Google Adsense Code

Heatblast Origin பற்றி தமிழில் Heatblastஉருவான கதை ( Ben 10 Aliens - Part 1 )

 


ஹாய் மக்கள்ஸ்

 எல்லாருக்கும் வணக்கம் இந்த POSTல நம்ம Blog ஓட முதல் Post இதுல HEATBLAST பத்தி நாமக்கு தெரியாத சுவாரஸ்யமான சில தகவல்களை பத்தி விரிவா பார்க்கலாம்  

உருவான கதை :

ஹீட்ப்ளாஸ்ட் இனத்தோட உண்மையான பைரோனைட் ( Pyronite ) இந்த ஏலியன்கள் வாழ்ந்துட்டு இருக்குற கிரகத்தோட பேரு பைரோஸ் ( Pyros ) இந்த கிரகம் முழுக்க முழுக்க எரிமலை மாதிரியான நட்சத்திரம்ன்னு பென் டென் சீரஸ்ல சொல்லிருக்காங்க 

இந்த இடத்தில உயிர்பிழைச்சு வாழ்றது ரொம்பவே கஷ்டமான விஷயம் ஏன்னா இந்த கிரகம் எரிமலை மாதிரி எப்பவும் கொந்தளிக்குற எரிமலை குழம்போடவே இருக்கும் அதனால குறிப்பிட்ட சில ஏலியன்ஸ் மட்டும்தான் இங்க உயிர்வாழ முடியும் அதுல முக்கியமானவங்கதான் இந்த பைரனைட்ஸ்ங்குற ஹீட்ப்ளாஸ்ட் ஏலியன்ஸ்

Heatblast நெருப்பு சக்தியை கையாளக்கூடிய ஏலியன் இந்த ஏலியனாதான் முதல்ல OMNITRIX கிடைச்சதும் பென் Transform ஆகிருப்பாரு அதோட இந்த ஏலியன்தான் Ben Classic Series ல அதிகமா உபயோகபடுத்தின ஏலியனும் கூட  இந்த ஏலியன் Omnitrix ல் Myaxx ஆல் ( OMNITRIXஐ உருவாக்கிய Azmuth ன் Assistant ) சேர்க்கப்பட்டுச்சுன்னு குறிப்பிட்டு இருக்காங்க

ஏன்னா Fourarms மாதிரியே Heatblast Warrior இனத்த சேர்ந்த ஏலியன்தான் அதனால இவங்க எப்பவுமே சண்டை போடுறத பத்தியும் புதுப்புது Techniques கத்துக்குக்குளதுலயும் ரொம்பவே ஆர்வமா இருப்பாங்க அதனால எதிரிங்ககூட சண்டை போட இந்த ஏலியன் ஆம்னிட்ரிக்ஸ யூஸ் பண்றவங்களுக்கு உதவியா இருக்கும்ன்னு இந்த ஏலியன ஆம்னிட்ரிக்ஸ்ல சேர்த்திருக்காங்க

 பொதுவா Pyronite வகை ஏலியன்ஸ் சண்டை போடுறதுலயும் ரொம்பவே Expert வும் இருப்பாங்க அதோட இவங்களால எப்படிபட்ட Heat ஐயும் தாங்கிக்க முடியும் இதனாலதான் இந்த ஏலியன OMNITRIX ல் சேர்த்தாங்க இந்த ஹீட்ப்ளாஸ்ட் ஏலியனோட டிஎன்ஏ மியாக்ஸ் சேர்த்ததுக்கு இதுதான் காரணம் அதோட இந்த ஏலியன் டிஎன்ஏ ஆம்னிட்ரிக்ஸ்ல வந்ததுக்கு ஒரு கதை இருக்கு

மியாக்ஸ் ஆம்னிட்ரிக்ஸ்க்கான டிஎன்ஏக்களே தேடித்தேடி சேகரிச்சிட்டு இருந்த சமயத்தில சில ஏலியன்ஸ் மியாக்ஸ அட்டாக் பண்ணிருந்தாங்க அப்போ மியாக்ஸ காப்பாத்தினது ஒரு ஹீட்ப்ளாஸ்ட் ஏலியன்தான் அதனாலதான் மியாக்ஸ் இந்த ஏலியன் டிஎன்ஏவ சேகரிச்சுகிட்டாங்கன்னு சொல்லிருக்காங்க

