ஹாய் மக்கள்ஸ்
எல்லாருக்கும் வணக்கம் இதுவரைக்கும் நம்ம ப்ளாக்ல பென்னோட நிறைய UNSEEN ஏலியன்ஸ் பத்தி பாத்துட்டு இருக்கோம் இன்னைக்கும் நாம பென்னோட சூப்பரான ஒரு Unseen ஏலியன் பத்திதான் பார்க்க போறோம் இந்த ஏலியனோட பேர ஹிப்போபோட்டாமாஸ் இப்போ இந்த ஏலியன் பத்தி முழுசா தெரிஞ்சிக்கலாம் வாங்க
உருவான கதை
இந்த ஹிப்போபோட்டாமாஸ் ( Hippopotamass )ஏலியனும் பென்னோட Unseen ஏலியன் தான் அதனால இந்த ஏலியன நீங்க பென் டென் சீரிஸ்ல எங்கேயும் பாத்திருக்க முடியாது இந்த ஏலியனோட உண்மையான இனத்தோட பேரு ஹிப்போநோசியஸ் ( Hipponosias ) இவங்க வாழ்ந்துட்டு இருக்குற கிரகத்தோட பேரு ஹிப்போநோஸ் ( Hipponos ) இந்த கிரகமும் ரிப்ஜாவ்ஸ் ஏலியன்ஸ் வாழுற மாதிரியான தண்ணீர் மட்டுமே இருக்குற கிரகம் ஆனா அதுக்கப்புறம் இந்த ஏலியன்கள் அந்த கிரகத்தை தங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திட்டாங்க
அதனால இப்போ அந்த கிரகத்துல தண்ணீருக்கு நடுவில சில தீவுகளையும் உருவாக்கி வச்சிருக்காங்க இந்த தீவுகள் மாதிரியான இடத்துக்கு ஹிப்போபோட்டோமாஸ் ஏலியன் வந்ததுக்கு அப்புறம் தான் இதுங்களோட முழு சக்திய பத்தி இந்த ஏலியன்ஸ்க்கே புரியவந்துச்சுன்னு சொல்லிருக்காங்க
இந்த ஹிப்போபோட்டாமஸ் ஏலியன் பத்தின முதல் போட்டோவ டாம் பெர்க்கின்ஸ் போன வருஷம்தான் வெளியிட்டுருந்தாரு இவருதான் பென்னோட நிறைய Unseen ஏலியன்ஸ் பத்தின தகவல்களை பென் டென் ரசிகர்களுக்காக வெளியிட்டுட்டு இருக்காரு இந்த ஏலியனும் எப்பவும் போல Destroy All Aliens படம் முடிஞ்சதும் தான் அன்லாக் ஆகிருக்கு அதோட இந்த ஏலியனோட ப்ளான் இவங்களுக்கு ஆம்னிவெர்ஸ் சீரிஸ் ஒளிபரப்பப்பட்டுட்டு இருந்த நேரத்திலதான் வந்திருக்கு இந்த ஏலியனுக்கான ஐடியாவ உருவாக்குனது நம்ம மாட் வைன் ( Matt Wayne )
எப்ப இந்த ஏலியனுக்கான ஐடியா வந்துச்சோ அப்போலேர்ந்து இந்த ஏலியனை கொஞ்சம் கொஞ்சமா டெவலப் பண்ணிட்டேதான் இருந்திருக்காங்க ஆனா போன வருஷம் இந்த ஏலியனோய டிசைன கம்ப்ளீட் பண்ணிருக்காரு டாம் பெர்கின்ஸ் இந்த ஏலியனோட பவரும் Graviattack ஏலியனோட பவரும் கிட்டத்தட்ட ஒரு மாதிரிதான் இருக்கும் அதோட இந்த ஏலியனையும் ஆம்னிவெர்ஸ்ல கொண்டு வரலாம்ங்குற ஐடியா இருந்திருக்கு
ஆனா ஒரே மாதிரியான பவர்ல ரெண்டு ஏலியன்ஸ் வேணாம்னு இந்த ஏலியன ரிஜெக்ட் பண்ணிட்டு கிராவிட்டாக்க நமக்கு ஆம்னிவெர்ஸ்ல காட்டிருக்காங்க ஆனா இனிமே வரக்கூடிய பென் டென் சீரிஸ்ல இந்த ஏலியன காட்டுறதுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கு ஏன்னா இந்த ஏலியனோட டிசைன் நிறைய பென் டென் ரசிகர்களுக்கு ரெம்பவே பிடிச்சிருக்கு
