அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்போரின் எண்ணிக்கை குறைவே பொதுவாக காமிக்ஸ் என்றொரு வார்த்தையை கூறியவுடன் பலபேர் கூறும் ஒரே பெயர் " இரும்பு கை மாயாவி " தான் அதற்கு காரணம் அந்த காமிக் கேரக்டர் பல இடங்களில் பேசப்பட்டதுதான்
உண்மையில் இரும்பு கை மாயவியை விட புகழ் பெற்ற காமிக் கதாபாத்திரங்கள் காமிக்ஸ் வரலாற்றில் உண்டு ( உண்மையில் எனக்கும் சொற்பமானவைகளே தெரியும் ) மடாஸ்தி ப்ளைஸ்,லக்கி லூக், ஃபாண்டம்,டெக்ஸ் வில்லர்,கிஸ்கோ கிட்,கழுகுமனிதன் ஜடாயு,ஜேம்ஸ்பாண்ட் 007 ஜோனா ஹெக்ஸ் போன்றவை இவைகள் பெரும்பாலும் பலருக்கு தெரிந்தவைகளே
அதேபோல் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிடும் கம்பெனிகள் என்றவுடன் உடனே ராணி முத்து காமிக்ஸ் , லயன் காமிக்ஸ், இந்திரஜால் காமிக்ஸ் , பைகோ கிளாசிக் என பட்டியல் போடலாம் வட இந்தியாவில் ஒரு சிறப்பான காமிக்ஸ் வெளியிடும் ஒரு நிறுவனம் உண்டு அதுதான் " ராஜ் காமிக்ஸ் ( RAJ COMICS ) இந்த காமிக்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கபட்ட ஆண்டு 1986 இந்நிறுவனம் பலவகையான புத்தகங்களை வெளியிட்டுள்ளது
ஆனால் இவை அனைத்து ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளவை மிகச்சில காமிக்ஸ்கள் மட்டுமே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பட்டுள்ளது ஏற்கனவே சொன்னதுபோல் வட இந்தியாவில் சூப்பர் ஹீரோ ரசிகர்கள் ஏராளமாக உண்டு அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட சூப்பர் ஹீரோக்களும் உண்டு அப்படி வட இந்தியாவின் தலைமை சூப்பர் ஹீரோக்களில் ஒருவர்தான் இந்த பதிவின் மையப்புள்ளி அவர்தான்
""நாக்ராஜ் ""
பொதுவாக இந்திய சூப்பர் ஹீரோக்களுக்கு மூன்று விதமான சக்திகள் கண்டிப்பாக இருக்கும்
1) அதீத பலம் ( ஆங்கில காமிக்ஸ்களில் சில ஹீரோக்களுக்கு இயற்கையாகவே சக்தி இருக்காது உ.ம் பேட் மேன் , அயர்ன் மேன் , ப்ளாக் பேந்தர் ,பனிஷர்
சிலருக்கு குறிப்பிட்ட ஒரு சக்தி மட்டுமே இருக்கும் உ.ம் ப்ரோபஸர் எக்ஸ், ஸ்டார்ம்,க்யூக் சில்வர் ,கேப்டன் அமெரிக்கா மேக்னீட்டோ போன்றோர் )
2) அதிவேகம் ( இந்த சக்தி இல்லாத இந்திய சூப்பர் ஹீரோக்களே கிடையாது ஆங்கிலத்தில் ப்ளாஷ் , க்யூக் சில்வர் போன்றோர்)
3) காயங்களை உடனடியாக ஆற்றும் தன்மை ( இந்த சக்தியும் இந்திய சூப்பர் ஹீரோக்கள் அனைவருக்கும் உண்டு ஆங்கிலத்தில் வுல்வரின், டெட்பூல், ஹல்க் போன்றோர் )
இந்த மூன்று சக்திகளும் இந்திய சூப்பர் ஹீரோக்களின் சொத்து
இந்திய சூப்பர் ஹீரோக்களில் ( காமிக்ஸ் ) முதன்மையானவர் மற்றும் பிரபலமானவர் தான் இந்த நாக்ராஜ் இந்து மதத்தில் பாம்புகளை தெய்வமாக வணங்கும் வழக்கம் சங்க காலத்திலிருந்தே உண்டு ஏன் நாம் வசிக்கும் இப்பூமியே ஆதி சேஷன் எனும் நாகத்தின் தலையில்தான் உள்ளது என்கிறது புராணங்கள்
