ஹாய் மக்கள்ஸ்
இதுவரைக்கும் நம்ம Blogல பென்னோட 9 ஏலியன்ஸ் பத்தி பாத்துருக்கோம் இது 10 வது ஏலியன் இந்த ஏலியனோட பேரு Transmutor இதுவும் பென்னோட Unseen ஏலியன்ல ஒன்னுதான் இப்போ இந்த Transmutor பத்தி முழுசா பார்க்கலாம்
உருவான கதை
இன்னைக்கு நாம பாக்கபோற ட்ரான்ஸ்மியூடர் ( Transmutor) ஏலியனும் ஏற்கனவே பென் டென் கிளாசிக் சீரிஸ்ல காட்டப்பட்ட ஏலியன்தான் போன போஸ்ட்ல வார்ப்ங்குற ஏலியன் பத்தி சொல்லிருந்தேன்ல அந்த ஏலியன் TRUTHங்குற எபிசோட்ல வந்திருக்கும் அதுகூடவேதான் இந்த ஏலியனையும் காட்டினாங்க ஆனா அந்த வார்ப் ஏலியன் அளவுக்கு இந்த ட்ரான்ஸ்மியூட்டர் ஏலியன் சக்தி வாய்ந்தது கிடையாது
அதுமட்டுமில்ல வில்லன் ஏலியன்ஸ்கூட மேக்ஸூம் Plummers Organisationஅ சேர்ந்தவங்களும் சண்டை போடுற மாதிரி காட்டுற ஃப்ளாஷ்பேக் சீன்ல இந்த ஏலியனை நம்மாளல பார்க்க முடியும் ஆனா இந்த ஏலியனை அந்த ஃப்ளாஷ்பேக் சீன்ல பாக்குறதவிட ரொம்பவோ டெவலப் பண்ணிதான் இந்த ஏலியன் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல இருக்குறதா சொல்லிருக்காங்க ஏன்னா ஏற்கனவே சொன்ன மாதிரி ஆம்னிட்ரிக்ஸ்ல ஒரு DNA சேரும் அதை PRIME வெர்ஷனாதான் ஆம்னிட்ரிக்ஸ் ADD பண்ணிக்கும்
இந்த ட்ரான்ஸ்மியூடர் ஏலியன் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல இருக்குறத 2020 டாம் பெர்கின்ஸ் 2020 அவரோட ட்விட்டர் அக்கவுன்ட்ல பென் டென் ஃபேன்ஸ்க்காக போஸ்ட் பண்ணிருந்தாரு இந்த ஏலியனை பத்தி போஸ்ட் பண்ணும் போதே இந்த ஏலியனோட உருவம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது ஆனா சக்திகள் மொக்கையா கொடுத்திருக்காங்க ஒருவேளை இந்த ஏலியனுக்கு சூப்பரான சக்தி இருந்தா இந்த ஏலியனும் கண்டிப்பா பென் டென் ரசிகர்களால கொண்டாடபட்டிருக்கும்ன்னு சொல்லிருந்தாரு
இந்த ஏலியனும் மத்த Unseen ஏலியன்ஸ் மாதிரி BEN 10 DESTROY ALL ALIENS படம் முடிஞ்சதுக்கு அப்புறம் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல UNLOCK ஆகி ஏலியன் ஃபோர்ஸோட முதல் எபிசோட்ல மறுபடியும் லாக் ஆகிருச்சு ஆனா இப்போவும் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல இந்த ஏலியன் இருக்குன்னு கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க
அதனால இப்போ பென் நினைச்சாலும் இந்த ஏலியன யூஸ் மண்ண முடியும் சொல்லபோன நாலு காமிக்ஸ்ல இந்த ஏலியன பென் யூஸ் பண்ணி சிக்ஸ் சிக்ஸ்,டாக்டர் அனிமோ, சார்ம் காஸ்டர் மாதிரியான ஆளுங்கள பென் தோற்கடிச்சிருக்காரு அதோட இந்த ஏலியனுக்கு அல்டிமேட் ஃபார்மும் இருக்கு பென் இதுவரைக்கு கிளாசிக் காமிக் சீரிஸ்லதான் இந்த ஏலியன யூஸ் பண்ணிருக்காரு அதனால இதோட அல்டிமேட் ஃபார்ம் எப்படி இருக்கும்ன்னு நம்மளால உருவத்தோட பார்க்க முடியல ஆனா இதோட அல்டிமேட் ஃபார்ம் பத்தி சில தகவல்கள் கிடைச்சிருக்கு அதபத்தி நாம பார்க்கலாம்
