ஹாய் மக்கள்ஸ்
எல்லாருக்கும் வணக்கம் இந்த POST நம்ம BEN இரண்டாவதா Transform ஆன WILDMUTT ஏலியன் பத்தி பார்க்க போறோம் இந்த ஏலியன் பென்னோட ஏலியன்களிலேயே ரொம்பவே வித்தியாசமானது அது ஏன்னு முழுசா பார்த்திடலாம்
உருவான கதை :
இந்த வைல்ட் மட் ( WILDMUTT ) ஏலியனோட உண்மையான இனத்தோட பேரு வுல்பிமான்சர் ( Vulpimancer ) அதோட இந்த ஏலியன்கள் வாழ்ந்துட்டு இருக்குற கிரகத்தோட பேரு வுல்பின் ( Vulpin ) அதுமட்டுமில்லாம இந்த WILDMUTT ஏலியன் BEN 10 CLASSIC சீரிஸில் இரண்டாவதாக TRANSFORM ஆன ஏலியன் இந்த ஏலியன் எனக்கு பெர்சனல்ல ரொம்பவே பிடிச்ச ஏலியனும் கூட
இந்த ஏலியனுக்கு கண்கள் கிடையாது சுத்தி நடக்குற எல்லா விஷயங்களையும் SENSE செய்துதான் புரிஞ்சிக்க முடியும் அதோட இதுக்கு முக்கு அப்புறம் காதுன்னு எதுவுமே இருக்காது
இதுக்கு காரணம் இந்த WILDMUTT ஏலியனோட கிரகம்தான் ஏன்னா WILDMUTT வாழுற கிரகம் கேலக்ஸியோட இருட்டான இடத்தில இருக்குறதால இங்க வெளிச்சம் இருக்காது
அதோட அந்த கிரகத்தில உயிர் பிழைச்சி வாழுறதும் ரொம்பவே கஷ்டமான விஷயம் ஏன்னா அந்த அளவுக்கு இந்த கிரகம் விஷத்தன்மையோட இருக்கும் இந்த கிரகம் ஒரு காலத்தில ஒட்டுமொத்த கேலக்ஸியோட குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுறதுக்கான இடமா வச்சிருந்தாங்க அதனாலதான் இப்போ இந்த கிரகம் எந்தவிதமான உயிரினமும் வாழ்றதுக்கு தகுதியில்லாத கிரகமா மாறிடுச்சு இப்படி ஒஇந்த கிரகம் மாறினதால இப்போ இந்த கிரகத்தில வைல்ட்மட் ஏலியன்ஸ் மட்டும்தான் இருக்கு அதோட இந்த கிரகத்தில வரக்கூடிய பிரச்சினைகளை சமாளிச்சி வாழுறதுக்கு WILDMUTT ஏலியன்ஸ் பழகிடுச்சிடுங்க அதனாலதான் இந்த ஏலியன்கள் மட்டும் வுல்பின் கிரகத்தில வாழுதுங்க
அதோட வுல்பின் கிரகத்தில வெளிச்சம் இல்லாத காரணத்தால WILDMUTT ஏலியன்ஸ்க்கு கண்ணோட அவசியம் இல்லாம இருந்துச்சு அதனால வைல்ட்மட் ஏலியன்ஸ் சுத்தி நடக்குற விஷயங்களை உணர்ந்து தெரிஞ்சிக்க ஆரம்பிச்சதுங்க அதனாலதான் காலப்போக்கில WILDMUTT ஏலியன்ஸோட கண்கள் அதோட உடம்பிலிருந்து மறைஞ்சி போச்சி இதுதான் வைல்ட்மட் ஏலியன்ஸ்க்கு கண் இல்லாததுக்கான காரணம்