அப்படி மியாக்ஸ காப்பாத்துன ஹீட் ப்ளாஸ்ட் ஏலியன பென்டென்னோட சில காமிக்ஸ்ல காட்டி இருக்காங்கலாம் ஆனா பென்டென்னோட காமிக்ஸ் அவ்ளோவா ஹிட் ஆகல அதனாலதான் இந்த ஏலியன பத்தி நம்மளாள அதிகமா தெரிஞ்சிக்க முடில ஒருவேளை பென் டென் காமிக்ஸ் நல்ல ஹிட் ஆகிருந்த பென் டென் சீரிஸ்ல நாம பாக்காத நிறைய கதைகள பாத்திருக்கலாம்

அது நடக்காம போனது பென் டென் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமான விஷயம்தான் ஏன்னா பென் டென் காமிக்ஸ்ல நாம பார்க்கத நிறைய கதைகளும் ஏலியன்களும் இருந்திருக்கு அதையெல்லாம் பத்தி நம்ம ப்ளாக்ல கண்டிப்பா விரிவா எழுதுறேன் .

ஹீட்ப்ளாஸ்ட் பற்றி தெரியாத உண்மைகள் :

இந்த ஏலியனை பல இடங்கள்ல முதலாவது ஏலியனா காட்டி இருப்பாங்க ( Ben 10 Vs Generator Rex Crossover பட வில்லன் Alpha வும் முதலில் Transform ஆகுற ஏலியன் Heatblast தான் ) Ben க்கு ரொம்பவே பிடிச்ச ஏலியன்கள்ல HEATBLAST ரொம்ப முக்கியமான ஏலியனும் கூட  இந்த ஏலியன் ஏன் ஸ்பெஷல்லா இருக்குன்னு நம்ம Tamil Pro Gamer YouTube Channelல கூட நான் ஒரு‌ வீடியோ அப்லோட் பண்ணிருக்கேன் 

இந்த Pyronite வகை ஏலியன்ஸ் மத்த ஏலியன்ஸோட குறிப்பிட்ட அளவு தொடர்ப மட்டும்தான் வச்சிக்கும் மத்தபடி அதுங்களோட வாழ்நாள் முழுக்க தங்களோட சக்தியை Upgrade பண்ணி சக்திவாய்ந்த ஏலியனா மாற ட்ரைனிங் எடுத்துட்டே இருக்கும் ( Dragon Ball Series Saiyans மாதிரி )

இந்த ஏலியன இதுவரைக்கும் வெளிவந்திருக்குற எல்லா Ben 10 சீரிஸ்லயும் நம்மாள பாக்கமுடியும் ஏன்ன இந்த ஏலியன இப்போ வரைக்கும் BEN 10 Success க்கான Sentiment ஆ Use பண்ணிட்டு இருக்காங்க ஏன்னா பென் டென் சீரிஸோட தொடக்கமா இருந்து இப்போ வரைக்கும் ஹெட்ப்ளாஸ்ட் தனக்குன்னு ஒரு பெரிய இடத்த பென் டென் ரசிகர்கள் கிட்ட பிடிச்சிருக்காரு

ஆனா பென் டென் ஒரிஜினல் கிளாசிக் சீரிஸ்ல மட்டும்தான் இந்த ஏலியன ரொம்பவே சூப்பரா காட்டி இருப்பாங்க அதுக்கப்புறம் வந்த பென் டென் ஏலியன் ஃபோர்ஸ் ,பென் டென் அல்டிமேட் ஏலியன்ஸ்,பென் டென் ஆம்னிவெர்ஸ் ,பென் டென் ரீபூட் சீரிஸ்லலாம் இந்த ஏலியனோட பவரையும் இதோட கேரக்டரையும் ரொம்பவே டேமேஜ் பண்ணிட்டாங்க

பென் டென் ஏலியன் ஃபோர்ஸ்ல ஹீட்ப்ளாஸ்ட்ட பென் இரண்டு இடத்துல மட்டும்தான் யூஸ் பண்ணுவாரு ஏன்னா இந்த ஏலியன Replace பண்றதுக்குதான் ஸ்வாம்ப்ஃபைர் ( Swamp Fire) ஏலியன கொண்டு வந்தாங்க அதனாலதான் இந்த ஏலியன நாம அதிகமா பென் டென் ஏலியன் ஃபோர்ஸ்ல பார்க்க முடியல 

இதே நிலைமைதான் பென் டென் அல்டிமேட் ஏலியன்ஸ் அப்புறம் பென் டென் ஆம்னிவெர்ஸ்லயும் நடந்துச்சு ஆனா பென் டென் ரீபூட்ல ஹீட் ப்ளாஸ்ட்ட அடிக்கடி காட்டுவாங்க அதுக்கு காரணம் என்னன்னா பென் டென் ரீபூட் முழுசா குழந்தைகளுக்கான பொம்மைகள விற்க்குறதுக்காக உருவாக்கப்பட்ட சீரிஸ்

