Google Adsense Code

Crabtastic Origin பற்றி தமிழில் Crabtastic உருவான கதை ( Ben 10 Aliens Part - 3 )

ஹாய் மக்கள்ஸ் 

இந்த Post ல நாம பாக்க போற ஏலியன் இதுவரைக்கும் BEN எங்கேயும் Use பண்ணாத க்ராப்டாஸ்டிக்ங்குற ஏலியனை பத்திதான் இந்த ஏலியன் உருவத்திலயும் சக்திகளிலயும் சூப்பரான ஒரு ஏலியனும் கூட இப்போ இந்த ஏலியன் பத்தி முழுசா பார்த்திடலாம்

 உருவான கதை

இந்த க்ராப்டாஸ்டிக் ஏலியனோட உண்மையான இனத்தோட பேரையும் இது எந்த கிரத்த சேர்ந்த ஏலியன்ங்குறதயும் எந்த இடத்திலயும் குறிப்பிடவே இல்லை அதுக்கு காரணம் இந்த ஏலியன இவங்க இதே வரைக்கும் எந்த இடத்திலும் காட்டவே இல்ல அதனால இதுக்கு பெரிசா அவங்க மெனக்கடவே இல்ல ஒருவேளை இந்த ஏலியனையும் பென் யூஸ் பண்ணிருந்தா கண்டிப்பா இந்த ஏலியன நல்லா டெவலப் பண்ணிருப்பாங்க 

இந்த ஏலியன் Yeti Crab ங்குற நண்டை காப்பி அடிச்சி பென்னுக்காக கொடுக்கப்பட்ட ஏலியன் அதனால அந்த யேட்டி நண்டு உருவம் எப்படி இருக்குமோ அத அப்படியே சின்ன சின்ன விஷயங்கள மட்டும் மாத்தி இந்த ஏலியனுக்கு கொடுத்திருப்பாங்க அதனாலதான் இந்த ஏலியன் பாக்குறதுக்கு நண்டு மாதிரியே இருக்கும் 

ஏன்ன இந்த ஏலியன் Destroy All Aliens படம் முடிஞ்சதும் Omnitrix ல Unlock ஆகிருக்குன்னு பென் டென் சீரிஸ்ல வொர்க் பண்ணினவங்க Officialஅ சொல்லிருக்காங்க அதுக்கு அப்புறம் Ben 10 Aliens Forceல Lock ஆகிருக்கும் ஏன்ன அந்த சீரிஸ்ல பென்னோட ஆம்னிட்ரிக்ஸ் Recalibrate ஆகிருக்கும் அதுல பென்னுக்கு கிடைச்ச நிறைய ஏலியன்ஸ் லாக் ஆகிருச்சு ஆனா அப்படி ரிகாலிப்ரேட் ஆனதாலதான் பென்னுக்கு புதிய அப்டேடட் ஆம்னிட்ரிக்ஸூம் புதிய ஏலியன்ஸூம் கிடைச்சிருக்கு 

 அதோட இந்த ஏலியனுக்கு Ultimate Form ம் இருக்கு அந்த அல்டிமேட் ஃபார்ம் இந்த ஏலியனை விட 3 மடங்கு பெரிசா இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க அதோட அந்த அல்டிமேட் ஃபார்ம்க்கு ஆறு கொடுக்கு மாதிரியான கைகள் இருக்குமாம் அதோட உருவம் பச்சை கலருக்கு மாறி இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க இதையெல்லாம் விட முக்கியமா இந்த க்ராப்டாஸ்டிக்கோட அல்டிமேட் ஃபார்ம்க்கு இறக்கைகளும் கிடைச்சிடும் அப்படியே லேசர் சக்திய உபயோகிக்குற சக்தியும் கிடைச்சிடும் 

