Google Adsense Code

Sand Box Origin பற்றி தமிழில் Sandbox உருவான கதை ( Ben 10 Aliens Part - 5 )

 ஹாய் மக்கள்ஸ்

 இதுவரைக்கும் பென்னோட  ரெண்டு Unseen ஏலியன்ஸ் பத்தி நம்ம Blogல பாத்தாச்சு அதனால இந்த போஸ்ட்ல Sand Box ங்குற பென்னோட அடுத்த Unseen ஏலியன்ஸ் பத்தி பார்க்கலாம்

உருவான கதை

இந்த சாண்ட்பாக்ஸ் ஏலியனும் இதுவரைக்கும் பென் யூஸ் பண்ணாத ஏலியன்ங்குறதால இந்த ஏலியனோட இனம் பத்தியும் கிரகம் பத்தியும் தெளிவான பதில் இதுவரைக்கும் எதுவுமே இல்லை இந்த ஏலியனை முதல்ல பென் 10000 தான் Use பண்றமாதிரி காட்டிருப்பாங்க அதோட பொன்னோய பையன் Ken னோட Omnitrix லயும் இந்த சான்ட் பாக்ஸ் ஏலியனும் இது கூடவே Shell Head ,Snakepit இருக்குன்னு சொல்லிருப்பாங்க ஏற்கனவே போன போஸ்ட்ல இந்த ஏலியன்கள் பத்தி நான் சொல்லிருப்பேன் அந்த ஏலியன்ஸ பத்தி அடுத்தடுத்த போஸ்ட்ஸ்ல நாம விரிவா பாக்கலாம்

இப்போ இந்த சான்ட் பாக்ஸ் ஏலியன் பத்தி மட்டும் பார்க்கலாம் இந்த சான்ட் பாக்ஸ் ஏலியன் ரொம்பவே மொக்கையான ஏலியன்னு பென்னோட பையன் கென் சொல்லிருப்பான் அதுக்கு காரணம் இது ரொம்பவே மெதுவா நகரக்கூடிய ஏலியன் அதுக்கு காரணம் இதுக்கு காலே கிடையாது மணல் மாதிரியான உருவம் மாதிரிதான் இருக்கும் கிட்டத்தட்ட அப்கிரேட் ஏலியன் மாதிரின்னு சொல்லலாம் ஆனா அப்கிரேட் ஏலியனுக்கு கால்கள அதுவா உருவாக்குற மாதிரி காட்டிருப்பாங்க ஆனா இந்த சான்ட் பாக்ஸ் ஏலியனுக்கு அப்படிபட்ட உடலமைப்பும் கிடையாது 

அதனால இந்த ஏலியனோட வேகம் ரொம்பவே கம்மியா இருக்கும் அதோட இந்த ஏலியனுக்கு Ultimate Form இருக்குன்னு Tom Perkins Confirm பண்ணிருக்காரு அதுமூலமா இந்த ஏலியனுக்கு வேகமும் கிடைச்சிரும் ஏன்னா அல்டிமேட் ஃபார்ம்ல இந்த ஏலியனுக்கு கால்கள் கிடைச்சிரும் அதோட இந்த ஏலியனோட கலரும் கருப்பு கலரா மாறிடும் கிட்டத்தட்ட அப்கிரேட் மாதிரியான உருவத்துக்கு வந்திரும் ஆனா முழுசா கருப்பா மாறிடும் அதோட இதுக்கு தன்னோட உருவத்தை நினைச்ச மாதிரி மாத்திக்குற சக்தியும் கிடைச்சிரும் 

அதாவது எந்த ஆயதமா வேணும்னாலும் அல்டிமேட் சான்ட் பாக்ஸால மாறிக்க முடியும் வேபிக் ஏலியனோட உருவத்துக்கு கூட இதால தன்ன மாத்திக்க முடியும் அப்படி மாறுறதால யாராலையும் இத தோற்கடிக்க முடியாதுன்னு சொல்ல முடியாது ஏன்னா இந்த ஏலியன தோற்கடிக்குறது ரொம்ப ரொம்ப ஈஸிதான் அதனால்தான் இந்த ஏலியன பென் டென் சீரிஸ்ல நாம பார்க்க முடியல  

இந்த சான்ட் பாக்ஸ் ஏலியனும் பென் டெனோட காமிக்ஸ்ல ஒரு தடவ வந்திருக்கு ஆனா அந்த காமிக்ல இதோட உருவமும் சக்திகளும் மொத்தமா வேறமாதிரி இருந்துச்சு அதோட இந்த ஏலியன அந்த காமிக்ல யூஸ் பண்ணுனது எதிர்கால பென்தான் ( Ben 10000 Aka Future Ben ) ஏன்னா இந்த ஏலியன் அவர்கிட்ட மட்டும்தான் இப்போதைக்கு யூஸ் பண்ற லெவல்ல இருக்கு 

