஸ்டர்ஸ்க்கு இரண்டு வாய் இருக்கும் அந்த மான்ஸ்டர மாடலா வச்சிதான் இந்த ஏலியனோட Appearanceஅ உருவாக்கி இருக்காங்க அந்த அளவுக்கு ரெண்டு ஏலியன்ஸோட உடலமைப்பும் ஒரே மாதிரிதான் இருக்கும்
இந்த ஏலியனோட வலது கைல 8 விரல்களும் இடது கைல 7 விரல்களும் இருக்கும் இப்படி ஒரு ஏலியன எந்த குழந்தையும் பொம்மைய வாங்குறதுக்கு யோசிப்பாங்கன்னு இந்த ஏலியன Use பண்ணிக்கல ஆனா இந்த மாதிரி ஒரு ஏலியன் மட்டும் பென் டென் சீரிஸ்ல வந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும் WORST ஏலியன் மாதிரி மொக்கையான ஏலியன்ஸ்கூட கம்பேர் பண்ணும்போது இந்த ஏலியன் நல்லாதான் இருக்கும்
ஆனா எதுக்காக இப்படி இபண்ணுனாங்கன்னா Ben 10 சீரிஸ்ல குழந்தைகளை கவர்வதற்க்காகதான் இப்போது Reboot காட்ற மாதிரி ரொம்ப கார்ட்டூன் தனமா பென்னோட ஏலியன்களை காட்றாங்க
அப்போதான் அந்த ஏலியன்களோட பொம்மைங்கள விற்க முடியும் ஆனா இந்த ஏலியன் பாக்கவே பயங்கரமா இருக்குறதால இவர வேணாம்ன்னு ஒதுக்கிட்டாங்க
இந்த மாதிரியான காரணத்தாலதான் Chromostone ஏலியன ஆம்னிவெர்ஸ்ல 2 தடவ மட்டும் பாத்தோம் இல்லன்னா அந்த ஏலியனை நிறைய இடங்கள்ல யூஸ் பண்றதுக்கான ஐடியா பென் டென் Creatorsக்கு இருந்திருக்கு ஆனா Chromostone Toys அதிகமா Sale ஆகாததால அவர தொடர்ந்து சீரிஸ்ல கொண்டு வரத நிருத்தி மொத்தமா ஆம்னிவெர்ஸ்லேர்ந்தே தூக்கிட்டாங்க அதோட கைகால்கள் குச்சி குச்சியா இருக்குற மாதிரி ஏலியன யாருக்குதான் பிடிக்கும்
இந்த மாதிரியான சின்ன சின்ன முட்டாள்தனமான காரணங்களலாதான் இந்த மீலிமௌவ்த் ஏலியன் கடைசிவரைக்கும் பென் டென் சீரிஸ்ல கொண்டுவரப்படல ஆனா கொண்டு வந்திருந்தா உங்களுக்கு பிடிச்சிருக்குமான்னு கமெண்ட் பண்ணுங்க
Mealymouth ன் சக்திகள் :
இந்த மீலி மௌவ்த்தோட முக்கியமான சக்தி அவரோட குரல்தான் இவரோட குரல வச்சி யாரை வேணும்னாலும் இவரால Mind Control பண்ண முடியும் இவர்கிட்டேர்ந்து Alien X மாதிரியான ஏலியன்ஸால மட்டும்தான் தப்பிக்க முடியுமாம்
அதோட இவருக்கு 4 வாய்கள் இருக்குன்னு காட்டிருக்காங்க அதுல ஒவ்வொரு வாய்க்கு ஒவ்வொருவிதமான குரல்ல பேசுற திறமை இருக்கு இதனாலதான் இந்த ஏலியனோட குரல்கிட்டேர்ந்து யாராலயும் தப்பிக்க முடியுறது இல்ல
இந்த ஏலியனோட குரல் எவ்வளவு தூரம் வேணும்னாலும் இதால கேக்க வைக்க முடியுமாம் கிட்டதட்ட டெலிபதி சக்தி மாதிரி அப்புறம் இந்த ஏலியனோட 4 வாய்களாலும் வேற வேற விஷயங்கள வேற வேற குரல்ல ஒரே நேரத்தில பேசமுடியும்ன்னும் சொல்லிருக்காங்க இந்த சக்திய வச்சிதான் ரொம்பவே சக்திவாய்ந்த ஏலியன்ஸ கூட இந்த மீலிமௌவ்த் ஏலியன் தோற்கடிக்குமாம்