அதனால இந்த ஏலியன பென் டென் சீரிஸ்ல கொண்டு வரதுக்கான வாய்ப்பு இருக்கு இருந்தாலும் இன்னும் இந்த கேரக்டர நல்லா டெவலப் பண்ணி குழந்தைகளுக்கான பொம்மைகள உருவாக்குறதுக்காக இந்த ஏலியனையும் டம்மி பண்றதுக்கும் நிறையவே வாய்ப்புகள் இருக்காம்
அதுவும் இந்த ஏலியன் நீர்யானைய அப்படியே காப்பியடிச்சி உருவாகிருக்குறதால குழந்தைகளை இந்த ஏலியன் கவருவது கொஞ்சம் டவுட்டான விஷயம் அப்படி குழந்தைகளுக்கு இந்த ஏலியன் பிடிக்காம போய்டுச்சுன்னா அதோட இந்த ஏலியன் பார்க்கலாம்ங்குற நம்ம ஆசை அவ்ளோதான்
அடுத்ததா இந்த ஹிப்போபோட்டாமாஸ் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்க்குள்ள வந்ததுக்கான கதைய பத்தி பார்க்கலாம் இந்த ஏலியன்ஸ் வாழுற கிரகத்தில இருக்குற ஏலியன்ஸ் தீடீர்ன்னு காணம போய்ட்டு இருக்காங்க அத கண்டுபிடிக்க ப்ளம்மர்ஸ் டீம் அந்த கிரகத்துக்கு போறாங்க அப்போ அவங்களையும் யாரோ கடத்திட்டு போய்டுறாங்க அப்போதான் நம்ம பென்னோட டீம் இந்த கிரகத்துக்கு வந்து தங்களோட வேலைய ஸ்டார்ட் பண்றாங்க
அப்போதான் யாரோ வேணும்னே இவங்க கடத்திட்டு போறாங்க் அதுவும் ஹிப்போபோட்டாமாஸ் ஏலியன்ஸ தான் குறிப்பா கடத்துறாங்கன்னு பென்னோட டீமுக்கு தெரிய வருது இந்த காரணத்துக்காக தான் பென் இந்த ஏலியனோட டிஎன்ஏவ காப்பி பண்ணி அவரும் இந்த ஏலியறாவே மாறுறாரு அப்போ நம்ம பென்ன ஒருத்தவங்க கடத்திட்டு போறாங்க அது வேற யாரும் இல்ல வ்ரீடல் ப்ரதர்ஸ்ங்குற முட்டா பசங்கதான் இப்போ பென் இந்த உண்மைய தெரிஞ்சிக்குறாரு அதனால பென் க்வென் கெவின் மூனு பேரும் இவங்கள தோற்கடிக்குறாங்க
இப்போ எதுக்காக இவங்க ஹிப்போபோட்டாமாஸ் ஏலியன்ஸ கடத்துனாங்கன்னு கேட்டா அதுக்கு அவங்க சொல்ற காரணம் இந்த ஏலியன்ஸோட பவர வச்சி ஒரு மெஷின உருவாக்குறாங்க அதவச்சி எந்த ஒரு பொருளையும் எடையே இல்லாம லேசாக்கி காத்துல பறக்க வைக்க முடியுமாம் அதுக்காகதான் கடத்துனதா சொல்றாங்க அப்போ நம்ம பென்னோட டீம் அவங்கள கைது பண்ணி ப்ளம்மர்ஸயும் அந்த ஏலியன்ஸயும் காப்பாத்துறாங்கன்னு காட்றாங்க இதுதான் இந்த ஹிப்பபோட்டாமாஸ் ஏலியன் பென்னோட ஆம்னிட்ரிக்ஸ்ல வந்ததுக்கான கதை
அதாவது பென் இந்த ஏலியனா மாறுனாத அந்த கிரகத்தில நடக்குற பிரச்சினைய தடுக்க முடியும்னு அந்த ஏலியனா மாறுன மாதிரி காட்டிருப்பாங்க ஏன்னா பென் எதுக்காக இந்த ஏலியனா மாறனும்ன்னு நமக்கு ஒரு கேள்வி வரும்ல அத தடுக்கதான் இப்படி ஒரு கதைய கொடுத்திருக்காங்க மத்தபடி பென்னுக்கு இந்த ஏலியன் மேல எந்த விதமான தொடர்பும் கிடையாது அதனாலதான் இந்த ஏலியன பென் முக்கியமான கதைகள்ள யூஸ் பண்ணவே இல்ல
ஹிப்போபோட்டாமாஸ் பற்றிய உண்மைகள்