அதனாலதான் அதுல ஏலியன்களோட Transformation Scenes கூட ரொம்பவே குழந்தைதனமா இருக்குற மாதிரி காட்டிட்டு இருக்காங்க ஏன்னா அந்த சீரிஸ்ல ரொம்ப மோசமான Transformation வச்ச குழந்தைகளை அது பாதிக்கும்ன்னுதான் இப்படி பண்ணிருக்காங்க ஆனா அதுதான் பென் டென் சீரிஸோட தோல்விக்கு முக்கியமான காரணமா இருந்தது

அதுமட்டுமல்லாம பென் டென் ரீபூட்ல நாம பாக்குற ஏலியன்ஸ் எல்லாருமே எப்படி Choose பண்ணிருக்காங்கன்னா இதுவரைக்கும் பென் டென்னோட ஏலியன்ஸ்க்காக ரிலீஸ் ஆன Toys எது அதிகமா Sales ஆச்சோ அந்த ஏலியன்ஸ் அப்புறம் ரசிகர்களுக்கு ( குறிப்பா குழந்தைகளுக்கு ) எந்த ஏலியன அதிகமா பிடிச்சதோ அந்த ஏலியன்களை மட்டும் Choose பண்ணிதான் டென் ரீபூட்ட ஓட்டிட்டு இருக்காங்க

அதோட சில ஏலியன்களை Remodel பண்ணினதுக்கும் Toysஅ விக்கணும்ன்னு அவங்க டார்கெட் பண்ணினதுதான் காரணமாம் ஏன்னா வைல்ட் வைய்ன் ( Wild vine ) ஏலியனோட கைகள பென் டென் ஒரிஜினல் கிளாசிக் சீரிஸ்ல நீளமா இருக்குற மாதிரி காட்டி இருப்பாங்க அந்த மாதிரி பொம்மைகள உருவாக்குறதவிட Human மாதிரி வைல்ட் வைய்ன்ன Remodel பண்ணிட்டா Toys உருவாக்குறதுக்கு ஈஸியா இருக்கும்ன்னு தான் ஏலியன்ஸோட உருவத்தை மாத்தி இருக்குறதா சொல்றாங்க

உருவ அமைப்பு :

இந்த ஹீட் ப்ளாஸ்ட் ஏலியன் எரிமலை மாதிரியான உடலமைப்போட இருக்குற ஏலியன் இந்த ஏலியன்கள் பிறக்கும் போதே நெருப்ப உருவாக்குற சக்தியோடதான் பிறக்கும் அதோட இந்த ஏலியனோட கிரகமான பைரோஸ்ல இப்படி பிறக்குற ஏலியன்ஸ்க்கு சின்ன வயசுலேர்ந்தே ட்ரைனிங் கொடுத்து ஒரு வாரியரா மாத்துவாங்க

இந்த ஏலியன்ஸ்ஸோட பாடி பாறை மாதிரி ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கும் அதனால ஹீட் ப்ளாஸ்டால ரொம்பவே சக்திவாய்ந்த Attacksலேர்ந்து தப்பிச்சிக்க முடியுது அதோட இந்த பாறை மாதிரியான உடலமைப்புக்குள்ளதான் ஹீட்ப்ளாஸ்டோட உண்மையான உருவம் இருக்குன்னு சொல்றாங்க உதாரணத்துக்கு நம்ம NRG ஏலியன் மாதிரி சொல்லலாம் ஏன்ன NRG ஏலியன் உடம்ப சுத்தி ஒரு கவசம் இருக்கும் அந்த கவசம்தான் அதை அடச்சி வச்சிருக்க ஒரு ஜெயில்ன்னு கூட சொல்லலாம் 

ஒருவேளை NRG அந்த கவசத்த விட்டு வெளிய வந்துட்டா அதோட சக்தி இந்த பூமியவே அழிச்சிரும்ன்னு காட்டிருப்பாங்க அது மாதிரிதான் நம்ம ஹீட்ப்ளாஸ்ட்டுக்கும் ஒருவேளை ஹீட்ப்ளாஸ்ட் உடம்ப சுத்தி இருக்குற அந்த கவசம் இல்லாம போய்ட்டா ஹ்ட்ப்ளாஸ்ட்டோட சக்தி மனுஷங்களை பாதிக்கும் அதோட ஹீட்ப்ளாஸ்ட்க்கும் எதிரிங்களோட அட்டாக்லேர்ந்து பாதுகாப்பு இல்லாம போய்டும் அதான் அவரோட உடம்ப சுத்தி அந்த கவசம் மாதிரியான அமைப்பு இருக்கு 

