Google Adsense Code

Kringl The Summoner Origin பற்றி தமிழில் ( Ben 10 Aliens - 12 )

 ஹாய் மக்கள்ஸ் 

எல்லாருக்கும் வணக்கம் இதுவரைக்கும் நம்ம Blogல பென்னோட 11 ஏலியன்ஸ் பத்தி பார்த்திருக்கோம் இது 12 வது ஏலியன் பத்தின Article இதுல Kringl The Summonerங்குற Santa Claus மாதிரியான ஒரு ஏலியனை பத்தி பார்க்கலாம்

உருவான கதை 

இந்த க்ரிங்கிள் தி சம்மனர் ( Kringl The Summoner ) ஏலியன் எந்த இனத்த சேர்ந்த ஏலியன் இல்லன்ன எந்த கிரகத்தை சேர்ந்த ஏலியன்னு இப்போ வரைக்கும் எந்த தகவலையும் பென் டென் சீரிஸ்லேர்ந்து சொல்லவே இல்ல அதுக்கு காரணம் இந்த ஏலியன் உண்மையான சான்டா கிளாஸோட டிஎன்ஏவ  காப்பி பண்ணி பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள வந்திருக்கு அதனாலதான் இந்த ஏலியன் பத்தின பல தகவல்கள் கிடைக்கல இந்த க்ரிங்கிள் தி சம்மனர் ஏலியன் இதுக்கு முன்னாடி Articleல நாம பாத்த ஜாக் தி ஃப்ரீஸ் ஏலியன் மாதிரியே கிருஸ்துமஸ் பரிசா பென்னோட ரசிகர்களுக்காக Tom Perkins அவரோட ட்விட்டர் Accountல போஸ்ட் பண்ணின ஏலியன் இந்த ஏலியன மட்டும் தான் டாம் பெர்க்கின்ஸ் ரொம்ப யோசிச்சு அப்லோட் பண்ணினதா சொல்லிருந்தாரு 

இந்த ஏலியன் கிருஸ்துமஸ் தாத்தாவை மையமா வச்சி பென்னுக்காக கொடுக்கப்பட்டதுன்னு சொல்லிருந்தேன்ல அது எப்படி பென்னுக்கு கிடைச்சதுன்னு ஒரு கதை இருக்கு அதப்பத்தி பார்க்கலாம் பென்னோட கிளாசிக் சீரிஸ்ல கிருஸ்துமஸ்ஸ மையமா வச்சி ஒரு எபிசோட் இருக்கும் அந்த எபிசோட்லதான் இந்த ஏலியன அறிமுகப்படுத்த முதல்ல ப்ளான் பண்ணிருக்காங்க அந்த எபிசோடோட கதை என்னன்னா பென் கிராண்ட்பா மேக்ஸ் க்வென் இவங்க மூனு பேரும் அவங்களோட டப்பா வண்டில போய்ட்டு இருக்கும் போது அந்த வண்டியோட ஏசி வேலை செய்யாம போகுது

அது சரி பண்றேன்னு பென் க்ரே மேட்டாரா மாறி அத இன்னும் சொதப்பி விட்டுடுறாரு அப்போதான் அவங்க இருக்குற இடத்தில ஒரு வித்தியாசமான கதவ பாக்குறாங்க அது வழியா உள்ள போய் பார்த்தா அங்க நிறைய வித்தியாசமான பொம்மைகளும் ELFங்குற குள்ள மனிதர்களும் இருக்காங்க அதோட அந்த இடம் பனியால நிரம்பி இருக்கு இப்போ பென்னும் க்வென்னும் ஜாலியா விளையாடிட்டு இருக்காங்க அப்போ க்ராண்ட்பா மேக்ஸ மிஸ்டர் ஜிங்கிள்ஸ்ங்குற ஒருத்தன் கடத்தி கொண்டுபோய் அவர்தான் சான்டா க்ளாஸ்ன்னு சொல்லிட்டு இருக்கான் 

