ஹாய் மக்கள்ஸ்
எல்லாருக்கும் வணக்கம் இதுவரைக்கும் நம்ம ப்ளாக்ல பென்னோட நிறைய ஏலியன்ஸ் பத்தி பாத்துட்டே இருக்கோம் அந்த வரிசைல இன்னைக்கு நாம பாக்க போறது ஆன்டிகிராவிடெஸ்லாங்குற பென்னோட Unseen ஏலியன் பத்திதான் வாங்க இந்த ஏலியன் பத்தி பார்க்கலாம்
உருவான கதை
இந்த ஆன்டிகிராவிடெஸ்லா ( Antigravitesla ) ஏலியனும் ஒருவகையில பென்னோட Unseen ஏலியன் த் ஏன்னா இந்த ஏலியன இதுவரைக்கும் ஒரு தடவ மட்டும் தான் நம்ம பென் யூஸ் பண்ணிருக்காரு அதுவும் பென் டென் சீரிஸ்க்கான Ben 10 Unlimited Accessங்குற ப்ரோமோஷனல் விளம்பரத்தில் ஒரு தடவை மட்டும் யூஸ் பண்ணிருக்காரு இந்த ஏலியோட உண்மையான இனத்தோட பேரு கிராவிடோக்ஸியான் ( Gravytoxian ) அதோட இந்த ஏலியன்கள் வாழ்ந்துட்டு இருக்குற கிரகத்தோட பேரு கிராவிடோக்ஸ் ( Gravytox )
இந்த பேர எங்கேயே கேட்ட மாதிரி இருக்குன்னு யோசிக்காதீங்க இந்த ஏலியனோட பேரைதான் பென் டென் ஆம்னிவெர்ஸ்ல வந்த கிராவட்டாக்ங்குற ( Gravattack ) ஏலியனோட பேரா லைட்டா சின்ன சின்ன விஷயங்களை மாத்தி கொடுத்திருப்பாங்க பவரும் கிட்டதட்ட ஒரே மாதிரியாதான் இருக்கும் ஆனா உருவத்துல ரெண்டு பேருக்கு ரொம்பவே வித்தியாசம் இருக்கும் அதுக்கு காரணம் ஏற்கனவே இந்த ஏலியன பென் யூஸ் பண்றதா காட்டியாச்சு அதனால ஆம்னிவெர்ஸ்ல இந்த ஏலியன நல்லா டெவலப் பண்ணி காட்டலாம்ன்னு கிராவட்டாக்க உருவாக்கிருப்பாங்க சொல்லபோன ஆண்டிகிராவிடெஸ்லாதான் கிராவட்டாக்க மாறிருக்குன்னு கூட சொல்லலாம்
இப்போ மறுபடியும் ஆண்டிகிராவிடெஸ்லாகிட்டையே வருவோம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த ஏலியன பென் ஒரு ப்ரோமோஷனல் க்ளிப்லதான் யூஸ் பண்ணினாரு அந்த விளம்பரத்தில எப்படி பென் இவர யூஸ் பண்றாருன்னு முதல்ல பார்க்கலாம் அந்த விளம்பரத்தில DNAliensங்குற வில்லன் அடியாளுங்க ஜூலிய கடத்த அவங்களோட ஸ்கூலுக்கே வரானுங்க அப்போ நம்ம பென் அவங்கள காப்பாத்த ஆம்னிட்ரிக்ஸ யூஸ் பண்றாரு அப்போ அன்லாக் ஆகுற ஏலியன்தான் இந்த ஆன்டிகிராவிடெஸ்லா
இப்போ இந்த ஏலியனவச்சி டிஎன்ஏலியன்ஸ்கூட சண்டைபோட பென் ட்ரை பண்றாரு ஆனா இந்த ஏலியனோட பவர வச்சி அதுங்கள மட்டும் இல்ல அவரையே பென் அடிச்சிகிட்டு வானத்துல பறந்துபோய் விழுற மாதிரி இந்த விளம்பரம் முடியும் இந்த விளம்பரம் மொத்தமே 30 விநாடிகளுக்குள்ளதான் இருக்கும் அதுல 4-5 விநாடிகள் மட்டும்தான் இந்த ஏலியன காட்டிருப்பாங்க ஆனா அப்படி இருந்தும் இந்த ஏலியன் பென் டென் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிச்சிபோய்டுச்சி