இந்த ஏலியன் நார்மலா இருக்கும் போது GREY கலர்ல இருக்கும் அதுவும் பென் இந்த ஏலியனா மாறும் போது DARK ORANGE கலருக்கு மாறிடும் அதுக்கு காரணம் இந்த ஏலியன் க்ரே கலர்ல இருக்கும் போது இதோட உருவத்தை டிசைன் பண்றது கஷ்டமா இருந்துச்சாம் ஏன்னா இந்த க்ரே கலர்ல ஏற்கனவே க்ரே மேட்டர் ,பென் வொல்ஃப் ஏலியன்லாம் இருக்காங்க அதே கலர்ல இந்த ஏலியனும் இருக்க வேணாம் இத கொஞ்சம் வித்தியாசமா காட்டலாம்ன்னு Dark Orange கலருக்கு மாத்தினாங்க அதோட இந்த ஏலியன் இதோட இனத்த சேர்ந்த மத்த ஏலியன்ஸ விட ரொம்பவே வித்தியாசமாவும் பவர்ஃபுல்லாவும் இருக்குன்னு காட்டுறாதுக்காக இந்த கலர மாத்துனதா டாம் பெர்கின்ஸ் சொல்லிருக்காரு எது எப்படி இருந்தாலும் இந்த ஏலியன க்ரே கலர்ல பாக்குறவிட இப்போ இருக்குற Dark Orange கலர்ல பாக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு
அடுத்ததா இந்த ட்ரான்மியூட்டரோட அல்டிமேட் ஃபார்ம் பத்தி பார்ப்போம் இந்த ஏலியன் தன்னோட அல்டிமேட் ஃபார்ம்க்கு மாறும் வெள்ளை,கருப்பு,சிவப்பு கலர்ன்னு மூனும் சேர்ந்த உருவத்துக்கு மாறிடுமாம் அதுமட்மில்ல இதோட உயரமும் 16 அடிக்கு மேல வளர்ந்துடுமாம் அப்போ இந்த ஏலியனை பாக்குறதுக்கே படுபயங்கரமா இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க அதோட இந்த ஏலியன் அல்டிமேட் ஏலியனா மாறும் போது யார் கண்ணுக்கும் தெரியாம மறைஞ்சி போற சக்தி வேற கிடைக்கும்ன்னு சொல்லிருக்காங்க பலமும் ரொம்பவே அதிகமாகிரும் மத்தபடி வேற எந்த புது சக்தியும் இந்த ஏலியனுக்கு அல்டிமேட் ஃபார்ம்ல கிடைக்காது
ட்ரான்ஸ்மியூட்டர் பற்றிய உண்மைகள்
இந்த ஏலியனோட உயரம் 12 அடி எடை 280 Kg இந்த டிரான்ஸ்மியூட்டருக்கு ரெண்டு கைகளிலும் 3 விரல்கள் கால்களில 2 விரல்கள் மட்டும்தான் இருக்கும் பொதுவா பென் டிராஸ்பார்ம் ஆகுற ஏலியன்ஸ்ல எல்லாருக்குமே 3 இல்லன்னா 2 விரல்கள் தான் கால்களில இருக்கும் Heatblast ,Fourarms,lobestar இப்படி சொல்லிட்டே போகலாம் இதுக்கு பெரிசா எந்த காரணமும் இல்லன்னாலும் மனிதர்களுக்கும் ஏலியன்ஸ்க்கும் வித்தியாசம் காட்டுறதுக்காக இப்படி பண்ணினதா ஒருதடவை டாம் பெர்கின்ஸ் சொல்லிருந்தாரு
அதோட இந்த மாதிரி ஏலியன்களை பொம்மையா உருவாக்கும் போது 2 அல்லது 3 விரல்கள் இருக்குற மாதிரி உருவாக்குனா ஈஸியா வேலை முடிஞ்சிரும்ன்னு இப்படிப்பட்ட டிசைன உருவாக்கிருக்காங்க இந்த ஏலியனுக்கும் எடை கம்மியா இருக்குறதால இதோட வேகமும் ரொம்பவே அதிகமாதான் இருக்கும் அதோட டிராஸ்மியூட்டரோட முகத்தில ஆக்டோபஸோட கைகள் மாதிரி இருக்கும்