ஆனா இந்த ஏலியனுக்கான டிசைனே இந்த வருஷம்‌தான் ( 2021 ) டாம்‌பெர்கின்ஸ் ( Tom Perkins ) அவரோட ட்விட்டர் Account ல Post பண்ணிருக்காரு ஆனா இந்த ஏலியனுக்கான ப்ளான் 2013லயே வந்திருக்கு அதனால இந்த ஏலியனோட அல்டிமேட் ஃபார்ம்க்கான எந்தவொரு விவரமும் கிடைக்கவே இல்லை அதனால நம்மளால இந்த ஏலியனோட அல்டிமேட் உருவத்தை பார்க்கவே முடியாது

இந்த ஏலியனுக்கான முதல் ஐடியா மாட் வைன்ங்குறவருக்உ ( Matt Wayne ) க்கு 2013 ல வந்திருக்கு இந்த நேரத்திலதான் Omniverse க்கான எல்லா வேலைகளும் முடிஞ்சதுக்கு அப்புறம் Omniverse Run ஆகிட்டு இருந்த சமயம் அதனால இந்த ஏலியன பத்தி அவங்க யோசிக்கவே இல்ல அப்புறம் ஆம்னிவெர்ஸ் முடியப்போற சமயத்தில இந்த ஏலியன் பத்தி மறுபடியும் அவங்க யோசிக்க ஆரம்பிச்சாங்க 

சொல்லபோன இந்த ஏலியனுக்கு முழு டிசைனை உருவாக்க கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேல ஆகிருக்கு ஏன்னா இதுல டெர்ரிக்ங்குற ஆம்னிவெர்ஸ் சீரிஸ்ல வொர்க் பண்ணின ஆர்ட் டைரக்டரோட உதவி இல்லமாலே இந்த டிசைன உருவாக்கிருக்காங்க அதனாலதான் ரொம்ப நேரம் எடுத்து இந்த ஏலியன் டிசைன் உருவாச்சு ஆனா அதுதான் இந்த ஏலியன் ஸ்பெஷாலான ஏலியனா தெரிய ஒரு முக்கிய காரணம்னு கூட சொல்லலாம் 

ஒருவேளை டேர்ரிக் இந்த டிசைன உருவாக்க உதவி பண்ணிருந்தா இந்த ஏலியனும் ஆம்னிவெர்ஸ்ல வர்ற மாதிரியான மொக்கையான கார்ட்டூன் கதாப்பாத்திரம் மாதிரி ஆகிருக்கும் உதாரணத்துக்கு பென் டென் கிளாசிக் சீரிஸ்ல நாம பாத்த ஆர்ட் வொர்க்குக்கும் பென் டென் ஏலியன் ஃபோர்ஸ் மற்றும் பென் டென் அல்டிமேட் ஏலியன்ஸ்ல பாத்த ஆர்ட் வொர்க்குக்கும் பென் டென் ஆம்னிவெர்ஸ்ல பாத்த ஆர்ட் வொர்க்குக்கும் நிறைய வித்தியாசங்கள பார்க்க முடியும்

அது எல்லாத்துக்கும் காரணமே இந்த டெர்ரிக்தான் அதோட பென் டென் ஆம்னிவெர்ஸ்ல பல மொக்கையான ஏலியன்கள கொண்டு வந்ததும் இந்த டெர்ரிக்தான் அதனாலதான் ஆம்னிவெர்ஸ் சீரிஸே இரண்டாவது சீசனுக்கு அப்புறம் தடுமாற ஆரம்பிச்சது மொத்ததுல பென் டென் இப்போ ரொம்ப மோசமான நிலையில இருக்குறதுக்கு முக்கியமான காரணங்களுல ஒருத்தர் தான் இந்த டெர்ரிக் 

ஒருவேளை டெர்ரிக் இல்லாம வேற யாராவது ஆம்னிவெர்ஸ் சீரிஸ கண்ட்ரோல்ல வச்சிருந்தா பென் டென்க்கு இபாபோ வரைக்கும் நல்ல ரசிகர்கள் கூட்டம் இருந்திருக்கும்ங்குளது மறுக்க முடியாத உண்மை 