இந்த ஹிப்பபோட்டாமாஸ் ஏலியன் நீர்யானையை மையமா வச்சி பென்னுக்காக உருவாக்கப்பட்ட ஏலியன் இந்த ஏலியன் 9 அடி உயரத்திலும் 300Kg எடையோடயும் இருக்கும் இந்த ஏலியனுக்கு நெத்தில மஞ்சள் கலர்ல கண் மாதிரியான ஒரு கல் இருக்கும் இந்த ஏலியன் எப்போ இதோட சக்திய யூஸ் பண்ணுதோ அப்போலாம் இந்த கல்லும் ஜொலிக்கும்ன்னு காட்டி இருக்காங்க அதோட இந்த ஏலியன் தன்னோட சக்திய யூஸ் பண்ணும் போது மஞ்சள் கலர்ல இதோட கைய சுத்தி ஒரு AURA மாதிரி வெளி வரும்
இந்த ஹிப்போபோட்டாமாஸ் ஏலியன் நீர்யானை மாதிரியான தோற்றத்துல இருந்தாலும் இதோட தோல் நீல நிறத்தில இருக்கும் அதோட இதோட தோலை கிழிக்குறது ரொம்பவே கஷ்டமான விஷயமும் கூட இந்த ஏலியனுக்கு எடை அதிகமா இருக்குறதால இதால வேகமா ஓடவோ நகரவோ முடியாது ஆனா இதோட சக்தி ஒரு பொருளோட அடர்த்தியையும் எடையையும் குறைக்குறதுங்குறதால அதவச்சி இதால ரொம்ப வேகமா ஓடவும் முடியும் பறக்கவும் முடியும்
இந்த பவர வச்சிதான் வ்ரீடல் ப்ரதர்ஸ பென் ஈஸியா தோற்கடிச்சி பிடிச்சிருப்பாரு ஒருவேளை இந்த பவர் அவர்கிட்ட இல்லாம போய்ருந்த கண்டிப்பா பென் தோத்துதான் போய்ருப்பாரு அந்த அளவுக்கு இந்த ஏலியனோட எடை அதிகமா இருக்கும்
Hippopotamass ன் சக்திகள்
இந்த ஹிப்போபோட்டாமாஸ் ஏலியனுக்கு இருக்குற முக்கியமான சக்தி இத சுத்தி இருக்குற பொருட்களோட எடையையும் அடர்த்தியையும் குறைக்கிறதுதான் அதனால இந்த பவர வச்சி இதோட எதிரிகளை இந்த ஏலியன் ஈஸியா தோற்கடிச்சிரும் உதாரணத்துக்கு நம்ம வில்கேக்ஸ் இந்த ஏலியன்கூட சண்டை போட வந்த இந்த ஏலியன் தன்ன சுத்தி இருக்குற பொருட்களோட அடர்த்திய முழுசா குறைச்சிட்டா அவரால நகர முடியாது அந்தரத்தில மிதக்க மட்டும் தான் முடியும் ஆனா இந்த ஏலியனால அந்தரத்தில மிதந்துகிட்டே சண்டை போட முடியும் அதனால இந்த ஏலியன் நினைச்சா நம்ம வில்கேக்ஸயே தோற்கடிக்க முடியும் அவளோ பவர் இந்த ஏலியன்கிட்ட இருக்கு
அதோட இந்த ஏலியனுக்கு ஸ்ட்ரெங்த் ரொம்பவே அதிகம் கிட்டத்தட்ட ஃபோர் ஆர்ம்ஸ்க்கு இணையான பலம் இந்த ஏலியன்கிட்டயும் இருக்கும் இதால தன்னோட பலத்த வச்சி ஒரு குத்துல ஒரு மலையவே ரெண்டா உடைக்க முடியும் ஆனா வேகம்தான் கொஞ்சம் கம்மியா இருக்கும் அதையும் அடர்த்தி குறைக்குற பவரவச்சி இதால சரி பண்ணிக்க முடியும்
அதுமட்டுமல்லாம இந்த ஏலியனால இதோட சக்தியவச்சி பறக்கவும் முடியும் இததான் மேலயும் சொல்லிருக்கேன் ஆனா இந்த பவருக்கு ஒரு லிமிட் இருக்கு ஒரு குறிப்பிட்ட தூரம் வரைக்கும்தான் இந்த ஏலியனால பறக்கு முடியும் இந்த பவர வச்சி விண்வெளிக்கெல்லாம் போக முடியாது
