Google Adsense Code

Shellhead Origin பற்றி தமிழில் Shellhead உருவான கதை ( Ben 10 Aliens Part - 7 )

ஹாய் மக்கள்ஸ் 

இந்த போஸ்ட்ல நாம பார்க்க போற ஏலியனோட பேரு  Shellhead இந்த ஏலியனும் பென்னோட Unseen ஏலியன் தான் இந்த ஏலியன் பத்தி பென் டென் சீரிஸ்ல என்ன தகவல்கள்லாம் கொடுத்திருக்காங்கன்னு இப்போ முழுசா பார்த்திடலாம்

உருவான கதை

இந்த ஷெல்ஹெட் ஏலியனோட உண்மையான இனத்தோட பேரு மோர்டோஸியன் ( Mortozian ) இந்த ஏலியன்ஸ்லாம் வாழ்ந்துட்டு இருக்குற கிரகத்தோட பேரு மோர்டோஸ் ( Mortoz ) இந்த கிரகம் முழுக்க முழுக்க வெந்நீர் ஊற்றுகளால நிரம்பிய கிரகம்ன்னு சொல்லிருக்காங்க அதோட இந்த கிரகம் பூமியவிட 2 மடங்கு பெரிசாம் அதனால மனுஷங்க இல்ல வாழுறதுக்கு சான்ஸ் இருந்துச்சுன்னு எதிர்காலத்தில மனுஷங்க இந்த கிரகத்துக்கு போய்ட்டாங்கன்னு சில தகவல்கள் கிடைச்சிருக்கு அது மட்டுமில்லாம இந்த கிரகத்திலும் பனிமலை, எரிமலை மாதிரியான இடங்களும் இருக்குமாம் கிட்டத்தட்ட பூமியோட ஒரு கார்பன் காப்பிதான் இந்த மோர்டோஸ் கிரகம்

அடுத்ததா இந்த ஷெல்ஹெட் ஏலியனும் சாண்ட் பாக்ஸ் ,ஸ்னேக் பிட் ஏலியன்ஸ்கூட Ben 10000 ஆல் Ken க்கு கொடுக்கப்பட்ட ஏலியன்ல ஒன்னு  இந்த ஷெல்ஹெட்ட ஏலியனை தவிர மத்த ஏலியன்ஸ் பத்தி நம்ம Blogல பேசிட்டோம் அதெல்லாம் படிச்சு பாருங்க அப்போ இந்த ஏலியன் பத்தியும் ஓரளவுக்கு புரியவரும்

அதோட இந்த மூனு ஏலியன்ஸூம் படு மொக்கையான ஏலியன்ஸ்ன்னு Ken சொல்லிருப்பாரு ஆனா Ken எதனால இப்படி இந்த ஏலியன்ஸ்ஸ மொக்கைன்னு சொல்றாருன்னு இதுக்கு முன்னாடி Snakepit ,Sand Box க்கு தனித்தனி போஸ்ட் போட்ருக்கேன்ல அத படிச்சி பாத்தாலே புரியும் இதுங்க எல்லாமே அட்டாக் பண்றதுக்கான ஏலியனே கிடையாது சும்மா எதிரிகிட்டேர்ந்து தப்பிச்சு ஓடுறதுக்கும் எதிரியால தனக்கு எதுவும் ஆகக்கூடாதுங்குறதுக்கும் கென்னுக்கு கொடுக்கப்பட்ட ஏலியன்ஸ் தான் இப்போ இந்த ஷெல்ஹெட் ஏலியனை பத்தி பார்க்கலாம்

இந்த ஷெல்ஹெட் ஏலியனுக்கான Designஅ Tom Perkins 2020 ல பென் டென் ரசிகர்களுக்காக Post பண்ணினாரு இந்த ஏலியனுக்கான முதல் Designல இது ஒரு Turtle மாதிரியான ஏலியனா காட்டனும்னு முடிவு பண்ணிருந்தாங்க ஆனா பென் டென் யுனிவர்ஸ்ல Adwaita ,Terraspin ,Snakepit மாதிரியான கேரக்டர்ஸ் ஏற்கனவே Turtle மாதிரியான உருவத்துல இருந்ததால இந்த ஏலியனோட உருவத்தை பூச்சி மாதிரி மாத்திட்டாங்க அதுவும் கொஞ்சம் கூட இதுக்கு முன்னாடி சொன்ன விஷயங்களோட ஒத்துபோகவே இல்ல