க்ராப்டாஸ்டிக் பற்றிய உண்மைகள் 

இந்த க்ராப்டாஸ்டிக் ஏலியன் மட்டும் தான் பென் டென் கிளாசிக் சீரிஸ்ல வந்த முதல் 10 ஏலியன்களை தோற்கடிக்க கூடிய ஒரே ஏலியன்னு சொல்லிருக்காங்க ஆனா இதுக்கப்புறம் ஆம்னிட்ரிக்ஸ்ல சேர்க்கபட்ட மத்த ஏலியன்களையும் இந்த க்ராப்டாஸ்டிக்கால தோற்கடிக்க முடியும் ஆனா சில ஏலியன்ஸ தோற்கடிக்குறது கஷ்டம்ன்னு சொல்லிருக்காங்க 

முதல்ல ஹீட் ப்ளாஸ்ட் இந்த ஏலியன் நெருப்பு சக்தி இருக்குற ஏலியன் ஆனா ஹீட் ப்ளாஸ்ட்டோட நெருப்பு க்ராப்டாஸ்டிக்க ஓரளவுக்குதான் பாதிக்கும் ஆனா க்ராப்டாஸ்டிக் நினைச்சா ஹீட் ப்ளாஸ்ட்ட தோற்கடிக்க முடியும்ன்னு சொல்லிருக்காங்க ஏன்னா ஹீட் ப்ளாஸ்ட்டோட பலத்தை விட க்ராப்டாஸாடிக்கோட பலம் அதிகமாம்

அடுத்ததா ஃபோர் ஆர்ம்ஸ் இந்த ஏலியன் பென்னோட ரொம்பவே பலசாலியான ஏலியன் இதவச்சி வில்கேக்ஸ் கூடவே பென் மோதிருப்பாரு ஆனா இந்த ஏலியனால கூட க்ராப்டாஸ்டிக்க தோற்கடிக்க முடியாதுன்னு சொல்றாங்க ஏன்னா ஃபோர் ஆர்ம்ஸோட அட்டாக்க தாங்குற அளவுக்கு இந்த ஏலியன்கிட்ட ஸ்ட்ராங்கான ஓடு இருக்கு இதைதாண்டி இந்த ஏலியன அட்டாக் பண்றது ரொம்பவே கஷ்டம் அதோட இந்த ஏலியனோட பலமும் ரொம்பவே அதிகமா இருக்குறதால ஃபோர் ஆர்ம்ஸோட பலத்துக்கு ஈடுகொடுத்து இதால சண்டை போடவும் முடியும் அந்தளவுக்கு இதுக்கு பலம் இருக்கு

அடுத்ததா வைல்ட்மட் ஏலியன் இது மிருகம் மாதிரியான பென்னோட ஏலியன் ஆனா இந்த ஏலியனாலயும் க்ராப்டாஸ்டிக்க தோற்கடிக்க முடியாது அதுக்கு காரணம் இந்த ஏலியனால மோப்பம் பிடிச்சிதான் சண்டைபோட முடியும் அப்படி வைல்ட்மட் எங்கேர்ந்து க்ராப்டாஸ்டிக்க அட்டாக் பண்ண ட்ரை பண்ணினாலும் இந்த ஏலியனால வைல்ட்மட்ட சமாளிக்க முடியும் பலமும் வைல்ட்மட்ட விட அதிகம்தான்

அடுத்ததா ரிப்ஜாவ்ஸ் ஏலியன் இந்த ஏலியன் தண்ணில மட்டுமே பலமா சண்டை போடக்கூடிய ஏலியன் ஆனா க்ராப்டாஸ்டிக்கும் தண்ணில மூர்க்கத்தனமான சண்டைபோடக்கூடிய ஏலியன்தான் சொல்லபோன ரிப்ஜாவ்ஸ விட க்ராப்டாஸ்டிக்தான் தண்ணில ரொம்பவே பலமான ஏலியன்னு கூட சொல்லலாம் அதனால ரிப்ஜாவ்ஸ தோற்கடிக்குறது க்ராப்டாஸ்டிக்குக்கு ரொம்பவே ஈஸியான விஷயம் தான்