அதுமட்டுமின்றி பாம்புகள் எந்த வகையிலாவது இந்து கடவுள்களில் சம்பந்தப்பட்டிருக்கும் ( முருகன் , விநாயகர், சிவன்,சக்தி,விஷ்ணு, ராகு,கேது ) அதுமட்டுமின்றி புராணங்களில் இச்சாதாரி நாகம் என அழைக்கபடும் சக்திவாய்ந்த நாகங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது
அத்துடன் நாகரத்தினம், நாகர்கள் பற்றியும் பலவிதமான தகவல்கள் நமது புராணங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது இவைகளை நான் இங்கே குறிப்பிட காரணம் இந்த சூப்பர் ஹீரோ முழுக்க முழுக்க இந்த நாகங்களை சார்ந்தவர் ஆகவே இவரை பற்றி விவரிக்கும் முன் இந்த புராணவிஷயங்களை குறிப்பிடவேண்டி உள்ளது
முதலில் இச்சாதாரி நாகங்களை பார்க்கலாம் இந்த நாகங்களை பற்றி அறிந்து கொள்ள தமிழ் படங்களில் சிலவற்றை பார்த்தால் போதும் அவை : நீயா , மனைவி ஒரு மாணிக்கம் இந்த இரண்டு படங்களிலேயே இச்சாதாரி நாகங்களை பற்றிய பல விஷயங்கள் கூறப்பட்டிருக்கும் இந்தியில் ( நான் பார்த்த ) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் படமும் இச்சாதாரி நாகத்தை பற்றிய படம் தான் நான் மேலே குறிப்பிட்ட தமிழ் படங்களில் நாகரத்தினங்களை பற்றிய குறிப்புகளும் வரும்
இச்சாதாரி நாகங்கள் என்றால் என்ன?
இச்சாதாரி நாகங்கள் உருவங்கள் மாறும் திறனுடையவை சாதாரண நாகமாக பிறக்கும் இந்நாகங்கள் 100 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து விட்டால் அவைகள் இச்சாதாரி நாகமாக சக்தி அடைந்து விடும் எனவும் அவைகளால் நினைத்த உருவங்களை அடைய முடியும் எனவும் சொல்லபடுகிறது
அத்துடன் அதன் விஷம் நாகரத்தினம் எனும் சக்திவாய்ந்த ரத்தினமாக மாறும் எனவும் சொல்லபடுகிறது ஆனால் அவை எல்லாமே வெறும் கட்டுகதைகள் நாகங்களை பற்றி மூடர்கள் கட்டிவிடும் வதந்திகள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்
இதைப்போலவே ஐந்து தலைநாகங்கள் எனும் ஐந்து தலைகளை உடைய பாம்புகள் பற்றி புராணங்களில் விவரிக்கபடுகிறது ஆனால் அவைகளும் கட்டுகதைகளே என கூறுகின்றனர் கிரேக்க புராணக்கதைகளில் ஹைட்ரா ( HYDRA ) எனப்படும் ஒன்பது தலைகளை உடைய பாம்புகள் பற்றி குறிப்புகள் இடம்பெற்றுள்ளன ( இவைகள் டிராகன்கள் எனவும் கூறப்படுகிறது காட் ஆஃப் வார் கேமின் முதல் பாகத்தில் ஹீரோ மோதுவது இந்த மிருகத்துடன் தான் ) இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஐந்து தலைபாம்புகளின் படங்களும் பொய்யானவைகளே என நிருபிக்கபட்டுள்ளது பறக்கும் பாம்புகள் மட்டுமே உண்மையான தகவல்களை கொண்டுள்ளது
ஆனால் இவைகளுக்கு இறக்கைகள் இருப்பது இல்லை இவை மிக உயரமான மரங்களில் இருந்து இன்னொரு மரங்களைக்கு இவைகளால் தாவ மட்டுமே முடியுமாம் அவற்றை அப்போது பார்க்கும் போது பறப்பது போல் தோன்றுவதால் இவைகள் பறக்கும் பாம்புகள் என அழைக்கப்படுகின்றன