அடுத்தாதா இந்த ஏலியனோட தோலை கிழிக்குறதுக்கு டைம்ன்ட் ஹெட்டோல கிரிஸ்டல் மாதிரியான ரொம்பவே ஷார்ப்பான பொருட்களால மட்டும்தான் முடியும் மத்தபடி நெருப்போ இல்லனா சாதாரண ஆயுதங்க இதோட தோல ஒன்னுமே பண்ண முடியாது இதனால எவ்ளோ பவர்ஃபுல்லான அட்டாக்க இருந்தாலும் இந்த ஏலியனோட உடம்புக்கு எந்த பாதிப்பையும் கொடுக்க முடியாது கிட்டத்தட்ட பென் டென் ஆம்னிவெர்ஸ்ல வர்ற WORSTங்குற ஏலியனோட பவர் இந்த ஹிப்போபோட்டாமாஸ்க்கும் இருக்குன்னு சொல்லலாம்
இந்த ஏலியனோட வாயும் நீர்யானையோட வாய் மாதிரியேதான் இருக்கும் அதனால ரொம்பவே பலமா இந்த ஏலியனால கடிக்கவும் முடியும் அதுலேர்ந்து தப்பிக்குறது ரொம்பவே கஷ்டமான விஷயம் ஒரு தடவை இதோட வாயால ஒரு பொருளை கடிச்சி பிடிச்சிட்டா அதுலேர்ந்து தப்பிச்சிக்க ரொம்பவே கஷ்டமா இருக்குமாம்
Hippopotamassன் பலவீனங்கள்
இந்த ஏலியனுக்கு மூனு பலவீனங்கள் இருக்குன்னு இதுவரைக்கும் கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க அதுல முதல் பலவீனம் Ghostfreak ,Toepick மாதிரி பார்க்கவே பயங்கரமா இருக்குற ஏலியன்ஸ்ஸ பாத்த இந்த ஏலியன் ரொம்பவே பயப்படுமாம் ஏன்னா இந்த ஏலியனோட இனம் ரொம்பவே பயந்த சுபாவம் இருக்குற ஏலியன்ஸ் அதானல இதுங்கள பயமுறுத்துறது மூலமா ஈஸியா தோற்கடிக்கலாம்
இரண்டாவது பலவீனம் இதோட கைகளை கட்டி போட்டுட்டாலோ இல்லன்னா இதோட கைகளை டைமன் ஹெட்டோட கிரிஸ்டல் மாதிரியான பொருள வச்சி முழுசா மூடிட்டாலே இதால தன்னோட பவர யூஸ் பண்ண முடியாது அப்போவும் இந்த ஏலியனை ஈஸியா தோற்கடிக்க முடியும்
மூன்றாவது பலவீனம் இந்த ஏலியனோட நெத்தில இருக்குற கல்லும் இதோட சக்திக்கான ஒரு காரணம் அத யாராவது உடைச்சிட்டா இருந்த ஏலியனை இதோட சக்திய யூஸ் பண்ண விடாம தடுத்து தோற்கடிக்க முடியும் ஆனா அந்த கல்லுக்கும் உயிர் இருக்கும் அதனால திரும்பவும் அந்த கல் இந்த ஏலியனோட நெத்தில முளைச்சிரும்
அப்போ மறுபடியும் இந்த ஏலியனால தன்னோட பவர யூஸ் பண்ணிக்க முடியும்ன்னு சொல்லிருக்காங்க இந்த மாதிரி சின்ன சின்ன பலவீனங்கள் மட்டும் தான் இந்த ஏலியனுக்கு இருக்கு இதவச்சி மட்டும்தான் இந்த ஹிப்போபோட்டாமாஸ்ஸ தோற்கடிக்க முடியும் ஆனா அதுக்குள்ள இந்த ஏலியன் தன்னோட சக்தியவச்சி ஈஸியா தன்னோட எதிரிகளை தோற்கடிச்சிடுமாம் அதனால கிரவிட்டாக் ஏலியன விட இந்த ஏலியன்தான் ரொம்பவே பவர்ஃபுல்ன்னு சொல்லிருக்காரு டாம் பெர்க்கின்ஸ்
அவ்ளோதான் மக்கள்ஸ் இதுதான் இந்த ஹிப்போபோட்டாமாஸ் ஏலியன் பத்தின முழு விளக்கம் இந்த ஏலியன் பத்தி உங்களுக்கு என்ன தோணுதோ அத மறக்காம கமெண்ட் பண்ணுங்க இதே மாதிரி பென்னோட அடுத்த ஏலியன் பத்தின ஆர்டிகிளோட வரேன்
நன்றி மக்கள்ஸ்
Copyright (c) 2021 Tamil Cartoons Fandom All Right Reseved
0 Comments
Thanks For Visiting Our Blog