அதோட பென்னையும் க்வென்னையும் ELFஆ மாத்த முயற்சி பண்ணிட்டு இருப்பான் அப்போ பென்னுக்கும் க்வென்னுக்கும் ELF மாதிரி இருக்குற குட்டிபையன் ஒருத்தன் உதவி பண்றான் அவன்கூட சேர்ந்து பென் க்வென் மிஸ்டர் ஜிங்கிள்ஸோட ஜிங்கிலேட்டர்ங்குற மெசின அழிக்க முயற்சி பண்றாங்க அதோட அந்த ஊருக்கு ஒரு சாபம் இருக்குன்னும் அதனால அந்த இடத்துக்கு வர்ற குட்டி பசங்க ELF மாதிரி மாறுறாங்கன்னும் அந்த பையன் சொல்றான் இப்போ பென் க்வென் அந்த ELF பையன் மூனு பேரும் ரொம்ப கஷ்டபட்டு மிஸ்டர் ஜிங்கிள்ஸ ஏமாத்தி அந்த இடத்தில இருக்குற ஜிங்கிலேட்டர்ங்குற மெஷின உடைச்சி அந்த ஊர்ல இருக்குற குழந்தைகளை காப்பாத்துறாங்க

அதோட கிருஸ்துமஸ்க்கு குழந்தைகளுக்கு பரிச கொடுத்து அந்த ஊருக்கு இருக்குற சாபத்தையும் போக்கிடுறாங்க இப்போ அந்த ஊரோட சாபம் போனதால இவங்க டைம் டிராவல் பண்ணி கடந்தகாலத்துக்கு போய்ருப்பாங்க அந்த பிரச்சினை சரி ஆகி மறுபடியும் நிகழ்காலத்துக்கே வந்திருவாங்க இதுதான் அந்த எபிசோட்ல ரொம்ப விரிவா ரொம்ப ஜாலியா சொல்லிருப்பாங்க சொல்லபோன இந்த எபிசோட்ல உண்மையான சான்டா க்ளாஸ் வர மாதிரியும் அவர் கூட சேர்ந்து வேலை செஞ்சி அந்த ஊரோட சாபத்தை போக்கினதால கிஃப்டா இந்த கிரிங்கிள் தி சம்மனர் ஏலியன் பென்னுக்கு கிடைக்கிற மாதிரி காட்டுவதுதான் முதல்ல இருந்த ப்ளான் அப்படி மட்டும் இருந்தா பாக்குறதுக்கு சூப்பரா இருந்திருக்கும் ஆனா அப்படி ஒரு விஷயம் நடக்காமலேயே போய்டுச்சு அதோட இந்த ஏலியன பென் டென் சீரிஸ்ல கொண்டு வராததுக்கு ஒரு காரணமும் இருக்கு 

அது என்னன்னா அந்த டைம்ல அதிகமான ஏலியனை காட்டுற அளவுக்கு பென் டென் சீரிஸ்க்கு புரெடக்ஷன் கம்பெனி அனுமதி கொடுக்கல அதனாலதான் இந்த ஏலியனை நம்மளால கிளாசிக் சீரிஸ்ல பாக்க முடியாம போய்டுச்சி ஆனா அதுக்கப்புறம் இந்த ஏலியனை பென் டென் சீரிஸ்ல கொண்டுவர சில டைம் ட்ரை பண்ணிருக்காங்க ஆனா அதுவும் முடியாம போனாதல இந்த ஏலியனை இப்போவரைக்கும் நம்மளால பென் டென் சீரிஸ்ல பாக்க முடியல 

அதோட இந்த ஏலியனை முதல்ல பென் டென் சீரிஸ்ல Claus ங்குற பேருலதான் கொண்டுவர ட்ரை பண்ணிருக்காங்க ( Santa Claus பேரோட ரெண்டாவது வார்த்தை  ) ஆனா மார்வெல்ல ஏற்கனவே Santa Claus ங்குற பேருல ஒரு மியூடன்ட் இருக்குறதால அதே பேருல வேணாம்னு மாத்திட்டாங்க 

இந்த ஏலியனுக்கான முதல் ப்ளான்ல இதுக்கு பயங்கரமான நிறைய சக்திகள் கொடுக்க ப்ளான் பண்ணிருக்காங்க ஆனா 2020 ல டாம் பெர்க்கின்ஸ் இந்த ஏலியனை பத்தி சொல்லும் போது இதுக்கு ELF ங்குற மாதிரியான உருவங்களை உருவாக்குற சக்தி இருக்குறதா மட்டும் சொல்லிருக்காரு


கிரிங்கிள் தி சம்மனர் பற்றிய உண்மைகள்

இந்த ஏலியனோட எட்டு அடி உயரமும் 150 KG எடையும் கொண்டது  அச்சு அசலா சான்டா க்ளாஸோட உருவமும் இந்த ஏலியனுக்கு இருக்கும் இந்த ஏலியன் மாதிரியே இன்னும் நிறைய கிரிங்கிள் ஏலியன்ஸ் இருக்காங்குற கேள்விய பென் டென் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுட்டே இருந்தாங்க 