பொதுவாக ஆங்கில சூப்பர் ஹீரோக்கள் ( ஹல்க் ,ஸ்பைடர்மேன் , சூப்பர் மேன் ) எப்போதும் அதிஅற்புதமாக சக்திவாய்ந்தவர்கள் தான் அவர்கள் எதிர்கொள்ளும் வில்லன்களும் அதி அற்புத சக்திவாய்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்
ஆனால் இந்திய சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் தெய்வ சக்தியினால் சூப்பர் ஹீரோக்களாக மாறியவர்கள் ( சக்திமான் , கர்மா , ஹீரோ ) அவர்களுடைய எதிரிகள் ஏற்கனவே உருவாகி இருப்பார்கள் இவர்கள் உருவாகும் வேளையில் தான் அவர்களும் தங்களது சக்திகளை கொண்டு மற்றவர்களை துன்புறுத்த ஆரம்பிப்பார்கள் அவற்றை தடுக்கவருபவர் சூப்பர் ஹீரோவாக மக்களால் ஏற்றுகொள்ளபடுவார் இதுதான் இந்திய சூப்பர் ஹீரோக்களின் வழக்கம்
சரி இதுவரை கூறிய தகவல்கள் போதும் இப்போ நேரா விஷயத்துக்கு வருகிறேன்
முதலில் யார் இந்த நாக்ராஜ் என தெரிந்து கொள்ளலாம் நாக்ராஜ் எனும் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது 1980 ல் சஞ்ஜய் குப்தா என்பவரால் பின்பு இவை பல விதமான மாற்றங்களை அடைந்து பிறகே காமிக்ஸாக வெளியானது ( மேலே நான் கொடுத்திருக்கும் புராதண தகவல்கள் சொற்பமே ஏனென்றால் நாகம் என ஆரம்பிக்கும் போது ஆதிசேஷன் ,வாசுகி,தசவதாரம், இந்திரலோகம் என பல விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டிவரும் அப்புறம் இந்த பதிவு ஒரு இதிகாச தொடர்கதைபோல ஆகிவிடும் எனவே தான் இந்த கதைக்கு தேவையான தகவல்களை மட்டுமே தந்திருக்கிறேன் மேலும் தகவல்களுக்கு இந்து புராணங்கள் அனைத்தையும் படிக்கவேண்டி வரும் ஏனென்றால் மற்ற மதங்களில் நாகங்கள் கடவுள்களாக பூஜிக்கபடுவதில்லை இது குறையாக கூறவில்லை தகவல் தேட ஒரு ஹிண்ட்டாக மட்டுமே கூறுகிறேன் )
நாக்ராஜ் உருவான கதை
நாக்ராஜ் ஒரு இளவரசன் இவரது தந்தை தக்ஷக்நகர மன்னர் தக்ஷக்ராஜ் தாய் லலிதா மன்னர் தக்ஷக்ராஜ்ற்க்கு ஒரு தம்பி உண்டு அவரது பெயர் நாகபாஷா மன்னர் தக்ஷக்ராஜ்க்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தானே அடுத்த மன்னர் என நாகபாஷா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்
தேவி லலிதாவிற்க்கு தனக்கு ஒரு குழந்தை இல்லையே எனும் வருத்தம் வாட்டி வதைக்கிறது இந்நிலையில் இவர்களது இஷ்ட தெய்வமான தேவ் கல்ஜயிடம் தனக்கு குழந்தை பாக்கியம் அளிக்குமாறு மன்றாடி கேட்டு கொள்கின்றனர்
இதனால் மனமிறங்கும் கல்ஜயி குழந்தை வரம் அருளுகிறார் இந்த விஷயம் நாகபாஷாவிற்க்கு கவலையாக அமைகிறது தேவி லலிதாவிற்க்கு குழந்தை பிறந்துவிட்டால் தனக்கு கிடைக்க வேண்டிய பதவி பறிபோய்விடும் என்பதால் அக்குழந்தையை கருவிலேயே அழிக்க முடிவு செய்கிறார்
