Google Adsense Code

Warp Origin பற்றி தமிழில் ( Ben 10 ALIENS Tamil Part - 9 )


ஹாய் மக்கள்ஸ்

எல்லாருக்கும் வணக்கம் இந்த Articleல நாம பாக்கப்போற ஏலியன் பேரு Warp இந்த ஏலியனும் பென்னோட Unseen ஏலியன் தான் இப்போ இந்த ஏலியன் பத்தி முழுசா பார்க்கலாம்

உருவான கதை
இந்த வார்ப் ஏலியனும் பென் யூஸ் பண்ணாத ஏலியன்ங்குறதால இதோட இனம் பத்தியும் கிரகம் பத்தியும் தெளிவான பதில் சொல்லபடல ஆனா சில தகவல்கள்ள இந்த ஏலியனோட கிரகம் பத்தின ஞில விஷயங்கள் சொல்லபட்டுருக்கு இந்த ஏலியன்ஸ் வாழ்ந்துட்டு இருக்குற கிரகத்தோட பேரு க்ரைபோபென்ட்  ( CRYPOPENT )  இது நம்ம பிரபஞ்சத்துலயே இல்ல நமக்கு அடுத்த பிரபஞ்சத்துல இருக்கு அப்புறம் எப்படி இந்த ஏலியனோட டிஎன்ஏ ஆம்னிட்ரிக்ஸ்ல வந்துச்சுன்னு நீங்க கேக்கலாம் அதுக்கு காரணம் இந்த ஏலியன்களோட பவர்தான் இந்த ஏலியன்களால போர்டல்களை உருவாக்க முடியும் அதவச்சி தான் நம்ம பிரபஞ்சத்துக்குள்ள இந்த ஏலியன்கள் வந்திருக்காங்க 

அப்படி நம்ம பிரபஞ்சத்துக்குள்ள வந்த வார்ப் ஏலியன் ஒன்னு வில்லான இருந்தது அத கைது பண்ணிதான் இந்த வார்ப் ஏலியனோட டிஎன்ஏவ ஆம்னிட்ரிக்ஸ்ல சேர்த்தாங்க இதுதான் இதோட கிரகத்த பத்தி நமக்கு கிடைச்சிருக்குற தகவல்கள்
அதோட இந்த ஏலியன் பென்னோட Omnitrixல இருக்குன்னு 2020 Tom Perkins ட்விட்டர் Accountல Confirm பண்ணினாரு ஆனா அதுக்கு முன்னாடியே அதாவது Ben 10 ஓட Classic சீரிஸ்ல 2 வது சீசனோட முதல் எபிசோட்ல அதாவது Truth ங்குற எபிசோட்ல காட்டிருப்பாங்க ஆனா அதுல ஒரு வில்லன் மாதிரிதான் காட்டிருப்பாங்க 

இந்த Truth எபிசோட்ட கதை என்னன்னா பென்னோட தாத்தா மேக்ஸ் அவர் Plumber Organisationல வேலை செஞ்சதா பத்தியும் அடுத்து அவர் Vilgax ஓட  சண்டை போட்டு அதுல வில்கேக்ஸ அவர் கொன்னத பத்தி சொல்லிருப்பாரு அப்போ அவரோட பழைய ஃப்ரண்ட்டான Phil  ப்ளம்மர்ஸ் பிடிச்ச ஏலியன்ஸ திருட்டுத்தனமா ரிலீஸ் பண்ணி அதுலேர்ந்து பணம் சம்பாதிக்க முயற்ச்சி பண்ணிருப்பாரு அத எப்படி பென்னும் மேக்ஸ் க்வென் ஒன்னா சேர்ந்து தடுக்குறாங்கங்குறதுதான் கதை 

அந்த எபிசோட்ல மேக்ஸ் ஏலியன்ஸ்கூட சண்டை போட்டத பத்தி சொல்லிட்டு இருக்கும் போது Flashback  சீக்குவன்ஸ்ஸ காட்டி இருப்பாங்க அதுல 3 ஏலியன்ஸ காட்டுவாங்க அதுல முதலாவது இருக்குற ஏலியன்தான் இந்த வார்ப் ஏலியன் ஆனா ஏற்கனவே சொன்ன மாதிரி இது வில்லனாதான் காட்டப்பட்டிருக்கும் அதோட பிளம்மர்ஸ் இந்த ஏலியன ஈஸியா தோற்கடிச்சிட்ட‌ மாதிரிதான் மேக்ஸ் சொல்லிருப்பாரு ஆனா வார்ப் அவ்ளோ ஈஸியா தோத்துபோற ஏலியன் கிடையாது முதல்ல இந்த ஏலியன சும்மா மேக்ஸ் தோற்கடிக்குறதுக்கா உருவாக்குன டம்மி ஏலியனாதான் காட்டிருந்தாங்க அதுக்கு அப்புறம் தான் பென்னுக்கு இந்த ஏலியன கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணி இதுக்கு நிறைய சக்திகளை கொடுத்து பவர்ஃபுல்லான ஏலியனா மாத்தினாங்க 