இந்த WILDMUTT ஏலியன்ஸ் மட்டும்தான் BEN TRANSFORM ஆகுற ஏலியன்ஸ்ல இப்போதைக்கு பேச முடியாத ஏலியனா இருக்கு ஏன்னா Omnitrix இல்லன்னா Universal Translator ல கூட WILDMUTT ஏலியன்ஸோட பாஷையை Translate பண்ணகூடிய வசதி கிடையாது ஏன்னா ஆம்னிட்ரிக்ஸால சில ஏலியன்ஸோட பாஷைகளைதான் ட்ரான்சிலேட் பண்ண முடியும் அந்த லிஸ்ட்ல வைல்ட்மட் ஏலியன் இல்ல இதுக்கு உதாரணமா சிக்ஸ் சிக்ஸ் ( Six Six ) ஏலியன கூட சொல்லலாம்
ஏன்னா அந்த ஏலியனால பேசமுடியாத மாதிரிதான் காட்டிருப்பாங்க ஆனா அது உண்மை இல்ல அந்த சிக்ஸ் சிக்ஸ் ஏலியன் அதோட பாஷைய பேசுது நமக்குதான் அத ட்ரான்சிலேட் பண்ணாம ஒன்னும் புரியாத மாதிரி பென் டென் சீரிஸ்ல காட்டிருப்பாங்க ஆனா அந்த ஏலியனோட பாஷையை டெட்ராக்ஸால ( Tetrax ) புரிஞ்சிக்க முடியும்ன்னு காட்டிருப்பாங்க
இதுக்கான விளக்கம் உங்களுக்கு பென் டென் சீக்ரெட் ஆஃப் தி ஆம்னிட்ரிக்ஸ் படத்தில கிடைக்கும் ஏன்னா அந்த படத்திலதான் சிக்ஸ் சிக்ஸ் டெட்ராக்ஸ இன்கார்ஷிகாங்குற விண்வெளி ஜெயில்ல மீட் பண்ணிருப்பாரு அங்கதான் இந்த டயலாக்க சொல்லிருப்பாங்க
ஆனா அதேடைம்ல ULTIMATE WILDMUTTஆல பேசவும் முடியும் ஏன்னா WILDMUTT ஏலியன் EVOLVED ஆகும் போது ULTIMATRIX அதுக்கு பேசுற சக்தியை கொடுத்திருக்கும் இதுக்கான விளக்கத்த ஸ்கர்ட் ஒருதடவ கொடுத்திருக்கும் என்னதான் ஆம்னிட்ரிக்ஸ் ரொம்பவே அட்வான்ஸான ஆயுதமா இருந்தாலும் அதுல எக்கச்சக்கமான குளறுபடிகள் இருக்கு அதுல ஒன்னுதான் வைல்ட்மட்டால பேசமுடியாம இருக்குறது
இதேமாதிரி ராத் ஏலியனுக்கும் ஒரு பிரச்சினையை ஆம்னிட்ரிக்ஸ் உருவாக்கிருக்கும் அதுதான் ட்ரஸ்ஸே இல்லாம ராத் ஏலியனா மாத்துறது ஏன்னா ராத் இனத்த சேர்ந்த எல்லா ஏலியன்ஸூம் ட்ரஸ்ஸோடதான் இருக்கும் ஆனா பென் மாறுற ராத் மட்டும் தான் ட்ரஸ்ஸே இல்லாம இருக்கும் இந்த பிரச்சினையை ஸ்கர்ட்டே தீர்த்து வச்சிருக்கும் அதாவது நம்ம ராத்க்கு ட்ரஸ்ஸ ஸ்கர்ட்தான் ஆம்னிட்ரிக்ஸ்லேர்ந்து உருவாக்கி கொடுக்கும்
அதுக்கப்புறம் அந்த ட்ரஸ்ஸோடதான் ராத் ஏலியன் எப்பவும் சண்டைக்கு வருவாரு அதே மாதிரிதான் பென் அல்டிமேட் ஏலியனா வைல்ட்மட்ட மாத்தும் போது அவரால பேச முடியுதுன்னு காட்டிருப்பாங்க இப்படி வைல்ட்மட்டால பேசமுடிதுங்குற விஷயத்தை வச்சி நிறைய எபிசோட்ஸ்ல எல்லாரும் வைல்ட்மட்ட கிண்டல் பண்ணிருப்பாங்க