இதபத்தி பென் டென் ரசிகர்கள் Tom Perkins கிட்ட கேட்ருந்தாங்க எதுக்காக ஷெல்ஹெட்டோட Design பென் டென் சீரிஸ்ல சொன்னதவிட வித்தியாசமா இருக்குன்னு கேட்ருந்தாங்க ஏன்னா Ken இந்த ஏலியன் அவரோட Omnitrixல இருக்குன்னு தெரிஞ்சதும் அது Turtle மாதிரி ஓடுகுள்ள ஒழிஞ்சிக்குற ஏலியன்னு சொல்லிருப்பாரு ஆனா Tom Perkins Design ரொம்பவே மாறி இருந்ததால ரசிகர்கர் இந்த கேள்விய கேட்டாங்க

அதுக்குTom Perkins இதுக்கு முன்னாடி இருந்த ப்ளான் படி ஷெல்ஹெட் Turtle மாதிரியான ஏலியன் தான் ஆனா அத அப்படியே உருவாக்குனா Terraspin ஏலியனோட இன்னொரு வெர்ஷன் மாதிரி இருக்கும்ன்னு Design அ மாத்திட்டதா சொல்லிட்டாரு
இந்த ஏலியனை இதுவரைக்கும் Ben 10000 மூனு தடவை மட்டும்தான் Use பண்ணிருக்காராம் அதுவும் Off Screenல மட்டும்தான் Use பண்ணிருக்காரு ஆனா Ken இந்த ஏலியனை ஒரு தடவ கூட Use பண்ணினதே இல்ல Ken ஓட Omnitrixல இருந்தும் அவர்‌ Transform ஆகாத ஒரே ஏலியன் இந்த ஷெல்ஹெட் மட்டும்தான் அந்த அளவுக்கு இந்த ஏலியன் படுமொக்கையா இருக்கும் ஏன்னா ஸ்னேக்பிட்டால எதிரிகளை கல்லா மாற்ற முடியும் சான்ட் பாக்ஸால மணல்புயல்களை உருவாக்க முடியும் ஆனா இந்த ஏலியனுக்கு அப்படிபட்ட எந்த ஸ்பெஷல் பவருமே கிடையாது அதுதான் இத கென் வெறுக்குறதுக்கான முக்கியமான காரணம்

ஷெல்ஹெட் பற்றிய உண்மைகள்

இந்த ஏலியனுக்கான Design அ  பென்னோட CANNON BOLT ஏலியனையும் Pill Bug ங்குற பூச்சியையும் கலந்துதான் உருவாக்கி இருக்காங்க ஆனா கான்னன் போல்ட்டோட எந்த பவரும் இந்த ஏலியனுக்கு இருக்காது
இந்த ஏலியன் 9 அடி உயரமான ஏலியன் இதோட எடை 300 கிலோ வரைக்கும் இருக்கும் ஆனா இந்த ஏலியனுக்கு இதோட எடையால எந்த பிரச்சனையும் இல்லை ஏன்னா இதுக்கு Stamina ரொம்பவே அதிகம் அதனால ரொம்பவே வேகமா இருக்கும் ஆனா அந்த வேகத்தை தப்பிச்சி ஓட மட்டும்தான் யூஸ் பண்ணிக்கும் ஏன்னா ரொம்பவே பயந்த சுபாவம் இருக்குற ஏலியன்