அதோட நம்ம பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல இருக்குற வார்ப் ஏலியன் மேக்ஸ் மோதுன ஏலியனை விட ரொம்பவே சக்திவாய்ந்ததுன்னு Tom Perkins சொல்லிருக்காரு ஏன்னா எப்பவுமே பென்னோட ஆம்னிட்ரிக்ஸ் Capture பண்ற ஏலியன்ஸோட DNA வ Modify பண்ணி Upgrade பண்ணிதான் சேவ் பண்ணி வைக்கும் இதபத்தியும் ஏற்கனவே போன போஸ்ட்கள்ள சொல்லிருக்கேன் 

அதனாலதான் பென்னோட வார்ப் ஏலியன் அதோட இனத்த சேர்ந்த மத்த ஏலியன்ஸ விட ரொம்பவே பவர்ஃபுல்லா இருக்குமாம் அதுமட்டுமல்லாம இந்த வார்ப் ஏலியன்தான் பென் டென் சீரிஸ்ல இருந்து பென் Capture பண்ணாம அவரோட ஆம்னிட்ரிக்ஸ்ல இருக்குறதா டாம் கன்பார்ம் பண்ணின முதல் ஏலியன் அதாவது இதுவரைக்கும் Tom Perkins உருவாக்கின‌ ஏலியன்ஸோட Design எல்லாமே பென் டென் சீரிஸ்ல வேலை பார்த்த எல்லோரும் சொன்ன Detailsஅ மையமா வச்சிதான் உருவாக்குவாரு

ஆனா இந்த வார்ப் ஏலியனுக்கு மட்டும்தான் ஏற்கனவே பென் டென் ல வந்த ஏலியன் Design அ யூஸ் பண்ணிருந்தாரு அதோட இந்த ஏலியனுக்கும் Ultimate Form இருக்குன்னு Official ஆவே  கன்பார்ம் பண்ணிருக்காங்க இதோட அல்டிமேட் ஃபார்ம் கிட்டத்தட்ட வைல்ட்வைன் மாதிரியான ஏலியனா மாறிடுமாம் அதாவது இந்த வார்ப் ஏலியன் நார்மலா இருக்கும் போது வேகமான ஏலியனாவும் போர்டல்ஸ உருவாக்கி டைம் டிராவல் பண்ற மாதிரியும் காட்டிருப்பாங்க அதே பவரையும் வேகத்தையும இந்த வார்ப் ஏலியனோட அல்டிமேட் ஃபார்ம்ல மூனு மடங்கு வரை அதிமாகிருமாம் 

வார்ப் ஏலியன் பற்றிய உண்மைகள்

இந்த ஏலியனும் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல Ben 10  Destroy All Aliens படம் முடிஞ்சதுக்கு அப்புறம் Unlock ஆகி Ben 10 Alien Force ல லாக் ஆகிருக்கும் அதுக்கப்புறம் இந்த ஏலியன Ben 10000 தான் யூஸ் பண்ணிருக்காரு ஆனா இந்த ஏலியனோட டைம் டிராவல் சக்திய அதிகமா எதிர்கால பென் யூஸ் பண்ணினதே இல்லயாம் அது ஏன்னா அந்தளவுக்கு ரிஸ்க்கான ஏலியன்ஸ எதிர்கால பென் சந்திக்கவே இல்லங்குறதுதான் காரணம்

இந்த வார்ப் ஏலியனோட உயரம் 11 அடி எடை கிட்டதட்ட 500 KG ஆனா இந்தளவுக்கு எடை இருந்தாலும் இதோட வேகம் கொஞ்சம் கூட குறையாம இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க 
இதோட வேகம் Fourarms அ விட 2 மடங்கு அதிகம் அதனால பென்னோட ஒரிஜினல் 10 ஏலியன்ஸ்ல XLR8 அ தவிர மத்த எந்த ஏலியனாலையும் வார்ப்ப ஒன்னும் பண்ண முடியாதாம் அந்த அளவுக்கு இதுக்கு பலமும் இருக்கு பவரும் இருக்கு ஒருவேளை யாராவது ஒரு ஏலியன் இத பின்னாடிலேர்ந்து தெரியாம மறைஞ்சி அட்டாக் பண்ணினா வேணும்னா இது தோத்து போகும் மத்தபடி இத தோற்கடிக்குறது கஷ்டம் 