இந்த கைகள 10 மீட்டர் அளவுக்கு இதால நீட்டிக்க முடியும் அதவச்சி யாரை வேணும்னாலும் இந்த ஏலியனால அடிக்கவும் முடியும் இறுக்கி பிடிக்கவும் முடியும் இதையெல்லாம் விட முக்கியமா இந்த கைகள் ரொம்பவே ஸ்ட்ராங்காவும் இருக்கும் இந்த கைகளால கிட்டத்தட்ட 10 டன்க்கு அதிகமான எடையை தூக்க முடியுமாம் இத பென்னால ரொம்ப ஈஸியாவே கண்ட்ரோல் பண்ண முடியுங்குறதால இது பென்னுக்கு இந்த ஏலியனா மாறும் போது இந்த கைகள் முக்கிய பலமா இருக்கும்
இந்த ஏலியனோட உருவம் ஆக்டோபஸ மையமா வச்சி உருவான மாதிரி இருக்கும் ஆனா உண்மையிலேயே அது ஆக்டோபஸ் கிடையாது பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படங்கள்ள வர்ற டேவி ஜோன்ஸ்ங்குற வில்லன மையமா வச்சி உருவாக்க பட்டது உதாரணத்துக்கு இந்த பென் டென் சீரிஸோட முக்கிய வில்லனான வில்கேக்ஸையே சொல்லலாம் வில்கேக்ஸோட உருவம் அப்படியே டேவி ஜோன்ஸ் மாதிரியே இருக்கும் அடுத்து டேகன்ங்குற பயங்கரமான ஒரு ENTITY இந்த கேரக்டர் ரொம்பவே பவர்ஃபுல்லானவருன்னு பென் டென் சீரிஸ்ல சொல்லிருப்பாங்க இவரும் டேவி ஜோன்ஸோட இன்ஸ்பிரேஷன்ல உருவாக்கப்ட்டவர்தான் அதனாலதான் இவங்க முனு பேரும் கிட்டத்தட்ட ஒரு மாதிரி இருப்பாங்க இத பென் டென் சீரிஸ்ல வொர்க் பண்ணின ஆர்ட் டைரக்டரே டேவி ஜோன்ஸோட இன்ஸ்பிரேஷன்ல தான் வில்கேக்ஸ உருவாக்குனோம்ன்னு ஒத்துகிட்டாரு
Transmutorன் சக்திகள்
இந்த டிரான்ஸ்மியூட்டர் ஏலியனோட முக்கியமான சக்தியே எந்த ஒரு பொருளா இருந்தாலும் அத முழுசா சாப்பிட்டு அத ஆசிட் மாதிரியான கெமிக்கலா மாத்தி எதிரிகளை தாக்கமுடியும் இந்த மாதிரியான சக்தியோட பென்கிட்ட ஏற்கனவே நிறைய ஏலியன்ஸ் இருக்கு அதுல சில முக்கியமான ஏலியன்ஸ் UPCHUCK அப்புறம் EATLE இந்த ஏலியன்ஸாலயும் Transmutor மாதிரி எதாச்சும் ஒரு பொருளை சாப்பிட்டுட்டு அத அப்படியே Energy Blastஆ மாத்த முடியும் ஆனா அந்த ஏலியன்ஸ விட Transmutor தான் பெஸ்ட்டான ஏலியன்
எதனாலன்னா இந்த ட்ரான்மியூட்டரால அது சாப்பிட்ட பொருள என்ன மாதிரியான சக்தியா வேணும்னாலும் மாத்திக்க முடியும் அதாவது இந்த ஏலியன் ஒரு பொருள சாப்பிட்டு அத BULLETS, ELECTRICITY,ACID , CHEMICAL, FIRE,DIAMOND ன்னு எப்படி நினைச்சாலும் மாத்தி அதவச்சி எதிரிங்கள தாக்க முடியும் இந்த ஒரு ஏலியன் பென்னோட 10 ஏலியன்ஸ் பண்ற வேலைகள தனியாவே பண்ணும் ஆனாலும் இந்த ஏலியன பென் எங்கேயும் பெருசா யூஸ் பண்ணிக்கல ஒருவேளை பென் மட்டும் இந்த ஏலியன தொடர்ந்து யூஸ் பண்ணிட்டே இருந்தாருன்னா இவரோட மத்த ஏலியன்ஸ மறக்க ஆரம்பிச்சிருவாரு அந்த அளவுக்கு இதுக்கு சக்திகள் இருக்கும்