அதோட BEN 10 CLASSIC சீரிஸ்ல உபயோகபடுத்தின முதல் 10 ஏலியன்ஸ்ல WILDMUTT க்கு மட்டும்தான் ULTIMATE FORM கொடுக்கபட்டிடுருக்கு மத்தபடி CANNON BOLT GHOST FREAK க்கு பதிலாக OMNITRIXல் கொடுக்கப்பட்ட ஏலியன் WAY BIG SECRET OF THE OMNITRIX படத்தின் கடைசியில் காட்டப்பட்டிருக்கும் இதுல WILDMUTTஐ தவிர ULTIMATE FORM இருக்கும் மத்த BEN 10 CLASSIC ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஏலியன்ஸ் இவங்கமட்டும்தான் ஆனா இவங்கள மாதிரி ஸ்பெஷல் ஏலியனா இல்லாம வைல்ட்மட்க்கு மட்டும் தான் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கு
ஏன்னா ஏற்கனவே சொன்ன மாதிரி வைலட்மட்டோட பேசுற பிரச்சினை தீர்த்துவைக்குறதுக்குதான் இந்த ஏலியனுக்கு முக்கியமா அல்டிமேட் ஃபார்ம் கொடுத்திருக்காங்க அத ஒரு காரணமா வச்சி அல்டிமேட் வைல்ட்மட்டால பேசமுடியும்ன்னு காட்டிருக்காங்க
Wildmutt ன் சக்திகள் :
WILDMUTT ன் முக்கிய சக்திகளில் முக்கியமானது SENSE OF SMELL இதவச்சிதான் WILDMUTT தன்னோட எதிரிய தெரிஞ்சிக்குறாங்க அதோட WILDMUTT க்கு கண் காது மூக்குன்னு எதுவுமே கிடையாது
அதுக்கு பதிலா அதோட கழுத்து பக்கதில ஆறு செதில்கள் மாதிரியான அமைப்பு இருக்கும் இது மூலமாதான் WILDMUTT ஏலியன்ஸ் மூச்சு விடுவது சுத்தி இருக்குறத பத்தி தெரிஞ்சிக்குறது மோப்பம் பிடிக்குறது போன்ற வேலைகளை செய்யுதுங்க
இந்த வைல்ட்மட் ஏலியனால 10 கிலோமீட்டரை தாண்டி இருக்குற ஒரு போருளைகூய தன்னோட சென்ஸ் பவர் மூலமா உணர முடியும்ன்னு சொல்லிருகாங்க
இந்த ஏலியன்ஸோட மோப்ப சக்தி ரொம்பவே அதிகமா இருக்கும் எந்தளவுக்குன்னா இவங்களோட SENSE பண்ற சக்தி SONAR இல்லன்னா RADAR மாதிரி வேலை செய்யுறதால இதோட மோப்ப சக்திகிட்டேர்ந்து யாராலயும் தப்பிக்க முடியாது
கண்ணுக்கு தெரியாம மறைஞ்சி போற சக்தியோட இருக்குறவங்களால கூட ( GHOST FREAK ,BIG CHILL மாதிரியான ஏலியன்ஸ் ) WILDMUTT கிட்டேர்ந்து தப்பிக்க முடியாது அப்படிதான் சார்மிலியன் ஏலியனும் கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிபோய் பென்ன ஏமாத்துவாரு அப்போதான் பென் முதல்தடவையா அல்டிமேட் வைல்ட்மட்ட யூஸ் பண்ணிருப்பாரு அப்போ சார்மிலியன் எங்க மறைஞ்சிருக்காருன்னு ரொம்பவே ஈஸியா கண்டுபிடிச்சிருவாரு ஏன்னா அந்த அளவுக்கு வைல்ட்மட்டோட மோப்ப சக்தி இருக்கும்