அதோட பொய் சொல்றதுல இந்த ஏலியன யாரைலயும் அடிச்சிக்கவே முடியாதாம் அந்த அளவுக்கு நம்புற மாதிரி இந்த ஏலியனால பொய் சொல்ல முடியுமாம் எந்த மாதிரி ஏலியன்கிட்ட எந்த மாதிரியான விதத்துல பொய் சொன்ன அவங்க ஈஸியா நம்புவாங்கன்னு இந்த ஏலியனுக்குதான் முழுசா தெரியுமாம் அதனால இந்த ஏலியனோட பொய்களை எல்லாரும் ரொம்ப ரொம்ப ஈஸியாவே நம்பிருவாங்க
அதுமட்டுமல்லாம மத்தவங்க இந்த ஏலியன் கிட்ட பொய் சொல்ல முயற்சி பண்ணினா அதையும் இந்த ஏலியனால கண்டுபிடிக்க முடியும் ஏன்னா இந்த ஏலியனுக்கு உண்மைய சொல்றவங்களோட குரலையும் பொய் சொல்றவங்களோட குரலையும் பிரிச்சி பாக்குற சக்தி இருக்கு ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த ஏலியன் மட்டும்தான் பொய் சொல்லும் இதுகிட்ட வேற யாராலையும் பொய் சொல்லி ஏமாத்திட முடியாது
Mealymouth ன் பலவீனங்கள் :
இந்த ஏலியனை இதுவரைக்கும் பென் எங்கேயும் Use பண்ணி யார்கூடயும் சண்டை போட்டது இல்ல அதனால இந்த ஏலியனோட பலவீனங்களை பத்தி எதுவும் சொல்லப்படல இருந்தாலும் சில தகவல்கள் இந்த ஏலியனோட பலவீனங்கள் பத்தி நமக்கு கிடைச்சிருக்கு அதபத்தி நாம முழுசா பார்த்திடலாம்
இந்த ஏலியனோட குரல் மட்டும் தான் இதோட சக்தி அதனால இந்த ஏலியனை பேசவிடாம பண்ணிட்டாலோ இல்லன்னா அது பேசுறத கேக்காம இருந்துட்டாலோ அதோட சக்தி Useless ஆகிரும்ன்னு சொல்லிருக்காங்க உதாரணமா சொல்லனும்னா
உதாரணத்துக்கு WildMutt ஏலியனுக்கு காதும் கண்ணும் கிடையாது அதனால இந்த மீலிமௌவ்த் ஏலியன் தன்னோட சக்திய வச்சி Wildmuttஅ கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுன அது வேலைக்கு ஆகாது இதே மாதிரி இன்னும் சில ஏலியன்களுக்கு காது கிடையாது
அந்த ஏலியன்ஸ்கிட்ட மீலிமௌவ்த் தன்னோட சக்திய வச்சி கண்ட்ரோல் பண்ண பாத்தாலும் ஒன்னுமே நடக்காதுன்னு சொல்லிருக்காங்க ஏன்னா காது இருந்தாதான மிலீமௌவ்த்தோட குரல கேட்கமுடியும் அப்படி குரலே கேட்கமுடியாத எதிரிங்கள இந்த ஏலியன் கண்ட்ரோல் பண்றது முடியாத காரியம்
அதோட இந்த ஏலியனுக்கு Strength ரொம்பவே கம்மி அதனால யாராச்சும் பலசாலியான ஏலியன் இவரு கூட மோதுனா ரொம்ப ஈஸியாவே இவர் தோத்துபோய்டுவாருன்னு சொல்லிருக்காங்க
இந்த மாதிரியான காரணங்களுக்காக தான் இந்த ஏலியன மாட் வைன்னும் டாம் பெர்கின்ஸூம் Underpower ஏலியன்ஸ் லிஸ்ட்லயும் சேர்த்திருக்காங்க
அவ்ளோதான் மக்கள் இதுதான் MEALYMOUTH ஏலியனோட ORIGIN இந்த ஏலியனை உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையாங்குறத கமெண்ட்ல சொல்லிட்டு போங்க இதே மாதிரி பென்னோட அடுத்த சூப்பரான ஏலியனோட Originன நாம அடுத்த போஸ்ட்ல பார்க்கலாம்
நன்றி மக்கள்ஸ்
Copyright (c) 2021 Tamil Cartoons Fandom All Right Reseved
0 Comments
Thanks For Visiting Our Blog