இந்த ஷெல்ஹெட்க்கு நீர்யானை மாதிரி பெரிய வாய் இருக்கும் ஆனா அதனால எந்த பிரயோஜனமும் இல்லை ஏன்னா இதோட பற்கள் Sharpஅ இருந்தாலும் இதோட பிடிலேர்ந்து யாரையும் ரொம்ப ஈஸியாவே தப்பிக்க முடியும் அதோட இந்த ஏலியனால டைட்டா யாரையும் பிடிச்சிக்கவும் முடியாது மொத்தத்துல இந்த ஏலியன் சண்டை போடுறதுக்கு சுத்தமே ஏத்த ஏலியனே கிடையாது

Shellheadன் சக்திகள் :
இந்த ஏலியனோட பேருக்கு ஏத்த மாதிரிதான் இதோட சக்தியும் இருக்கும் அதுமட்டுமல்லாம இதோட மொத்த சக்திகளுமே எதிரிங்கிட்டேர்ந்து ஒளிஞ்சி தப்பிக்குறதுக்கு மட்டும்தான் யூஸ் ஆகும்

ஷெல்ஹெட்டோட முக்கியமான சக்தி எதிரிங்க யாராவது இத Attack பண்ணுனா Turtle மாதிரி இதோட கை கால் தலைன்னு எல்லாத்தையும் உள்ள இழுத்துகிட்டு ஒரு Ball மாதிரியான உருவத்துக்கு போய்டும் அந்த டைம்ல எதிரியால இதோட ஓடை உடைக்க முடியாது

ஏன்னா இதோட ஓடு அந்த அளவுக்கு ஸ்ட்ராங்க இருக்கும் இதோட ஓட்டை Nuclear Bomb ஆல கூட ஒன்னும் பண்ண முடியாது அதே மாதிரி Ben 10 Classic சீரிஸ்ல Ben 10000 Vilgax கூட சண்டை போடும் போது பென்னோட எல்லா ஏலியன்களையும் தோற்கடிக்குற வழிய Dr Animo மூலமா Vilgax தெரிஞ்சிகிட்டதா சொல்லிருப்பாரு

ஆனா அப்படி Vilgax முயற்சி பண்ணிருந்தாலும் தோற்கடிச்சிருக்க முடியாத ஏலியன்னா அதுல இந்த ஷெல்ஹெட்டும் ஒன்னுன்னு சொல்றாங்க ஆனா ஏற்கனவே சொன்ன மாதிரி இதோட சக்திகள் எதிரிங்ககிட்டேர்ந்து தப்பிக்க மட்டும்தான் யூஸ் ஆகும்ங்குளதாலதான் Ben 10000 இந்த ஏலியன யூஸ் பண்ணவே இல்ல

இந்த ஏலியனுக்கு Telescopic Vision சக்தியும் இருக்கு ஆனா இதையும் இந்த ஏலியன் ஒழிஞ்சிக்குறதுக்கு பக்காவான இடம் எங்க இருக்குன்னு தெரிஞ்சிக்கதான் யூஸ் பண்ணுமாம்

அடுத்ததா இந்த ஷெல்ஹெட்டால ரொம்ப வேகமா தரையை தோண்ட முடியும் ஆனா இந்த சக்தியையும் இந்த ஏலியன் மண்ணுக்கு அடில போய் ஒளிஞ்சிக்க மட்டும்தான் யூஸ் பண்ணும் இப்போ புரியதா இந்த ஏலியன எதுக்காக Ken யூஸ் பண்ணவே இல்லன்னு எப்ப பார்த்தாலும் ஓடனும் ஒளியனும்ன்னு மட்டுமே ஒரு ஏலியன் யோசிச்சுட்டு இருந்தா அதவச்சி என்னதான் பண்ண முடியும்