அதனால் தேவி லலிதா பூஜிக்க செல்கையில் அவரது பூஜைகூடையில் இறந்த கீரிப்பிள்ளையை வைத்து விடுகிறார் இதில் கோபமுறும் கல்ஜயி தேவி லலிதாவினை விஷமூச்சுகாற்றினால் தாக்கி விடுகிறார் தேவி லலிதா மயக்கமுறுகிறார் அத்துடன் அவரது உடலில் விஷம் பரவி விடுகிறது
இதனால் பதட்டமைடயும் ராஜா தக்ஷக்ராஜ் கல்ஜயிடம் தேவியை காக்க வழி கூறுமாறு கேட்கிறார் அப்போது கல்ஜயி ரத்தினம் ( நாகரத்தினமாக இருக்கலாம் ஆனால் இதன் பெயர் குறிப்பிடபடவில்லை )ஒன்றினை அளித்து இந்த ரத்தினத்தால் தேவி உடலில் உள்ள விஷம் அனைத்தையும் அவளது குழந்தை உடம்பிற்க்குள் செலுத்திவிட்டாள் தேவி உயிர் பிழைத்துவிடுவாள் என கூறுகிறார்
ராஜாவும் அவ்வாறே செய்துவிட தேவி உயிர் பிழைத்துவிடுகிறாள் ஆனால் அவளது குழந்தை பிறக்கும் போதே நீல உடலுடன் இறந்தே பிறக்கிறது அதனால் மனமுடையும் ராஜா இந்து மத சம்பிரதாயப்படி குழந்தையை ஆற்றில் வீசுமாறு தனது தம்பியான நாகபாஷாவிடன் கூறுகிறார் நாகபாஷாவும் குழந்தையை ஆற்றில் விட்டு விடுகிறார்
அக்குழந்தைதான் தி கிரேட் இன்டியன் சூப்பர் ஹீரோ நாக்ராஜ்
பிறகு தனக்கே இந்த ராஜ்ஜியம் என நாகபாஷா மகிழ்ச்சியில் கல்ஜயியின் இரட்டை ராட்சதபாம்புகள் பாதுகாத்து வரும் ராஜபொக்கிஷத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்துகிறான்
ஆனால் கல்ஜயி ராஜ்ஜியம் உன் கைகளுக்கு கிடைத்திருக்கலாம் ஆனால் உண்மையான ராஜவாரிசுக்கு மட்டுமே உரியது உன்னிடம் இந்த ராஜ பொக்கிஷத்தை ஒப்படைக்க முடியாது என கூறி நாகபாஷாவின் வேண்டுகோளை நிராகரித்து விடுகிறார் இதனால் ஆத்திரமடையும் நாகபாஷா தனது வாளால் கல்ஜயின் வாலை துண்டித்து விடுகிறான்
அத்துடன் ராஜ பொக்கிஷங்களை அடைந்து விடுகிறான் ( ராஜ பொக்கிஷங்கள் என்பவை ஆலகால விஷமும் , அமிர்தமுமே இவை இரண்டும் இரண்டு கிண்ணங்களில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன இவைகளைதான் கல்ஜயி பாதுகாத்துவருகிறார் ) இவை இரண்டையும் அடைந்த நாகபாஷா அவை இரண்டையும் அருந்தி மரணமற்ற கொடியவனாக மாறிவிடுகிறார்
இதுக்கு பிறகு நாகலோகத்திறக்கு கடவுளாக நாகபாஷா மாறிவிடுகிறான் அதேநேரத்தில் நாக்ராஜ் ஆற்றில் மிதந்து கொண்டே மனிதர்கள் வாழும் இடத்திற்க்கு வராரு இப்போ நாக்ராஜோட உடல்ல இருந்த விஷத்த அவர் உள்வாங்கிக்குறாரு இதனால அவரோட தோல் பச்சை நிறமா மாறுது
இதனால நாக்ராஜ் சாவுலேர்ந்து தப்பிச்சி உயிர் பிழைச்சிடுறாரு இப்போ இவர் ஆற்றுல உயிரோட மிதந்து வர்றத பாக்குற சாதுக்கள் இவர எடுத்து வளர்க்க ஆரம்பிக்குறாங்க இப்படி பலவருஷம் கடந்து போய் நம்ம சூப்பர்ஹீரோ நாக்ராஜ் உருவாகுறாரு
இதுக்கப்புறம் நாக்ராஜ் ஒரு நியூஸ் சேனல்ல வேலைக்கு சேருறாரு ( சக்திமான் , சூப்பர்மேன் மாதிரி ) அதோட தன்னோட சக்திகளை யூஸ் பண்ணி மக்களுக்கு உதவி செய்யவும் ஆரம்பிக்குறாரு இதுதான் நம்ம நாக்ராஜ் உருவான கதை