அதனால இந்த ஏலியன் எப்போ மெயின் சீரிஸ்ல வரும்ன்னு தொடர்ந்து பென் டென் ரசிகர்கள் கேட்டுட்டே இருந்தாங்க அதுக்கு டெர்ரிக் ஒரு விஷயத்தை சொல்லிருந்தாரு அது என்னன்னா Ghostfreak மாதிரியே இந்த ஏலியனோட பவரையும் பென்னால முழுசா கட்டுபடுத்த முடியல அதனாலதான் பென் இந்த ஏலியனை யூஸ் பண்ணவே இல்லன்னு சொல்லி பிரச்சினைய முடிச்சி வச்சிட்டாரு பொதுவா எதாச்சும் ஒரு விஷயத்தை தொடர்ந்து கேட்டுட்டே இருந்தா பென் டென் டீம் இந்த மாதிரி ஒரு விளக்கத்த கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிடுவாங்க
அதுமட்டுமல்லாம இந்த ஏலியன் இப்போ வரைக்கும் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல இருக்குறதால எப்ப வேணும்னாலும் இந்த ஏலியனால நம்மளால சீரிஸ்ல பார்க்க முடியும் அதுக்கான சான்ஸ் அதிகமாவே இருக்குன்னு சொல்லிருக்காரு ஒருவேள இது எதிர்காலத்தில நடக்கலாம் ஆனா கிராவிட்டிய கண்ட்ரோல் பண்ற பவரோட நிறைய ஏலியன்ஸ ஏற்கனவே பாத்துட்டோம் அதனால இந்த ஏலியன கொண்டு வந்தா பென் டென் ரசிகர்கள் ஏத்துக்குவாங்களான்னு கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு
ஆண்டிகிராவிடொஸ்லா பற்றிய உண்மைகள்
இந்த ஆன்டிகிராவிடெஸ்லா ஏலியன் கிட்டத்தட்ட 8 அடி உயரத்திலும் 140KG எடையோடவும் இருப்பாரு இவரோட உருவம் பாக்குறதுக்கு மனுஷங்க மாதிரியே இருந்தாலும் இவரும் ஒரு ஏலியன் இனம்தான்னு டெர்ரிக் சொல்லிருக்காரு
இந்த ஏலியன்களோட டிசைன் 1800 வருஷங்கள்ல வாழ்ந்த மனுஷங்களோட கலச்சாரம் ,உடைகளை மையப்படுத்தி உருவாக்கிருக்காங்களாம் ஆனா இந்த ஏலியனோட இனத்த சேர்ந்தவங்க யூஸ் பண்ற டிவைஸ் எல்லாமே ரொம்பவே அட்வான்ஸான டெக்னாலஜியோட இருக்குற டிவைஸ்களாதான் இருக்கும்ன்னு கன்பார்ம் பண்ணிருக்காங்க ஏலியன்ஸ் பாக்குறதுக்கு கொஞ்சம் மொக்கயா இருந்தாலும் இவங்க யூஸ் பண்ற டெக்னாலஜி எல்லாமே ஆஸ்மித் யூஸ் பண்ற டெக்னாலஜிக்கு சமமா இருக்குமாம்
இவரோட பெயரை இரண்டு விஷயங்கள ஒன்னா சேர்த்துருக்காங்க ஒன்னு அன்டிகிராவிடி அதாவது புவியீர்ப்பு சக்திய எதிரான சக்தி இது இந்த ஆண்டிகிராவிடெஸ்லா ஏலியனோட பவருக்கு ஏத்தமாதிரி சொல்லிருக்காங்க அடுத்ததா டெஸ்லாங்குற சயின்டிஸ்டோட பெயர் இந்த பெயர எதுக்கு இந்த ஏலியனுக்கு வச்சிருக்காங்கன்னா இந்த டெஸ்லா உலக மக்களாள கொண்டாடபட்டுருக்கு வேண்டிய ஒரு சயின்டிஸ்ட் ஆனா எடிசன் பண்ணுன தில்லு முல்லுங்களால வரலாறுலேர்ந்து மறைக்கப்பட்ட ஒரு சயின்டிஸ்ட் ஆகிட்டாரு
ஆனா இப்போ இவர உலகமக்கள் கொண்டாடிட்டுதான் இருந்திருக்காங்க அதோட இவரோட வாழ்க்கைய மையமா வச்சி படம்கூட வந்திருக்கு இதனால இவருக்கு மரியாதை செலுத்தும் விதமா இவரோட பேர இந்த ஏலியனுக்கு வச்சிருக்காங்க இதனால இந்த ரெண்டு விஷயங்களையும் சேர்த்து வச்சிதான் இந்த ஏலியனுக்கான பெயர் உருவாக்கப்பட்டிருக்கு