அவருக்கு அடுத்ததா அவரோட பையனான கென்னுக்குதான் இந்த ஏலியன் கிடைச்சிருக்கும் அதுலயும் இந்த சான்ட் பாக்ஸ் பென்னுக்கு பிடிச்ச ஏலியன்கள்ள ஒன்னா ரொம்பநாளா இருந்திருக்கு அந்த காரணத்தாலதான் இந்த ஏலியன கென்னுக்கு பிறந்தநாள் பரிசா எதிர்கால பென் கொடுத்தாரு அப்படி என்னதான் இந்த ஏலியனுக்கு ஸ்பெஷலா இருக்குன்னு பாத்தா எதிர்கால பென்னோட உயிரையே நிறைய தடவ இந்த ஏலியன் காப்பாத்திருக்கு

அதுக்கு காரணம் இந்த ஏலியன அழிக்குறதுக்கு எந்த ஒரு ஏலியனுக்கும் பவரே இல்ல சொல்லபோன எதிர்கால பென் ஆம்னிட்ரிக்ஸ மாஸ்டர் கன்ட்ரோல் பண்ணி யூஸ் பண்றதால இந்த ஏலியன் உருவத்தை எடுத்துட்டா எத்தனை வருஷம் வேணும்னாலும் உயிரோட இருக்க முடியும் கிட்டதட்ட ஏலியன் எக்ஸ் மாதிரின்னு சொல்லலாம் அதனாலதான் பென்னுக்கு பிடிச்ச ஏலியனோட லிஸ்ட்ல இந்த ஏலியனும் இருந்துச்சு

ஆனா எப்போ எதிர்கால பென் தப்பிச்சு சண்டை போடுறத விட்டுட்டு எந்தவொரு எதிரியா இருந்தாலும் நேருக்கு நேரா நின்னு சண்டைபோட்டு தோற்கடிக்க ஆரம்பிச்சாரோ அப்பவே இந்த ஏலியன யூஸ் பண்றத குறைச்சிகிட்டாரு ஒரு கட்டத்துல இந்த ஏலியன மொத்தமாவே மறந்துட்டாருன்னுதான் சொல்லனும்

அப்படி இருந்தும் தன்னோட பையனுக்கு ஆம்னிட்ரிக்ஸ் மூலமா ஏலியன்ஸ கொடுக்கனும்னு பென் முடிவு பண்ணினதுக்கு அப்புறம் சான்ட் பாக்ஸ் கண்டிப்பா கென் தப்பிச்சி ஒழிஞ்சி வர்றதுக்கு உதவியா இருக்கும்ன்னு முடிவு பண்ணிருப்பாரு ஆனா இந்த ஏலியன பாத்தாலே கென்னுக்கு சுத்தமா பிடிக்காது அதுக்கு காரணம் பென் ஆம்னிட்ரிக்ஸ ரொம்ப வருஷம் யூஸ் பண்ணினதுக்கு அப்புறம் தான் அதவச்சி சண்டை போட கத்துகிட்டாரு அதனாலதான் சான்ட் பாக்ஸ் ஏலியன கொஞ்சநாள் யூஸ் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் வேற ஏலியன்ஸ்க்கு மாறி இருப்பாரு

ஆனா கென் பிறந்ததுலேர்ந்தே பென் டென் பண்ற சாகசங்கள பார்த்தே வளரந்திருக்காரு அதனால எந்த ஏலியன எப்படி யூஸ் பண்ணனும்ன்னு பென் அளவுக்கு கென்னுக்கும் தெரியும் அதனாலதான் கென்னுக்கு ஆம்னிவெர்ஸ் கிடைச்சதுமே அடாமிக்ஸ் ஏலியன யூஸ் பண்ணபோறேன்னு சொல்லிருப்பாரு ஏன்னா அந்த ஏலியன பத்தி கென்னுக்கு ரொம்ப நல்லவே தெரியும்

அதுமட்டுமல்லாம இதுக்கு இன்னொரு உதாரணம் சொல்லனும்னா கென் தன்னோட ஆம்னிட்ரிக்ஸ மாஸ்டர் கன்ட்ரோல் பண்றதுக்கு க்ரேமேட்டர யூஸ் பண்ணிருப்பாரு சொல்லபோனா பென் கூட இந்த விஷயத்தை பண்றதுக்கு ரொம்ப ரொம்ப நாள் ஆகிருக்கும் ஆனா ஆம்னிட்ரிக்ஸ யூஸ் பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ளலயே கென் இத ரொம்ப நல்ல கத்துகிட்டாரு 

சான்ட் பாக்ஸ் பற்றிய உண்மைகள் :