அதோட இந்த ஏலியன பத்தி Ken சொல்லும் போது ஓடுக்குள்ள ஒழிஞ்சிக்குற சக்தி மட்டுமே இருக்குற ஏலியன்னு மட்டும்தான் சொல்லிருப்பாரு ஏன்னா அந்த டைம்ல அதுக்கு அந்த பவர மட்டும்தான் கொடுத்திருந்தாங்க அதுப்புறம் இந்த ஏலியனுக்குக்கு இன்னும் புது புது சக்திகள் கொடுப்பட்டுச்சு  அது எல்லாத்தையும் Tom Perkins இந்த ஏலியனோட Design அ போஸ்ட் பண்ணிட்டு இந்த ஏலியனோட மொத்த சக்திகள் பத்தியும் விளக்கம் கொடுத்திருந்தாரு அததான் மேல சொல்லிருக்கேன்

Shellheadன் பலவீனங்கள் :
இந்த ஏலியனுக்கு பலவீனம்ன்னு சொல்ற மாதிரி பெரிசா ஒன்னுமே கிடையாது ஏன்னா இந்த ஏலியன வச்சி பென் 10000  யாராகூடையும் சண்டை ரொம்ப நேரம் போட்டது கிடையாது எதிரியோட அட்டாக்க தடுக்கவும் தாங்கவும் மட்டும்தான் இந்த ஏலியனா ஒரு செகண்ட் மட்டும் மாறிட்டு திரும்பவும் வேற ஏலியனா மாறி சண்டை போடுவாராம் சொல்லபோனா இந்த ஏலியன அதுக்கு கூட யூஸ் பண்ண தேவை இல்ல ஏன்னா கான்னன் போல்ட் ஏலியனே இந்த மாதிரி பென்ன வில்லன்களோட அட்டாக்லேர்ந்து காப்பாத்திடும் அதுக்குகூட இந்த ஏலியன் லாய்க்கு இல்லைன்னு டாம் பெர்கின்ஸே கிண்டல் பண்ணிருந்தாருன்னா இந்த ஏலியன் எப்படிபட்ட மொக்கை ஏலியன்னு பாத்துக்கோங்க

அடுத்து இந்த ஏலியன் கரப்பான்பூச்சி மாதிரி திருப்பி போட்டுட்டா அதால நிமிர முடியாம கஷ்டபடும்ன்னு ஒரு பலவீனம் இருக்குறதா சொல்லிருக்காங்க மத்தபடி இந்த ஏலியனுக்கு எந்த பலவீனங்களும் இல்ல
இந்த கேரக்டர் Design க்கு ஏத்த மாதிரி நல்ல பவர்ஸ் கொடுத்து இந்த ஏலியன Reboot க்கு அப்புறம் பென் டென் யுனிவர்சஸ்ல கொண்டு வரலாம்ன்னு Plan இருக்குற சில தகவல்கள் கிடைச்சிருக்கு ஆனா இந்த மாதிரி ஒரு ஏலியனை Develop பண்ணி அத யூஸ் பண்ணாமலே விட்ட லிஸ்ட்டே பெருசா இருக்கு அதனால இந்த ஏலியன் பென் டென் சீரிஸ்ல வருமாங்குறது சந்தேகம் தான்

ஒருவேளை அப்படி இந்த ஏலியன மறுபடியும் பென் டென் சீரிஸ்ல ரீமாடல் பண்ணி கொண்டு வந்தா அதுக்கு என்ன மாதிரியான பவர்ஸ்லாம் கொடுப்பீங்கன்னு டாம் பெர்கின்ஸ்கிட்ட கேட்டதுக்கு முதல்ல ஏலியன ரீமடல் பண்ணுனா ஃபோர் ஆர்ம்ஸ் மாதிரி இதால நேர நிக்குறமாதிரி ஆறு கைகளோட காட்டி ஃபோர் ஆர்ம்ஸ் மாதிரி சண்டை போடுற ஏலியனா மாத்திடுவேன்னு சொல்லிருந்தாரு ஏன்னா இந்த ஏலியனோட FANMADE DESIGNS ரொம்பவே சூப்பரா இருக்கும் அதோட இந்த ஏலியனோட தலையில ஒரு ROCKET CANNON மாதிரி உருவாக்கிருந்தாங்க அதவச்சி எதிரிகளை இந்த ஏலியன் தாக்கும்ங்குற மாதிரி டிசைன் உருவாக்கிருந்தாங்க