அடுத்ததா க்ரேமேட்டர் இந்த ஏலியன் மூளைய வச்சி சண்ட போடக்கூடிய ஏலியன் ஆனா க்ராப்டிஸ்டிக்கும் ஓரளவுக்கு புத்திசாலித்தனமான ஏலியன் தான் ஆனாலும் க்ரேமேட்டர் அளவுக்கு கிடையாது ஆனா பலத்தோட ஒப்பிடும்போது க்ராப்டாஸ்டிக்தான் வின்னரா இருப்பாரு

அடுத்ததா டைமண்ட் ஹெட் இந்த ஏலியனோட முக்கியமான பவரே டைமண்ட் கிரிஸ்டல்களை உருவாக்குறதுதான் ஆனா இந்த டைமண்ட் கிரிஸ்டல்களை தூள் தூளா நொறுக்குற அளவுக்கு க்ராப்டாஸ்டிக்கிட்ட பலம் இருக்கு அதோட டைமண்ட் ஹெட்டோட கிரிஸ்டல்கள் கூட க்ராப்டாஸ்டிக்கோட ஓடுகளை ஒன்னுமே பண்ண முடியாது ஏன்னா அந்த அளவுக்கு அதோட ஓடுகள் பலமா இருக்கும்

அடுத்ததா XLR8 ஏலியன் இது வேகமா ஓடக்கூடிய ஏலியனா இருந்தாலும் இந்த ஏலியனாலயும் க்ராப்டாஸ்டிக்க தோற்கடிக்க முடியாது அதுக்கு காரணம் க்ராப்டாஸ்டிக்கும் ரொம்ப வேகமான ஏலியன் சிம்பிளா சொல்லனும்னா XLR8அ விட கொஞ்சம் வேகம் கம்மிதான்

அடுத்ததா கோஸ்ட் ஃப்ரீக் ஏலியன் இது கண்ணுக்கு தெரியாம மறையக்கூடிய ஏலியன் ஆனா இந்த ஏலியன் தன்னோட கண்ணுக்கு தெரியாம மறைஞ்சி போற சக்திவச்சிகூட இந்த ஏலியன ஒன்னும் பண்ண முடியாது ஏன்னா க்ராப்டாஸ்டிக்கால இந்த ஏலியன் கண்ணுக்கு தெரியாம மறைஞ்சாகூட பார்க்கமுடியுமாம்

அடுத்ததா ஸ்டிங்ப்ளை இது பறக்கும் சக்தியுடைய ஏலியன் ஆனா இந்த ஏலியனோட எந்த பவரும் க்ராப்டாஸ்டிக்க ஒன்னுமே பண்ணாதுன்னு தெளிவா சொல்லிருக்காங்க அதனால இந்த ஏலியனாலயும் க்ராப்டாஸ்டிக்க ஒன்னும் பண்ண முடியாது

கடைசியா அப்க்ரேட் ஏலியன் இது எந்தவொரு இயந்திர பெருளையும் முழுசா ஆக்ரமிச்சி அத ஆயுதமா யூஸ் பண்ற ஏலியன் ஆனா இந்த ஏலியனாலயும் க்ராப்டாஸ்டிக்க ஒன்னுமே பண்ணாது அதனால அப்க்ரேடும் க்ராப்டாஸ்கிட்ட தோத்துதான் போகும் ஆக மொத்தம் பென்னோட முதல் பத்து ஏலியன்ஸ் நினைச்சா க்ராப்டாஸ்டிக்க தோற்கடிக்குறது கொஞ்சம்கூட சாத்தியமே இல்லாத விஷயம் 

Crabtastic ன் சக்திகள் : 