அடுத்து இந்த வார்ப் ஏலியனுக்கு உடம்பு பாம்பு மாதிரி இருக்கும்ன்னு காட்டி இருப்பாங்க அதனால இந்த ஏலியன யாராவது Attack பண்ண வந்தா இதால ரொம்ப ஈஸியாவே அதுலேர்ந்து தப்பிச்சிக்க முடியும் அதுக்கு இதோட வேகமும் உடலமைப்பும் நல்லாவே உதவி பண்ணுது அதுவும் அல்டிமேட் ஃபார்ம்க்கு மாறும்போது இன்னுமே அதிகமான வேகம் கிடைக்குறதால இத அட்டாக் பண்றதுங்கறது ரொம்பவே கஷ்டமான விஷயம்

 Warpன் சக்திகள் 

இந்த வார்ப் ஏலியனுக்கு இருக்குற சக்திகள் எல்லாமே ரொம்பவே சூப்பரா இருக்கும் அதுல முதல் சக்தி இந்த ஏலியனால Portals அ கிரியேட் பண்ண முடியும் இதவச்சி இதால டெலிபோர்ட் பண்ண முடியும் அதுவும் ஒரு கேலக்ஸிலேர்ந்து இன்னொரு கேலக்ஸிக்கே டெலிபோர்ட் ஆகமுடியும் இதோட டெலிபோர்டேஷன்‌ பவருக்கு லிமிட் கிடையாது அதனால ஒரு நிமிஷத்துல இந்த ஏலியனால இந்த ஒண்டுமொத்த பிரபஞ்சத்துல எல்லா கிரகத்துக்கும் போய்ட்டு வர முடியும் அதுவும் கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாம பண்ண முடியும்

அடுத்ததா இந்த ஏலியன் கிரியேட் பண்ற Portals அ வச்சி டைம் டிராவல் கூட பண்ண முடியும் இதுக்கும் எந்த விதமான லிமிட்டும் கிடையாது இதால எதிர்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் எப்ப வேணும்னாலும் டிராவல் பண்ண முடியும் ஆனா அதுக்கு ப்ரோபஸர் பாரடாக்ஸ் பென்ன அனுமதிக்க மாட்டாரு ஏன்னா அவருதான் காலத்தை கண்ட்ரோல் பண்ணி பென்னுக்கு எல்லா காலகட்டங்களிலும் உதவி பண்ணிட்டு இருக்காரு ஏன்னா அவருக்கு மட்டும் தான் கடந்தகாலத்தில நடக்குற எந்த விஷயம் எதிர்காலத்த பாதிக்கும் இல்லன எதிர்கால பிரிச்சினைய சரிபடுத்தும்ன்னு ரொம்ப நல்லாவே தெரியும் அதனால பென் தன்னோட சக்திய வச்சி எதாச்சும் மாத்தனும்னு முயற்சி பண்ணுனாருன்னா அத அவரோட டைம்லைனயே மொத்தமா அழிக்க நிறையவே வாய்ப்பிருக்குன்னு பென்னுக்கும் நல்லாவே தெரியும்

 அதானாலதான் இந்த ஏலியனோட டைம் டிராவல் பவர மட்டும் பென் அதிகமா யூஸ் பண்ணிக்கல அப்படி ஒருவேளை பென் யூஸ் பண்ணிருந்தா என்ன ஆகும்ன்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டீங்கன்னா கவலையேபடாதீங்க ஆல்ரெடி அப்படி ஒரு வில்லன நாம பென் டெனலயே காட்டிருப்பாங்க அவருதான் இயான் ( Eon ) இந்த கேரக்டரும் ஒரு வகையில பென்தான் ஆனா வில்லதனத்தோட இருக்குற பென் இவரால காலத்தை தாண்டி பயணிக்கவும் முடியும் மத்த டைம்லைன்ல இருக்குற பென்களை கண்ட்ரோல் பண்ணிக்கவும் முடியும்ன்னு காட்டிருப்பாங்க இதுமாதிரி பிரச்சினைகள் வரக்கூடாதுன்னுதான் வார்ப்போட டைம் டிராவல் பவர பென் யூஸ் பண்ணிக்குறது இல்ல 