ஆனா இந்த ஏலியன் மாதிரி ஒரே ஒரு ஏலியன் மட்டும் தான் இப்போதைக்கு பென் டென் யுனிவர்சஸ்ல இருக்குன்னு டாம் பெரிகின்ஸ் சொல்லிருக்காரு அப்படீன்னா  அந்த ஏலியன்தான் சான்டா க்ளாஸான்னு பென் டென் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அப்படியும் இருக்கலாம்ன்னு டாம் பெர்க்கின்ஸ் சொல்லிருக்காரு

இந்த கிரிங்கிள் ஏலியனுக்கு க்ளாஸ்ங்கு பேருல இருக்கும் போது எக்கச்சக்கமான மேஜிக் பவர்ஸ் இருந்திருக்கு ஆனா ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த ஏலியனால எதாச்சும் பிரச்சினைகள் வரும்ன்னு அத மாத்திட்டாங்க அதுமட்டுமல்லாம பொதுவ பென் டென் சீரிஸ்ல வரக்கூடிய எல்லா ஏலியன்ஸ்க்கும் பொம்மைகளை உருவாக்கி அதுமூலமா லாபம் சம்பாதிப்பாங்க

ஒருவேளை இந்த ஏலியனையும் பென்னோட சீரிஸ்ல காட்டுன இதுக்குன்னு பொம்மைகளை உருவாக்க முடியாது ஏன்னா ஏற்கனவே சான்டா க்ளாஸ் பொம்மைகள் உலகம் பூரா பயங்கரமா வித்துட்டு இருக்கு அதுக்கு இடையில இந்த ஏலியன் பொம்மைய கண்டிப்பா யாரும் விரும்ப மாட்டாங்கன்னு இந்த ஏலியன ரிஜெக்ட் பண்ணிட்டாங்க இதுக்கு பதிலா இந்த ஏலியனோட ரசிகர்கள் இதுக்கு படுபயங்கரமான புதுபுது டிசைன்கள் கொடுத்திருந்தாங்க அதகூட யூஸ் பண்ணிருக்கலாம் ஆனா பென் டென் டீம் அப்படி எதுவுமே பண்ணாம பென் டென் சீரிஸ ரீபூட் பண்ணி சொதப்பிட்டாங்க 


Kringl The Summonerன் சக்திகள் 

இந்த ஏலியனுக்கு ரெண்டு விதமான வெர்ஷன் இருக்குறதால க்ளாஸ்ங்குற கேரக்டரா காட்டும் போது ரொம்பவே சக்திவாய்ந்த WIZARD மாதிரி இந்த கேரக்டருக்கு பவர் கொடுத்துருக்காங்க அதாவது க்ளாஸ்ங்குற பேருல இந்த ஏலியன் இருக்கும் போது இவருக்கு க்வென் மாதிரியே மந்திர சக்திகளை உபயோகிக்க பவர் இருந்திருக்கு க்வென்னால கூட பண்ண முடியாத பல மேஜிக் வித்தைகளை இந்த ஏலியனால பண்ண முடியுமாம் 

இந்த ஏலியனால Telekinesis,Teleportation,Time Manipulation, Reality Warping,Soul Manipulation,Magic Powers, Self Duplication, Illusion Creation,Flight, Energy Blast Projection, Energy Absorption, Energy Manipulation, Telepathy,ன்னு Nigh Omnipotent லெவல்ல இந்த கேரக்டருக்கு பவர்ஸ் கொடுத்து வச்சிருக்காங்க  ஆனா இந்த கேரக்டர் ஏற்கனவே சொன்ன மார்வெலோட சான்டா க்ளாஸோட காப்பின்னு சில பிரச்சினைகள் வரும்ன்னு இந்த ஏலியனோட பேரையும் பவர்ஸயும் மொத்தமா மாத்தி கிரிங்கிள் தி சம்மனர் ன்னு வச்சிட்டாங்க

இவரோட பேருக்கு ஏத்த மாதிரியே இவரோட பவரும் இருக்கும் அதாவது சான்டா க்ளாஸ்ல சண்டை போடுற பவர்ஃபுல்லான ஏலியன் மாதிரி முதல்ல உருவாக்கிருந்தாங்க ஆனா அதால பிரச்சினைகள் வரும்ன்னு கிரிங்கிள் கேரக்டர் தன்னோட சக்தியை வச்சி ELFஸ உருவாக்குவாரு 