அதோட இந்த ஏலியனோட உருவ அமைப்பு மனுஷங்களோட ஒத்து போறதுக்கு இன்னொரு கான்ஸ்ஸ்பிரசி தியரியையும் சேர்த்து ஒரு விஷயம் சொல்றாங்க அதாவது இந்த ஏலியனோட டிஎன்ஏ நிக்கோலா டெஸ்லாகிட்டேர்ந்துதான் எடுக்கப்பட்டிருக்கு அதுமட்டுமல்லாம டெஸ்லா ஒரு ஏலியன் அப்படின்னு ஒரு தியரி சொல்லப்பட்டிருக்கு ஒருவேளை இது உண்மையா கூட இருக்கலாம் எதுக்காகன்னா இப்போ நாம யூஸ் பண்ற மொபைல் போன பத்தி பல வருஷங்களுக்கு முன்னாடியே கனவு கண்டவர் நிக்கோலா டெஸ்லா அவர் மட்டும் உயிரோட இருந்திருந்தா நாம இன்னும் 30 வருஷத்துக்கு முன்னாடியே ஸ்மார்ட் போன் யூஸ் பண்ணிருப்போம்
இந்த நூற்றாண்டுல பறக்குற கார் உருவாக்கிருக்ககூட வாய்ப்பு இருக்கு அந்தளவுக்கு எதிர்கால டெக்னாலஜி பத்தி கனவு கண்டிருக்குறாரு டெஸ்லா இவர பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே போகலாம் அதோட இந்த ஏலியன் நிக்கோலா டெஸ்லாவோட டிஎன்ஏலேர்ந்துதான் வந்திருக்குன்னு சொல்றதுக்கு இன்னொரு ஆதாரம் இவரோட THEMEன்னு கூட சொல்லலாம் இவரோட உருவ அமைப்பு 80களில் வாழ்ந்தவங்க மாதிரியும் டெக்னாலஜி ரொம்பவே அட்வான்ஸா இருக்குறதையும் கூட சொல்லலாம்
Antigraviteslaவின் சக்திகள்
ஆன்டிகிராவிடெஸ்லாவோட மிக முக்கியமான சக்தி Gravity Manipulation இந்த பவரோட பென்கிட்ட இருக்குற மூனாவது ஏலியன் இவர் இதுக்கு முன்னாடி நாம பாத்த Hippopotamass அப்புறம் Graviattack க்கும் இதே மாதிரி சக்திய யூஸ் பண்ற ஏலியன்ஸ்தான் இதனால தான் ஹிப்போபோடமாஸ் ஏலியன் பென் டென் சீரிஸ்ல வரதுக்கு வாய்ப்பு கம்மியா இருக்குன்னு சொல்றாங்க
ஆனா இந்த ஒவ்வொரு ஏலியன்ஸூம் அதோட சக்திய பூஸ் பண்றதுல நிறைய வித்தியாசங்கள பார்க்கமுடியும் அதனால இந்த ஒவ்வொரு ஏலியன்ஸூம் ஒவ்வொரு வகையில தனித்துவமா தெரியும் இப்போ நாம ஆன்டிகிராவிடெஸ்லா பத்தியே பார்க்கலாம் இந்த ஆன்டிகிராவிடெஸ்லா ப்ரோமோஷனல் விளம்பரத்தில தன்னோட சக்திய வச்சி அவர சுத்தி இருக்குற பொருட்களையும் டிஎன்ஏ ஏலியன்ஸையும் பறக்கவைக்குற மாதிரி காட்டிருப்பாங்க ஆனா அந்த பவர இவரையும் பறக்கவைச்சி அதானால இவர் பறந்து போய் கீழ விழுந்திடுவாரு இதனாலதான் பென் இவர யூஸ் பண்றதே இல்ல
அதோட இந்த ஏலியனுக்கு தன்ன சுத்தி பாதுகாப்பு வளையம் உருவாக்குற சக்தியும் இருக்கு இதவச்சி எதிரிகளை இவர நெருங்கவிடாம வச்சி சண்டை போட்டு தோற்கடிக்க முடியும் ஆனா இந்த பாதுகாப்பு வளையம் சின்ன லெவல் வில்லன்களை மட்டும்தான் தடுக்கும் பெரிய லெவல் வில்லன்களை தடுக்க முடியாது எப்பவும் போல நம்ம வில்கேக்ஸயே கம்பேர் பண்ணி பார்க்கலாம் வில்கேஸ்கூட இவர் சண்டை போடும் போது இவர சுத்தி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி சண்டை போட்டா இவரால வில்கேக்ஸ ஓரளவுக்கு தடுக்க முடியுமாம்