இந்த ஏலியனுக்கு பலம் ரொம்பவே அதிகம் கிட்டதட்ட ஹூயுமங்கசோர் அளவுக்கு இந்த ஏலியனுக்கு பலம் இருக்குமாம் அதவச்சி எவ்ளோ பெரிய‌ வில்லன் வந்தாலும் அவன அடிச்சி ஓடவைக்க முடியும் இந்த ஏலியனால குறைஞ்சது 50 டன்க்கு மேல தூக்க முடியுமாம் ஏன்னா இந்த ஏலியனோட உருவத்துக்கும் பலத்துக்கும் சம்பந்தம் கிடையாது பொதுவா இந்த ஏலியனோட இனத்த சேர்ந்த எல்லாரும் ரொம்ப ரொம்ப பலசாலியா இருப்பாங்கன்னு டாம் பெர்க்கின்ஸே சொல்லிருக்காரு அதோட அவரே இந்த ஏலியனால 50 டன் வரைக்கும் தூக்க முடியும்ன்னு சொல்லிருக்காரு மொத்ததுல இது பாக்குறதுக்கு குட்டி ஏலியனா இருந்தாலும் இதால ஃபோர்ஆர்ம்ஸ்க்கே டஃப் கொடுக்க முடியுமாம் 

 அதோட இந்த ஏலியனோட கொடுக்குகளும் ரொம்பவே ஸ்ட்ராங்க இருக்கும் சொல்லபோனா இந்த கொடுக்குகள் மாதிரியான கைகள்தான் இதோட மொத்தபலம்ன்னு கூட சொல்லலாம் இந்த கொடுக்களை வச்சி இதால 30டன் ப்ரஸ்ஸரோட அழுத்த முடியுமாம் இது ரொம்ப ரொம்ப அதிகப்படியான ப்ரஸ்ஸர் இதவச்சி எவ்ளோ உறுதியான ஒரு உலோகத்தை கூட நொறுக்க இல்லன்னா நசுக்க முடியும் டைமன்ட்ஹெட்டோட வைரங்கள கூட இந்த ஏலியனால சாதாரண குச்சிய நொறுக்குற மாதிரி தூள் தூளா உடைக்க முடியும் ஏற்கனவே சொன்ன மாதிரி பென்னோட நிறைய ஏலியன்ஸ இந்த ஏலியனால ரொம்பவே ஈஸியா தோற்க்கடிக்க முடியும்  

இந்த Crabtasticஆல நண்டு மாதிரி 360° டிகிரில பார்க்கமுடியும் அதாவது இந்த ஏலியனால திரும்பாமலேயே பின்னடி நடக்குற விஷயங்களை பாக்க முடியும் இந்த பவரால எந்த ஒரு ‌ஏலியன் வில்லனா இருந்தாலும் இவர பின்னாடகலேர்ந்து கூட அட்டாக் பண்ண முடியாது ஒருவேளை அப்படி பண்ண முயற்சி பண்ணுனா இவரால அவங்கள ரொம்ப ஈஸியாவே பார்த்து அந்த அட்டாக்லேர்ந்து தப்பிச்சிக்க முடியும் அதுலயும் வேகமா ஓடக்கூடிய ஏலியனால கூட இவர அட்டாக் பண்ண முடியாது ஏன்னா இவரால அவங்களையும் பார்க்க முடியும் ஒருவேளை XLR8 மாதிரியான ஏலியன் இவர தாக்க வந்தாலும் இந்த ஏலியன் அதுலேர்ந்து தப்பிச்சு அவங்கள தன்னோட கொடுக்காள பிடிச்சிரும்

அதுமட்டுமல்லாம ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த ஏலியனாள கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிபோற ஏலியன்களையும் பார்க்கமுடியும் இந்த பவரோட இருக்குற முக்கியமான ஏலியன் நம்ம கோஸ்ட் ஃப்ரீக்தான் ஒருவேளை அவர் இந்த க்ராப்டாஸ்டிக்க தோற்கடிக்க முயற்சி பண்ணுனா கூட இந்த ஏலியனால அவரையும் பார்த்து தடுத்துட முடியுமாம் இந்த பவரோட இருக்குற முக்கியமான ஏலியன்கள் இவரும் அப்புறம் வைல்ட்மட் ஏலியனும்ம் ஏன்னா வைல்ட்மட் ஏலியனோட மோப்ப சக்தி ரொம்பவே ஸ்ட்ராங்க இருக்கும் அதவச்சும் கண்ணுக்கு தெரியாம மறைஞ்சி போற கோஸ்ட் ஃப்ரீக்க கண்டுபிடிக்க முடியும் ஆனா அதவிட இவர் வெறும் கண்ணாலயே கோஸ்ட் ஃப்ரீக்க கண்டுபிடிச்சி தடுத்து சண்டை போடுவாருன்னு சொல்லிருக்காங்க இந்த ஏலியன் மட்டும் பென் யூஸ் பண்ணிருந்தா சூப்பரா இருந்திருக்கும் 