அடுத்ததா ஒரு காமிக்ல பென் இந்த ஏலியன யூஸ் பண்ணினதா சொல்லிருந்தேன் இல்லையா அதுல இந்த சான்ட் பாக்ஸ் ஏலியன் பண்ணினது எல்லாமே மோட்ங்குற ஏலியன் வில்லனுக்கு செம்மையா டஃப் கொடுத்திருக்கும் இந்த மோட் ஏலியன நீங்க பென் டென் கிளாசிக் சீரிஸ்ல கூட பாத்திருக்கலாம் அதாவது எதிர்கால பென்னும் அவரோட பையன் கென்னும் சிவப்பு கலர் உடம்போட இருக்குற ஒரு பெரிய சைஸ் ஏலியன்கிட்ட சண்டை போட்டு தோற்கடிச்சிருப்பாங்கள அந்த ஏலியன் பேருதான் மோட் 

அதோட இந்த ஏலியனோட முழு பேர அப்படியே திருப்பிபோட்ட டாம் பெர்கின்ஸோட பேர உல்டா பண்ணிதான் வரும் அதாவது TOM PERKINS பேரோட உல்டாவான SNIKREP MOT தான் இந்த பெரிய சைஸ் சிவப்பு ஏலியனோட முழுப்பெயர் 

அதோட இந்த ஏலியன Ben 10 Classic சீரிஸ்லதான் முதல்ல அறிமுகப்படுத்த ப்ளான் பண்ணிருந்தாங்க ஆனா அத அப்படியே கைவிட்டுட்டாங்க இந்தளவுக்கு மொக்கையான ஏலியன் வேணாம்ன்னுதான் கைவிட்டுருக்காங்க ஆனா அதவிட கேவலமான ஏலியன கூட பென் டென் ஆம்னிவெர்ஸ்ல காட்டிருக்காங்க அதுக்கு சான்ட் பாக்ஸே தேவலாம் இந்த டைம்ல Ben 10 ரசிகர்கள் தொடர்ந்து இந்த ஏலியனோட Design பத்தி கேட்டுட்டே இருந்ததால வேற வழியில்லாம Tom Perkins 2020ல இந்த Designஅ அவரோட ட்விட்டர் Accountல போஸ்ட் பண்ணினாரு

அதுமட்டுமில்ல இந்த ஏலியனுக்கு முதல்ல வேற Designலாம் யோசிச்சிருக்காங்க ஆனா இத Use பண்றதுக்கான ப்ளான் இல்லாததால அப்படியே விட்டுட்டாங்க அந்த டிசைனதான் காமிக்ல காட்டிருப்பாங்க அதுக்கப்புறம் தான் டாம் இதோட Designஅ அவரே சொந்தமா Complete பண்ணி போஸ்ட் பண்ணினாரு அப்பவே இதுக்கு ULTIMATE FORM இருக்குங்குற விஷயத்தையும் Confirm பண்ணினாரு இதுக்கான பெரிய ப்ளான்லாம் இருந்துச்சுன்னு சொல்றதுக்காகதான் இவ்ளோ விஷயங்களையும் அவர் விளக்கிருந்தாரு

இந்த சான்ட் பாக்ஸ் ஏலியன Pokémonல வர்ற மட் ஏலியனையும் அப்புறம் மார்வெல்ல Spider-Man வில்லன் Sand Man மாதிரியான ஆளுங்களோட Inspirationல தான் உருவாக்கிருக்காங்க ஆனா இது Direct Copy ஆ இல்லாம Uniqueஅ இருக்கணும்னு Tom Perkins ரொம்பவே கஷ்டப்பட்டதா சொல்லிருக்காரு 

Sandbox ன் சக்திகள் :

இந்த ஏலியனுக்கு மணலை கட்டுபடுத்துற சக்தி இருக்கு இது மூலமா மணல்புயல்களைகூட இந்த ஏலியனால உருவாக்க முடியுமாம் அதுவும் சாதாரணமான மணல்புயல்கள் இல்ல 100 அடிக்கும் உயரமான மணல் புயல்களை உருவாக்க முடியும் இதவச்சி எவ்ளோ பெரிய வில்லனா இருந்தாலும் தோற்கடிக்க முடியும்ன்னு நீங்க நினைக்கலாம்

ஆனா‌ அதுல ஒரு ட்விஸ்ட்டும் இருக்கு இந்த ஏலியனுக்கு மணல்புயல்களை உருவாக்க ஏகப்பட்ட மணல் தேவைப்படும் அப்படி மணல் மட்டும் இல்லன்னா இந்த ஏலியனால மணல் புயல்களை உருவாக்க முடியாது தன்னோட உடம்புல இருக்குற மணலை வச்சி மட்டும்தான் புயல உருவாக்க முடியும் அதுமூலமா சின்ன சின்ன எதிரிகளை மட்டும் தான் அட்டாக் பண்ண முடியும் ஒருவேளை இந்த ஏலியன் பாலைவனத்தில இருந்தா ஒட்டுமொத்த பாலைவனமும் இதோட கட்டுபாட்டுலதான் இருக்கும் அந்தளவுக்கு இந்த ஏலியனுக்கு சக்தி கிடைச்சிரும் 