அந்த டிசைன் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்ததுன்னு சொல்லிருந்தாரு அதேமாதிரி டாமும் இந்த ஏலியன ரீமாடல் பண்ணனும்னு ஆசைப்பட்டாராம் அடுத்ததா இதுக்கு பவரா டாம் கொடுக்க ப்ளான் பண்ணிருந்ததா அவரே சொன்ன விஷயங்கள் என்னன்னா முதல்ல இந்த ஏலியனால எந்தவொரு எனர்ஜி அட்டாக்கா இருந்தாலும் அந்த REFLECT பண்ணுற பவர கொடுக்கலாம்ன்னு முடிவு பண்ணிருந்ததா சொல்லிருக்காரு

அடுத்ததா இந்த ஏலியனுக்கு உடல் பலத்தை பல மடங்கா பெருக்கி ரொம்பவே பலசாலியான ஏலியனா கொடுக்கலாம்ங்குற ஐடியா டாம்க்கு இருந்திருக்கு அதாவது ஃபோர் ஆர்ம்ஸோட ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த ஏலியனுக்குதான் உருவம் உயரமாகவும் பலம் அதிகமாகவும் இருக்கனுங்குற ஐடியா இருந்துச்சாம் அதாவது பென் டென் ஏலியன் ஃபோர்ஸ்ல ஹூமங்கோசோர் எப்படி பலமான ஏலியனா இருக்குதோ அதோட இடத்த நிரப்ப இந்த ஏலியன உபயோகிக்கலாம்ங்குற ஐடியா இருந்துச்சுன்னு சொல்லிருக்காங்க

அடுத்ததா இந்த ஏலியனால ரொம்ப தூரத்துக்கு எகிறி குதிக்க முடியுற மாதிரியான சக்திய கொடுக்கலாம்ன்னு ப்ளான் பண்ணிருக்காரு இதுவும் ஃபோர் ஆர்ம்ஸ் அப்புறம் ஹூமங்கோசார் ஏலியனுக்கு இருக்குற பவர்தான் சொல்லபோன இந்த பவர ஃபோர் ஆர்ம்ஸ் தான் சரியா யூஸ் பண்ணிருப்பாரு அவரவிட இந்த ஷெல் ஹெட் ஏலியன் தான் இந்த பவர சரியா யூஸ் பண்ணிருக்குற மாதிரி காட்டலாம்ங்குற ஐடியாவும் இருந்துருக்கு

இத எல்லாத்தையும் விட முக்கியமா இந்த ஏலியன எவ்ளோதான் அட்டாக் பண்ணுனாலும் இதுக்கு கொஞ்சம் கூட வலிக்கவே வலிக்காத மாதிரி இந்த ஏலியன காட்டுறதுக்கு ப்ளான் பண்ணிருந்திருக்காங்க சொல்லபோன இந்த பவர்லாம் கொடுக்கனும் டாம் சொல்றதுக்கு முன்னாடியே இந்த பவர் இந்த ஏலியனுக்கு கொடுக்கப்பட்டுதான் இருந்துச்சு ஆனா இவ்ளோ ப்ளான் பண்ணியும் எல்லாமே வெறும் ப்ளானோட முடிஞ்சி போய்ருச்சு இதுக்காக டாம் பெர்கின்ஸ் ரொம்பவே வருத்தப்பட்டிருந்தாரு மொத்தத்துல இந்த ஏலியன் மட்டும் ரீமடல் பண்ணி பென் டென் சீரிஸ்ல வந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்

அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த ஷெல் ஹெட் ஏலியன் பத்தின முழு விளக்கம் அதோட இந்தஷெல் ஹெட் ஏலியன் யாருக்கெல்லாம் பிடிச்சிருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க அடுத்த போஸ்ட்ல சூப்பரான இன்னொரு பென் டென் ஏலியன் பத்தின முழு விளக்கத்தை பார்க்கலாம்

நன்றி மக்கள்ஸ்

Post a Comment

0 Comments

Close Menu