இந்த ELFS கிரிங்கிளுக்காக சண்டை போடும் ஆனா இந்த ELFS க்கு க்ளாஸ் அளவுக்கு சக்திகள் கிடையாது ரொம்பவே டம்மியான கேரக்டர்ஸ் இதுங்களால குறிப்பிட்ட அளவுக்கு Telepathy, Telekinesis, Teleportation, Reality Warping பண்ண முடியும் மத்தபடி வேற எந்த சக்திகளும் இதுங்களுக்கு கிடையாது

அதோட இதுங்க புகைமாதிரியான உருவத்தில இருக்குறதால இதுங்கள அழிக்குறது கொஞ்சம் கஷ்டம் அப்படி யாராவது இதுங்கள அழிச்சிட்டா இன்னொரு ELFஅ கிரிங்கிளால உருவாக்க முடியும் அந்த ELF மறுபடியும் கிரிங்கிளுக்காக சண்டை போடுமாம் மொத்ததுல ரொம்பவே பயங்கரமான சக்தி வாய்ந்த கேரக்டரா இவர அறிமுகப்படுத்த ப்ளான் பண்ணக கடைசில ரொம்பவே மொக்கையான கேரக்டரா மாத்திட்டாங்க


KRINGL THE SUMMONERன் பலவீனங்கள் 

இந்த கிரிங்கிள் ஏலியன் க்ளாங்குற பேருல இருந்த வரைக்கும் எந்த பலவீனங்களும் இவருக்கு இல்ல ஆனா கிரிங்கிளா இவர மாத்தினதும் சில பலவீனங்கள் இருக்குறதா சொல்லிருக்காங்க

அதுல இவரோட முதல் பலவீனம் Dark Magic தான் ஏன்னா கிரிங்கிள் ஒரு நல்ல மந்திரவாதி ஆனா இவருக்கு பெருசா எந்த மந்திரசக்தியும் இல்லாததால கெட்ட மந்திரசக்திய யூஸ் பண்ற ஏலியன்ஸ் கிட்ட ரொம்பவே ஈஸியா இவர் தோத்து போய்டுவாரு முக்கியமா ஹெக்ஸ் மாதிரியான பயங்கரமான மந்திரவாதிங்ககிட்ட இவரால சண்டையே போடமுடியாது ன்னு சொல்லிருகாங்க

ஆனா க்ளாஸ்ங்குற கேரக்டரால கெட்ட மந்திரசக்திய எதிர்த்து நல்லவே சண்டைபோட முடியுமாம் அடுத்ததா கிரிங்கிளோட இன்னொரு பலவீனம் நெருப்பு ரொம்பவே வெப்பமான இடங்களில இந்த கிரிங்கிளால சண்டை போடவே சக்திய பயன்படுத்தவோ முடியாது இந்த பலவீனத்தை வச்சி இவர ரொம்பவே ஈஸியா தோற்க்டிக்கலாம் 

ஆனா இந்த பலவீனம் க்ளாஸ் கிட்டயும் இல்ல ஏன்னா அவரால WEATHER MANIPULATIONம் பண்ணமுடியும் அதானால நெருப்ப வச்சி க்ளாஸ தோற்கடிக்க முயற்ச்சி பண்ணுனா அத ஈஸியாவே அவர் ஒன்னும் இல்லாம பண்ணிருவாரு ஆனா கிரிங்கிள் அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கான ஏலியன் இல்ல

இதே மாதிரி பென்னோட ரொம்ப முக்கியமான பிரச்சினை சீக்கிரமே ஆம்னிட்ரிக்ஸோட சார்ஜ் கொறஞ்சி நார்மல் பென்னா மாறுறது ஆனா இந்த க்ளாஸ் ஏலியனா அவர்‌ மாறின தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான வருஷத்துக்கு கூட அவரால அதே உருவத்துல இருக்க முடியும் கிட்டதட்ட ஏலியன் எக்ஸ் கிட்ட இருக்குற சக்தி மாதிரி இந்த ஏலியனும் இருக்கும் ஆனா கிரிங்கிள் தி சம்மனர் ஏலியன் அப்படி கிடையாது இந்த ஏலியன் மத்த ஏலியன்ஸ் மாதிரியே கொஞ்ச நேரத்தில சார்ஜ் கொறஞ்சி நார்மல் பென்ன மாத்தி விட்டுடும் 

அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த Kringl The Summoner ஏலியன் பத்தின விளக்கம் இதேமாதிரி இன்னொரு பென் டென் ஏலியனோட Articleல நாம பார்க்கலாம்

நன்றி மக்கள்ஸ்

Post a Comment

0 Comments

Close Menu