இந்த ஏலியன்ஸோட இன்னொரு முக்கியான சக்தி அட்டகாசமான பலம் அதோட மிருகம் மாதிரியான சண்டை போடும் யுக்தி இதனாலயே WILDMUTT கிட்ட மோதி ஜெயிக்குறது ரொம்பவே கஷ்டமான விஷயம் ஏன்னா வைல்ட்மட் எப்பவுமே ஒரேமாதிரியான சண்டை யுக்திய பயன்படுத்தாது ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமான சண்டை யுக்திய பயன்படுத்தும் இதுதான் இதோட முக்கியமான பலம்னே சொல்லலாம்
ஏன்னா யாராவது ஒரு வில்லன் பென்னோட ஏலியன் சண்டை யுக்திய காப்பி பண்ணினா கூட வைல்ட்மட்டோட சண்டை யுக்திய காப்பியடிக்க முடியாது அந்தளவுக்கு ரொம்பவே வித்தியாசமா வைல்ட்மட் சண்டை போடும் அடுத்து இதோட முக்கியமான ஆயுதம் இதோட கூர்மையான நகங்கள் தான்
இந்த நகங்கள் ஒவ்வொரு விரல்களிலயும் இருக்கும் இதவச்சி எவ்வளவு ஸ்ட்ராங்கான பொருளா இருந்தாலும் வைல்ட்மட்டால கிழிக்க முடியும் ஏன்ன அதோட நகங்கள் வைரங்கள் மாதிரி ரொம்பவே உறுதியா இருக்கும்ன்னு சொல்லிருக்காங்க இதால வில்கேக்ஸோட ஸ்கின்ன கூட கிழிக்க முடியுமாம்
ஆனா பென்னால வைல்ட்மட்ட வச்சி வில்கேக்ஸ்கூட மோத முடியாது ஏன்னா அதோட பவர் பென் எப்பவும் சரியா யூஸ் பண்ணிகிட்டதே இல்ல அப்படி ஒருவேள வைல்ட்மட்டோட பவர பென் சரியா யூஸ் பண்ண கத்துகிட்டா கண்டிப்பா அவரால வில்கேக்ஸ ஈஸிய தோற்கடிக்க முடியும்
ஆனா எதிர்கால பென்ன வச்சி ஒரு எபிசோட் பென் டென் கிளாசிக் சீரிஸ்ல இருக்கும் அதுல பென்னோட எந்த ஏலியனும் வில்கேக்ஸ தோற்கடிக்க முடியாத மாதிரி காட்டிருப்பாங்க அதனால அந்த வில்கேக்ஸ் நினைச்சா வைல்ட்மட்ட தோற்கடிக்க முடியும் ஏன்னா வைல்ட்மட்க்கு நிறையவே பலவீனங்கள் இருக்கு அத யூஸ் பண்ணி மட்டும் தான் அவர தோற்கடிக்க முடியும் மத்தபடி வைல்ட்மட்ட தோற்கடிக்குறது ரொம்பவே கஷ்டமான விஷயம்
WILDMUTT ன் பலவீனங்கள் :
இந்த ஏலியன்ஸ் முழுசா இதுங்களோட செதில் மாதிரியான உறுப்பையே நம்பி இருக்குதால BEN க்கு ஜலதோஷம் ( Cold ) பிடிச்சிட்டா இந்த ஏலியனோட சக்திய உபயோகிக்கமுடியாம போய்டும் இத பென் டெனோட கிளாசிக் சீரிஸ்ல ஒரு எபிசோட்ல காட்டிருப்பாங்க பென்னுக்கு ஒரு எபிசோட்ல சளி பிடிச்சிருக்கும் அப்போ அவர் வைல்ட்மட்ட யூஸ் பண்ணும் போது அதால சரியா சுத்தி இருக்குற எதையும உணரமுடியாம கஷ்டபட்டு பூச்சி மாதிரி இருக்குற வில்லன் கிட்ட அடி வாங்கிருப்பாரு