இன்னும் சிம்பிளா சொல்லனும்னா க்வென் தன்னுடைய மேஜிக் பவர வச்சி ஒரு பாதுகாப்பு வளையம் உருவாக்குவாங்கள அது மாதிரிதான் ஆனா அத எப்படி உடைக்க முடியும்ன்னு பென் டென் ஏலியன் ஃபோர்ஸ் அப்புறம் பென் டென் அல்டிமேட் ஏலியன்ஸ் சீரிஸ் பாத்தவங்களுக்கு நல்லாவே தெரியும் அதுக்கு சமமான சக்திதான் இந்த ஆன்டிகிராவிடெஸ்லாவோட பாதுகாப்பு வளையங்களும்ன்னு சொல்லிருக்காங்க
இவரால தன்னோட பவர யூஸ் பண்ணி பறக்கவும் முடியும் அதோட தன்னோட உருவத்தை எனர்ஜியா மாத்தி ரொம்ப வேகமா டிராவல் பண்ண முடியும் இந்த பவர இதுக்கு முன்னாடி Buzzshock ஏலியன்கிட்டதான் காட்டி இருப்பாங்க அதுக்கு அப்புறம் இந்த பவர் இவர்கிட்டதான் இருக்கு
இது எல்லாத்தையும் விட இவரால இடி மின்னலை கட்டுபடுத்தவும் முடியும் அதாவது Weather Manipulation பண்ண முடியும் அதவச்சி இடி அல்லது மின்னல் சக்தியை தனக்குள்ள உள்வாங்கி அதவச்சி எதிரிகளை தாக்க முடியும் கிட்டதட்ட மார்வெல்ல வர்ற தோர் மாதிரி இந்த ஏலியனுக்கு Energy Absorption பவரும் இருக்கு இதவச்சி எப்படிபட்ட பவரையும் முழுசா உள்வாங்கி அத வச்சக எதிரிகளை அழிக்கவும் முடியும் ஆனா இதுக்கு ஒரு லிமிட் இருக்கு அததாண்டி இவரால சக்திய உள்வாங்க முடியாது
அதோட இவர் சிரிச்ச முகத்தோட இருக்குற ஏலியன் மாதிரி இருந்தாலும் RATH மாதிரி ரொம்பவே கோவக்கார ஏலியன் எல்லா விஷயத்துக்கும் அடிக்கடி கோவப்படுவாராம் ஆனால் சில நேரத்தில அமைதியாவும் யோசிச்சு சண்டை போடுவாரு
Antigraviteslaவின் பலவீனங்கள்
இந்த ஏலியனுக்கு இரண்டு பலவீனங்கள் இருக்கு ஒன்னு இவரோட பவருக்கு சில லிமிட்ஸ் இருக்கும் அததாண்டி இவரால ஒன்னும் பண்ணமுடியாது அதானால இவரோட லிமிட்ட தாண்டுன பெரிய வில்லன் யாராவது இவர்கூட சண்டை போட ட்ரை பண்ணுனா இவர தோற்கடிக்க முடியும்
ஆனா அவ்ளோ ஈஸியா இவர் தோத்துபோகமாட்டாராம் ஏன்னா Rath ஏலியன் மாதிரி இவருக்கும் கோவம் அதிகமா வரும்ன்னு சொல்லிருந்தேன்ல அதனால இவரால தோல்விய ஒத்துக்கமுடியாம தொடர்ந்து சண்டை போட்டுட்டே இருப்பாருன்னு சொல்லிருக்காங்க
இந்த ஏலியனோட அடுத்த பலவீனம் இவரோட பவரை பென்னால முழுசா கட்டுபடுத்த முடியல பென் எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவரால இந்த ஏலியனோட சக்திகளை புரிஞ்சிக்க முடியல அதனால இதுவும் இவரோட பலவீனம் ன்னு சொல்லாலாம் இந்த இரண்டு பலவீனங்கள தவிர வேற எதுவும் ஆன்டிகிராவிடெஸ்லாவுக்கு இல்ல
அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் ஆன்டிகிராவிடெஸ்லா பத்தின முழு விளக்கம் இந்த ஆர்டிகிள் உங்களுக்கு பிடிச்சிருந்தா கமெண்ட்ல சொல்லிட்டு போங்க அடுத்த அர்டிகிள்ல பென்னோட சூப்பரான இன்னொரு ஏலியன் பத்தி பார்க்கலாம்
நன்றி மக்கள்ஸ்
Copyright (c) 2021 Tamil Cartoons Fandom All Right Reseved
0 Comments
Thanks For Visiting Our Blog