அதோட இந்த கவசம் ஹீட் ப்ளாஸ்ட்டோட சக்திய குறைச்சி வச்சிருக்குன்னு கூட சொல்லலாம் ஏன்னா இந்த கவசம மாதிரியான உருவம்தான் ஹீட் ப்ளாஸ்ட்டோட சக்தி சிதறாம இருக்க வச்சிருக்கு இதையும் பென் டென் சீரிஸ்ல வொர்க் பண்ணினவங்க Officialஅ சொல்லிருக்காங்க

அதோட இந்த ஹீட்ப்ளாஸ்ட் ஏலியனா யார் மாறுறாங்களோ அவங்க உருவத்தையும் காப்பி பண்ணி அவங்க உடலமைப்புக்கு ஏத்த மாதிரி தன்னோட உடல மாத்திக்குமாம் இந்த சக்தி இந்த ஒரு ஏலியனுக்கு மட்டும்தான் இருக்குன்னும் சொல்லிருங்காங்க 

HEATBLAST ன் சக்திகள்

HEATBLAST நெருப்பை கட்டுபடுத்துற சக்திவாய்ந்த ஏலியன் இதனால  நெருப்பை உருவாக்கும் அதை ABSORB பண்ணிக்கவும் முடியும் மிகப்பெரிய காடே எரிஞ்சாலும் அத முழுசா இந்த ஹீட் ப்ளாஸ்ட் Absorb பண்ணிக்கும் அந்த அளவுக்கு இந்த ஏலியன்கிட்ட சக்தி இருக்கு கிட்டத்தட்ட 10 ஏக்கர் பரப்பளவில இருக்குற காடு எரிஞ்சா கூட இந்த ஏலியனால அந்த நெருப்ப வெறும் 1 நிமிஷத்திலயே முழுசா ABSORB பண்ணிக்க முடியும் 

அந்த அளவுக்கு ஹீட்ப்ளாஸ்ட்க்கு சக்தி இருக்கு ஆனா பென் டெனோட முதல் எபிசோட்ல பென் ஹீட்ப்ளாஸ்ட்டா மாறி காட்டை எரிச்சிருப்பாரு அப்போ இந்த சக்திய பத்தி பென்னுக்கு சுத்தாம தெரியாது அதனாலதான் அவர் காட்டை எரிச்சிருப்பாரு 

 அதுமட்டுமில்லாம நெருப்ப வச்சி பறக்குற சக்தியும் ஹெட் ப்ளாஸ்ட்க்கு இருக்கு ஆனா பென் டென் ஏலியன் ஃபோர்ஸ்ல வர‌ Alan Albright ங்குற பையன் ( இவனாலயும் ஹீட் ப்ளாஸ்ட மாற முடியும் இதுக்கு Omnitrix மாதிரியான எந்த Deviceம் தேவை இல்லை ) அவனோட ஹீட் ப்ளாஸ்ட் பவர வச்சி நெருப்பு பாறையை உருவாக்கி அது மூலமா பறக்குற மாதிரி காட்டி இருப்பாங்க 

இந்த ஏலியனுக்கு நெருப்பு வளையங்கள உருவாக்கு சக்தி நெருப்பு லேசர் மாதிரி மாற்றி பொருட்களை அறுக்கும் சக்தி நெருப்பு சூறாவளியை உருவாக்கும் சக்தியும் இருக்கு

அதோட இந்த ஏலியன நினைச்சா இதோட மொத்த சக்தியையும் Focus பண்ணி Nuclear Bomb க்கு இணையான சக்திய வெளிபடுத்த முடியும் அப்படி பண்ணும் போது 2 கிமீ தொலைவில இருக்குற எல்லாத்தையும் மொத்தமா அழிக்க முடியும் அந்த அளவுக்கு இந்த ஏலியன்கிட்ட சக்தி இருக்கு

இந்த ஏலியனுக்கு Strength ரொம்பவே அதிகம் ஹீட் ப்ளாஸ்ட் நினைச்சா 10 டன் வரைக்கும் Lift பண்ண முடியுமாம் அதோட பறக்கும் இதோட வேகம் ரொம்ப ரொம்ப அதிகம் சரியா எங்கேயும் Confirm பண்ணலனாலும் minimum 200Km வேகத்தில இந்த ஏலியனால பறக்க முடியுமாம் ஏன்னா பென் டென் கிளாசிக் சீரிஸ்ல பென் இந்த ஏலியன் வச்சிதான் பறந்திருப்பாரு ஆனா பறக்குறதுக்கான ஏலியனா பென் டென் கிளாசிக்ல காட்டுனது ஸ்டிங்ப்ளேதான் ஆனா அதோட வேகத்துக்கு இணைய நம்ம ஹெட்ப்ளாஸ்ட்டும் பறந்திருக்காரு 