நாக்ராஜ் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
இந்த சூப்பர் ஹீரோவிற்க்கு நான் ஏற்கனவே கூறிய சக்திகளுடன் மேலும் பல அபூர்வ சக்திகள் உண்டு அவை
* இவருக்கு வயதே ஆகாது சாகவரம் பெற்றவர்
* உருவம் மாறும் சக்தி உடையவர்
* மார்ஷல் ஆர்ட்ஸில் பலே கில்லாடி
* அதீத பலம் உடையவர்
* டெலிபதி , ஹிப்னாடிம் போன்றவை அத்துபடி
* கை மணிகட்டுகளில் பாம்புகளை வரவழைக்கும் சக்தி உடையவர்
* விஷமூச்சுகாற்றினை வெளியிடும் சக்தி உடையவர்
நாக்ராஜ் காப்பற்ற ஒரு கற்பனை நகரம் அதன் பெயர் மஹாநகர் இங்கு தான் நாக்ராஜ் சமூக விரோதிகளையும் சூப்பர் வில்லன்களையும் துவம்சம் செய்தார்
இவரது ALTER EGO டிவி சேன்னலில் வேலை செய்பவர் அவரது பெயர் மிஸ்டர் ராஜ் ( முடியல )
பொதுவாக சில காமிக்ஸில் வரும் ஹீரோக்கள் முதலில் கெட்டவர்களாகவே அறிமுகப்படுத்தபடுவார்கள் பிறகு ஏதாவது ஒரு முறையில் அவர்கள் நல்லவர்களாக மாறிவிடுவார்கள் ( இரும்பு கை மாயாவி ,மடாஸ்தி ப்ளைஸ் ) அதே போல்தான் இந்த நாக்ராஜும் ப்ரோபஸர் நாகமணி என்பவரால் மூளையை கண்ட்ரோல் செய்யும் சிப் மூலம் நாக்ராஜை சமூகவிரோத செயல்களை செய்ய உபயோகிக்கபடுகிறார்
ஒருமுறை ப்ரபோஸர் நாகமணியினால் கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க செல்கிறார் அதாவது மிகவும் பழமை வாய்ந்த சிலை ஒன்றினை எடுத்து வரச்சொல்கிறார் அங்கே ஒரு சாது அதனை காத்துவருகிறார்
அவரது பெயர் பாபா கோரக்நாத் அவர் நாக்ராஜின் சக்திகளையும் அவரை தவறாக உபயோகிக்கும் ப்ரோபஸர் நாகமணியை பற்றியும் அறிந்து நாகராஜினை ப்ரோபஸர் நாகமணியின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறார் நாக்ராஜிற்க்கு உண்மையை புரியவைத்து சமூகவிரோதிகளுக்கு எதிராகவும் தீய சக்திகளுக்கு எதிராகவும் போராட உதவுகிறார்
நாக்ராஜும் ராஜ் காமிக்ஸ்களில் மற்றொரு சூப்பர் ஹீரோவான சூப்பர் கமாண்டோ துருவாவும் ( அடுத்த பதிவின் கதாநாயகன் ) உற்ற தோழர்கள் இருவரும் சேர்ந்து பல சாகசங்கள் புரிந்துள்ளனர் அதுமட்டுமின்றி நாக்ராஜிற்க்கு பல தோழர்களும் வழிகாட்டிகளும் உண்டு
இந்த காமிக்ஸ் தொடரில் பேரலல் யுனிவர்ஸ் பற்றி குறிப்புகள் உள்ளன அத்துடன் டைம் டிராவல் குறித்த எபிசோட்களும் உண்டு
நாக்ராஜிற்க்கு நாக்தண்ட் எனும் எதிரி உண்டு இவன் ப்ரோபஸர் நாகமணியால் நாக்ராஜின் குணாதிசயங்களுடன் உருவாக்கப்பட்டவன் ஆனா இவன விட நாக்ராஜ்க்குதான் சக்தி ரொம்பவே அதிகம் அதனால நாக்ராஜால இவன ரொம்ப ஈஸியாவே தோற்கடிக்க முடியும்
அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் நம்ம இந்தியாவோட சூப்பர்ஹீரோவான நாக்ராஜோட கதை இதே மாதிரி வேற ஒரு இந்தியா சூப்பர்ஹீரோ பத்தி பார்க்கலாம்
நன்றி மக்கள்ஸ்
0 Comments
Thanks For Visiting Our Blog