இந்த ஏலியனுக்கும் வேகமும் ஸ்ட்ரெங்கத்தும் ரொம்பவே அதிகம் கிட்டத்தட்ட நம்ம FOURARMSக்கு இணையான பலம் இவர்கிட்டையும் இருக்கும் அதுமட்டுமில்லாம இந்த ஏலியனால ரொம்ப உயரமா எகிறி குதிக்கவும் முடியும் இவரோட கைகளால எந்தவொரு பொருளையும் ரொம்பவே டைட்டா பிடிச்சிக்க முடியும் அதோட ஏற்கனவே சொன்ன மாதிரி இவர்கிட்ட இருக்குற ஆக்டோபஸோட கைகள் மாதிரியான உறுப்பு வச்சி யாரையும் இவரால கட்டி போட்டுட முடியும்
இவ்ளோ சக்திகள் மட்டுமில்லாம ஏற்கனவே சொன்ன மாதிரி இவர் அல்டிமேட் ஏலியனா மாறுனா கண்ணுக்கு தெரியாம மறைஞ்சி போற சக்தி அதாவது இன்விசிபிளிடி ( Invisibility ) பவரும் கிடைச்சிரும் ஆனா இந்த பவர் கோஸ்ட் ஃப்ரீக் அளவுக்கு இருக்காது ஏன்னா கோஸ்ட் ஃப்ரீக்கால மொத்தமா கண்ணுக்கு தெரியாம மறைஞ்சி யாரோட உடம்புக்குள்ள வேணும்னாலும் புகுந்து வெளிய வர முடியும் ஆனா இந்த ஏலியன் சும்மா கண்ணுக்கு தெரியாம மறைஞ்சி மட்டும் போய்ரும் புரியுற மாதிரி சொல்லனும்னா பிரிடேட்டர் படத்துல வர்ற ஏலியன் மாதிரி இந்த ஏலியனும் யார் கண்ணுக்கும் தெரியாம மறைஞ்சி போய்டும் ஆனா அப்பவும் இத நம்மளால தொடவும் முடியும் அடிக்கவும் முடியும் இதுதான் இந்த பவரோட ஒரே பிரச்சினை
TRANSMUTORன் பலவீனங்கள்
இந்த ஏலியனோட சக்தியே இதால எதவேணும்னாலும் சாப்பிட்டுட்டு அத இஷ்டப்படி யூஸ் பண்ணிக்குறதுதான் அதனால எதையுமே இந்த ஏலியன் சாப்பிடலன்னா இத தோற்கடிக்க முடியும் அதாவது எதாச்சும் Solid பொருள் இருந்தாதான் இந்த ஏலியன் அத சாப்பிட்டுட்டுதான் எதிரிகளை அட்டாக் பண்ணும் ஆனா அப்படி சாப்பிடவே எதுவும் இல்லன்னா இதால எதிரிய அட்டாக் பண்ண முடியாது
ஆனாலும் இதோட பலத்த வச்சி எதிரி கூட இந்த ஏலியன் சண்டை போட முடியும் அடுத்து அதிகப்படியான ஒலிய வச்சி இந்த ஏலியன ஈஸியாக தோற்கடிச்சிடலாம் ஏன்ன வைல்ட்மட் அப்புறம் டைமன்ட்ஹெட் மாதிரி இந்த ஏலியனுக்கும் அதிகப்படியான சத்தம்தான் பலவீனம் இதுல வைல்ட்மட்க்கு அதிகப்படியான ஒலி பலவீனமா இருக்குறதுக்கு காரணம் அந்த ஏலியனால பார்க்கவோ கேட்கவே முடியாது
அதனால உணர்ச்சிய வச்சி தான் வைல்ட்மட் சண்டை போடும் அத அதிகப்படியான சத்தம் தடுக்குறதால அது வைல்ட்மட்க்கு பலவீனமா இருக்கு அதே மாதிரி இந்த ஏலியனுக்கு Sense ரெம்பவே அதிகம் அதனாலதான் இந்த ஏலியனையும் சத்தம் பாதிக்குதுன்னு சொல்லிருக்காங்க மத்தபடி இந்த ஏலியனுக்கு எந்த பலவீனங்களும் இல்ல
அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த ட்ரான்ஸ்மியூட்டர் ஏலியன் பத்தின முழு விளக்கம்
இந்த ஏலியன் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்கன்னு கமெண்ட் பண்ணுங்க அப்படியே அடுத்த போஸ்ட்ல சூப்பரான இன்னொரு ஏலியன் பத்தி பார்க்கலாம்
நன்றி மக்கள்ஸ்
Copyright (c) 2021 Tamil Cartoons Fandom All Right Reseved
0 Comments
Thanks For Visiting Our Blog