ஹீட் ப்ளாஸ்ட் நெருப்பு சம்பந்தப்பட்ட ஏலியன் ஆனாலும் தண்ணிலயும் இந்த ஏலியனால நெருப்ப உருவாக்க முடியும் அதவச்சி எதிரிகளுக்கு Tough கொடுத்திருக்காரு நிறைய தடவ பென் தண்ணிக்குள்ள விழுந்தும் அத மொத்தமா நீராவியா மாத்திட்டு அதுலேர்ந்து தப்பிச்சு வந்திருக்காரு 

அதோட பென் டென் ரீபூட்ல இந்த ஏலியனுக்கு கார்ட்டூன் உடலமைப்புக்கான சக்திய கொடுத்திருக்காங்க அதாவது இந்த ஏலியனால Tom And Jerry மாதிரியான சக்திகளையும் Use பண்ணிக்க முடியும் உதாரணத்துக்கு இந்த ஏலியனால இதோட தலைய தன்னோட உடம்புலேர்ந்து தனியா கலட்டிட்டு திரும்ப தன்னோட உடம்புலயே Fix பண்ணிக்க முடியும் அடுத்து இந்த ஏலியனால தன்னோட சக்திய Use பண்ணாமலே அந்தரத்தில மிதக்க முடியும்னும் காட்டி இருக்காங்க

நம்ம ஹீட்ப்ளாஸ்ட்க்கு Healing Factor ரொம்பவே அதிகமா இருக்குறதால எவ்ளோ மோசமான அடிபட்டாலும் சீக்கிரம குணமாகிரும் அதுமட்டுமல்லாம இந்த ஏலியனால ரொம்ப தூரத்துக்கு எகிறி குதிக்கவும் முடியும் பென் டென் இந்த ஏலியன அதிக இடங்கள்ள யூஸ் பண்ணினதுக்கு ரொம்ப முக்கியமான காரணம் இதுதான் 

HEATBLASTன் பலவீனங்கள் :

இவரோட பலத்துக்கும் Durability க்கும்  LIMIT இருக்கு அத தாண்டுன வில்லனால இவர தோற்கடிக்க முடியும் உதாரணத்துக்கு நம்ம வில்கேக்ஸையே சொல்லலாம் ஏன்னா முதல்தடவையா வில்கேக்ஸ பென் மீட் பண்ணும் போது அவர் ஹீட்ப்ளாஸ்ட் ஏலியனாதான் இருப்பாரு அப்போ அவரால வில்கேக்ஸ சமாளிக்கவே முடியாது அந்த அளவுக்கு வில்கேக்ஸ் ரொம்பவே ஸ்ட்ராங்கான வில்லன் 

அதோட தண்ணீரும் இவரோட பலவீனமா இருக்கு ஐஸ்கட்டிகளை உருவாக்ககூடிய வில்லன்கள்கிட்ட இவர் தோத்து போய்ருக்காரு ஏன்னா நெருப்புக்கு எதிரா இருக்குற தண்ணிரால ஈஸியா ஹீட்ப்ளாஸ்டோட நெருப்ப அணைக்கமுடியும்

சில இடங்கள்ள பென் ஹீட்ப்ளாஸ்ட்ட யூஸ் பண்ணும் போது அவர தண்ணிய யூஸ் பண்ற வில்லன் அடி பின்னி எடுத்துருக்காங்க குறிப்பா வாட்டர் ஹசார்ட் மாதிரியான சக்தியோட இருக்குற ஏலியனா இருந்தா கண்டிப்பா ஹீட் ப்ளாஸ்ட் தோத்து போய்டுவாரு

இதே மாதிரி மத்த BEN 10 ஏலியன்கள் பத்தியும் ரொம்பவே விரிவா புதுபுது தகவல்களோட நம்ம ப்ளாக்ல அடுத்தடுத்த POST ல பாக்கலாம் உங்களுக்கு எந்த ஏலியன பத்தி பேசணும்னு நீங்க நினைக்குறீங்கன்னு கமெண்ட் பண்ணுங்க

நன்றி மக்கள்ஸ்

Post a Comment

0 Comments

Close Menu