அடுத்ததா  இந்த பவரெல்லாம் பென்னோட வார்ப்கிட்ட மட்டும்தான் யூஸ் ஆகும் மத்த வார்ப் ஏலியன்ஸோட பவருக்கு லிமிட் இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க அதுக்கு காரணம் ஆம்னிட்ரிக்ஸ்தான் மத்தபடி வார்ப்போட இனத்துல இருக்குற ஏலியன்ஸால குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் டைம் டிராவல் பண்ண முடியும் உதாரணத்துக்கு ஒரு நிமிடம் மாதிரியான நேரம் மட்டும் டைம் டிராவல் பண்ண முடியும் அதுக்கு அப்புறம் திரும்பவும் டைம் டிராவல் பண்ண ரொம்ப நேரம் சில சமயங்களில ரொம்ப நாள் கூட ஆகுமாம் ஆனா இந்ந பிரச்சினை நம்ம பென்னுக்கு இல்ல 

அதோட இந்த வார்ப் ஏலியனோட கைகள்ள விரல்களுக்கு பதிலா கத்தி மாதிரி ஷார்ப்பான ரெண்டு ப்ளேட்ஸ் இருக்கும் இந்த ப்ளேட்ஸ் வைரத்தவிட ரொம்பவே ஸ்ட்ராங்க இருக்கும் அதனால எவ்ளோ ஸ்ட்ராங்கா பொருளா இருந்தாலும் இந்த வார்ப்போட ப்ளேட்ஸ வச்சி துண்டாக்க முடியும் அதோட இந்த ஏலியனோட கைகள வெட்டினா கூட இதால திரும்ப வளர வைக்க முடியும் அதுவும் சில மணி நேரங்களுக்குள்ளயே இத முழுசா வளர வைக்க முடியும் 

ஏலியன் பென்னோட ரொம்பவே வேகமான ஏலியனாவும் இருக்கு இருந்தாலும் இதுக்கு கால்கள் இல்லததால இது பாம்பு மாதிரி ஊர்ந்துபோய்தான் சண்டை போடும் இதனால சில இடங்கள்ல இதோட பவர் வேலைக்கு ஆகாது அதாவது பனிகட்டி மாதிரியான வழுக்குற இடத்தில இந்த ஏலியனால இதோட வேகத்த சரியா யூஸ் பண்ணிக்க முடியாது இதே பிரச்சினை தான் XLR8 ஏலியனுக்கும் இருக்கும் அந்த ஏலியனாலயும் பனிகட்டி மாதிரியான வழுக்குற இடத்தில வேகமா ஓட முடியாது

Warpன் பலவீனங்கள் 

இந்த வார்ப் ஏலியனுக்கு பலவீனம்ன்னு சொல்ற மாதிரி இருக்குறது ரெண்டு விஷயங்கள் தான் ஒன்னு இந்த கேரக்டரோட Skin ரொம்பவே லேசா இருக்கும் அதனால யாருச்சும் இந்த ஏலியனை Attack பண்ணிட்டா இது தோத்துபோய்டும் குறிப்பா ரொம்பவே சக்திவாய்ந்த நெருப்பு மாதிரியான பவரால அட்டாக் பண்ணுனா கண்டிப்பா தோத்து போய்ரும் அதோட யாராச்சும் இந்த ஏலியனை ஜெட்ரே மாதிரியான ஏலியன்ஸ் Energy Blast வச்சி Attack பண்ணுனாலும் இந்த ஏலியன்  ஈஸியா தோத்துபோய்டும்ன்னு சொல்லிருக்காங்க அந்தளவுக்கு இதோட ஸ்கின் லேசா இருக்கு

அடுத்த பலவீனம் இந்த ஏலியனால டைம் டிராவல் பண்ண முடிஞ்சாலும் சில நேரங்கள்ல குறிப்பிட்ட காலகட்டத்துக்குள்ளதான் டைம் டிராவல் பண்ண முடியுமாம் அதனால இதுவுமே இதோட பலவீனம்தான் அதோட இது ஸ்பீடான ஏலியனா இருந்தாலும் இதுக்கு கால்கள் கிடையாது அதனால குறிப்பிட்ட சில இடங்கள்லதான் இதோட சக்தி யூஸ் ஆகும் ஆனா இத ஏற்கனவே சொல்லிட்டதாலதான் இத லிஸ்டல சேர்க்கல

அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த ஏலியன பத்தின முழு விபரங்கள் இதேமாதிரி இன்னொரு பென் டென் ஏலியனோட Articleல அடுத்து நாம பார்க்கலாம்

நன்றி மக்கள்ஸ்

Post a Comment

0 Comments

Close Menu