இந்த மாதிரி பென்னுக்கு வர்ற எந்த பிரச்சனையா இருந்தாலும் அது அவரோட ஏலியன்களையும் பாதிக்கும் அப்படிதான் பென்னுக்கு சளி பிடிச்சது வைல்ட்மட்டையும் பாதிச்சிருக்கும் ஆனா சில ஏலியன்ஸ்க்கு உதாரணமாக ஹீட்ப்ளாஸ்ட்க்கு இது உதவியா இருந்திருக்கும் ஏன்னா பென்னுக்கு சளி பிடிச்சிருந்தப்போ ஹீட் ப்ளாஸ்ட்டா மாறுவாரு அப்போ அவருக்கு ஐஸ்ஸ உருவாக்குற சக்திகிடைச்சிருக்கும் ஆனா வைல்ட்மட்ட பொறுத்தவரைக்கும் இது பலவீனம் தான்
இந்த ஏலியன்ஸோட கேட்க்கும்திறன் ரொம்பவே அதிகம் ஆனா அதுவே அதிகப்படியான ஒலியான இருந்தா அத இவங்களால தாங்கிக்க முடியாது இதையும் பென் டென் கிளாசிக் சீரிஸ்ல ஒரு எபிசோட்ல காட்டிருப்பாங்க க்ராண்ட்பா மேக்ஸ் ப்ளம்பரா இருந்த விஷயத்தை பென்கிட்ட சொல்லிருப்பாரு அப்போ அவர் கூட வொர்க் பண்ணின பார்ட்னர் பணத்துக்காக ப்ளம்மர்ஸ் பிடிச்ச ஏலியன்ஸ திருட்டுத்தனமா ரிலீஸ் பண்ணிருவாரு அதுல ஒரு ஏலியன்ஸ் தான் வுல்பிமான்சர்ஸ்ங்குற வைல்ட்மட் ஏலியன்ஸ்
அப்போ பென்னும் வைல்ட்மட்டா மாறி அதுங்கள சமாளிக்க ட்ரை பண்ணுவாரு அது முடியாம போக அந்த ஏலியன்ஸ் பென்ன அட்டாக் பண்ணும் அப்போ மேக்ஸோட பார்ட்னர் சோனிக் சவுண்ட் பிளாஸ்டர்ர யூஸ் பண்ணி பென்னோட வைல்ட்மட் அப்புறம் அவரே ரிலீஸ் பண்ணுன வைல்ட்மட் ஏலியன்ஸ அட்டாக் பண்ணிருப்பாரு இந்த சீன்லயே க்ராண்ட்பா மேக்ஸ் வைல்ட்மட்க்கு அதிகப்படியான சத்தம்தான் பலவீனம்ன்னு சொல்லிருப்பாரு
அதேமாதிரி இதே எபிசோட்லதான் WILDMUTTம் அதோட இனம்கூட எப்பவும் ஒன்னா இருக்காதுன்னும் சொல்லிருப்பாங்க அதனாலதான் பென்னோட வைல்ட்மட்ட மத்த வைல்ட்மட்ஸ் அட்டாக் பண்ணினதாவும் காட்டி இருப்பாங்க
அடுத்ததா பென்னோட பலவீனங்கள் எல்லாமே வைல்ட்மட்டையும் பாதிக்கும்ன்னு அதனாலதான் ஸாம்போசோவ பாத்தப்போ பென்னோட வைல்ட்மட் பயந்து போய்ருக்கும் ஏன்னா பென்னுகாக்கு கோமாளிகளை பயம் அதே பயம் வைல்ட்மட்டையும் பாதிச்சிருக்கும் ஆனா பென் கோஸ்ட் ஃப்ரீக்க யூஸ் பண்ணி ஸாம்போஸோவ தோற்கடிச்சிருப்பாரு அதுக்கப்புறம் கோஸ்ட் ஃப்ரீக்க நினைச்சி பென் பயப்படுவாரு அதனால கோஸ்ட் ஃப்ரீக்க பாத்தாலும் வைல்ட் மட் பயப்படும்ன்னு காட்டிருப்பாங்க
அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த வைல்டமட் ஏலியன் பத்தின முழு விளக்கம் இந்த போஸ்ட் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம நம்ம Blogஅ ஃபாலோவ் பண்ணிக்கோங்க ப்ரண்ட்ஸ்
இதே மாதிரி அடுத்த Post ல BEN 10னோட சூப்பரான மத்த ALIENS பத்தி பார்க்கலாம்
நன்றி மக்கள்ஸ்
0 Comments
Thanks For Visiting Our Blog