இந்த ஏலியனோட இன்னொரு சக்தி தண்ணீர்ல சுவாசிக்குற சக்தி இந்த பவரோட நிறைய‌ பென்‌டெனா ஏலியன்ஸ் இருக்கு சொல்லபோன ஃபோர் ஆர்ம்ஸ்க்கு கூட இந்த சக்தி இருக்கு ஆனா குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் இருக்கும் ஆனா இந்த க்ராப்டாஸ்டிக்கு அப்படி கிடையாது இந்த ஏலியனாள எவ்ளோ நேரம் வேணாடுமானலும் தண்ணிக்குள்ள இருக்க முடியும் இதால தண்ணிக்குள்ள ரிப்ஜாவ்ஸ்ஸ விட 3 மடங்கு வேகமா நீந்த முடியும் அதுக்கு இதோட கால்கள் உதவி செய்யுது இதோட கால்களை இந்த ஏலியனால தன்னோட கால்கள ஒரு செகண்டுக்கு 100 தடவைக்கு மேல அசைக்க முடியுமாம் ஆனா தரையில இதோட வேகம் குறைஞ்சிரும் ஆனாலும் இந்த ஏலியனால XLR8அ விட கொஞ்சம் தான் கம்மியா இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க 

அதோட சுவர்கள் மேல பல்லி மாதிரி நடக்கமுடியும் இந்த ஏலியனோட கொடுக்குகள் இதற்க்கு உதவி பண்ணுது இதால ஏற்கனவே சொன்ன மாதிரி ரொம்ப டைட்டா பிடிச்சிக்க முடியும் அதுதான் இந்த ஏலியனை இன்னும் பலசாலியா மாத்துது அதோட இந்த ஏலியனோட ஓடு ரொம்பவே பலம் வாய்ந்ததது இத உடைக்குறதுக்கு கொஞ்சம் கூட சாத்தியமே இல்லைன்னு சொல்லிருக்காங்க

Crabtastic ன் பலவீனங்கள்: 

இதுவரைக்கும் பென் இந்த ஏலியனை Use பண்ணி யார்கூடயும் சண்டை போட்டது இல்ல அதனால இந்த ஏலியனோட பலவீனங்களை பத்தி எதுவும் சொல்லப்படல ஆனா அதிக வெப்பத்தை இந்த ஏலியனால தாங்கிக்க முடியாது ன்னு சில தகவல்கள் இருக்கு அதாவது NRG மாதிரியான ரொம்பவே பயங்கரமான சக்திய மட்டும் தான் தாங்கிக்க முடியாது மத்தபடி சாதரண நெருப்பு இவர ஒன்னுமே பண்ணாது

இந்த ஏலியனோட Design எனக்கு ரொம்பவே பிடிச்ச Design அதோட இந்த ஏலியனுக்கான Design ம் Ben 10 சீரிஸ்ல காட்டப்பட்ட Kraab ங்குற ஏலியனோட Design ம் ஒரு மாதிரிதான் இருக்கும் ஆனா இந்த இரண்டு ஏலியனும் வேற வேறன்னு Tom Perkins Confirm பண்ணிருக்காரு இருந்தாலும் இதுங்க ரெண்டும் 90% ஒரு மாதிரிதான் இருக்கும்

அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் க்ராப்டாஸ்டிக் ஏலியன பத்தின முழு விளக்கம் இதே மாதிரி பென்னோட அடுத்த ஏலியன்ஸ் பத்தி அடுத்த போஸ்ட்ல பார்க்கலாம் இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம நம்ம Blogஅ ஃபாலோவ் பண்ணிக்கோங்க ப்ரண்ட்ஸ்

நன்றி மக்கள்ஸ்

Post a Comment

0 Comments

Close Menu