அதாவது சிம்பிளா சொல்லனும்னா எந்தளவுக்கு மணல் இருக்குற இடத்தில இந்த ஏலியன் இருக்கோ அந்தளவுக்கு இதோட சக்தியும் அதிகமா இருக்கும் ஒருவேளை மணலே இல்லாத இடத்துல இந்த ஏலியன் மாட்டிக்கிட்டா இதோட சக்திய ஈஸியா கட்டுபடுத்திடலாம் அதனாலதான் இந்த ஏலியன மொக்கையான ஏலியன் லிஸ்ட்ல சேர்த்திருக்காங்க 

 அதுமட்டுமல்லாம இந்த ஏலியனால இதோட உருவத்தை ரொம்பவே பெருசாக்கிக்கவும் முடியும் சிறியதாக்கிக்கவும் முடியும் ஆனா இதுக்கும் மணலோட உதவி தேவைப்படும் ஏற்கனவே சொன்ன மாதிரி மணல் இல்லாத இடத்தில இந்த பவரும் இந்த ஏலியன கால வாரி விட்டுரும் இந்த ஒரு விஷயம் மட்டும் தான் இதோட மிகப்பெரிய பலமும் பலவீனமும்ன்னு சொல்லலாம் 

 இந்த ஏலியனுக்கு நினைச்சமாதிரியான உருவத்தை உருவாக்கும் சக்தியும் இருக்கு அதோட இந்த ஏலியனும் Goop க்கு இருக்குற மாதிரியான Anti Gravity Projector Box அ Use பண்ணும் அந்த Box க்குள்ள இந்த ஏலியனால ஒழிஞ்சிக்க முடியுற சக்தியும் இருக்கு இப்போ நான் சொன்ன எல்லா பாவர்ஸூம் இந்த ஏலியனோட அல்டிமேட் உருவத்தில அப்படியே மூனு மடங்கு அதிமாகிருக்குமே தவிர எந்த புது பவரும் இருக்காது ஆனா எக்ஸ்ட்ராவா காலு மட்டும் தான் கிடைச்சிருக்கும் 

இப்ப நாம பார்த்த எல்லா பவர்ஸயும் விட ரொம்ப ரொம்ப முக்கியமான பவர்ன்னா அது இதோட இம்மார்ட்டலிடி பவர்தான் அதாவது இந்த ஏலியனுக்கு அழிவுங்குறதே கிடையாது இந்த ஏலியன யாரு நினைச்சாலும் மொத்தமா அழிக்கவே முடியாது ஆனா இந்த ஏலியன செய்லபட விடாம வேணும்னா சுத்தமா தடுக்க முடியும் ஆனா இதுலயும் ஒரு ட்விஸ்ட் இருக்கு அது இந்த ஏலியன சுப்ரீம் லெவல்ல இருக்குற சில ஏலியன்கள் அழிச்சிரும்ங்குறதுதான் அதுல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஏலியன் செலஸ்டிய்ல் சேபியன்ங்குற ஏலியன் எக்ஸ்தான் 

Sandbox ன் பலவீனங்கள் : 

இந்த ஏலியனோட முக்கியமான பலவீனம் இந்த ஏலியனும் Goop ஓட Anti Gravity Projector மாதிரியான Box Use பண்றதால இந்த Box அ பென்னோட எதிரிங்க அழிச்சிட்டா இந்த ஏலியனோட சக்தியும் மொத்தமா போய்டும் இதுதான் இந்த ஏலியனோட ஒரே பலவீனம் அதாவது அந்த பாக்ஸ்தான் இது நடமாடுறதுக்கு முக்கியமா உதவுற ஒரு பொருள் ஒருவேளை அது அழிஞ்சி போச்சுன்னா கூட இந்த சாண்ட் பாக்ஸ் செத்து போகாது ஆனா நம்ம பூமியோட புவியீர்ப்பு சக்தி இந்த ஏலியனோட பவர யூஸ் பண்ண விடாம தடுத்துடும்ன்னு சொல்லிருக்காங்க 

இதே மாதிரி பென்னோட அடுத்த போஸ்ட்ல சூப்பரான இன்னொரு UNSEEN ஏலியன் பத்தி பார்க்கலாம்

நன்றி மக்கள்ஸ்

Post a Comment

0 Comments

Close Menu